சென்னை திருமங்கலம் மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து 10 கிமீ சுற்றளவில் பயணம் செய்ய எலக்ட்ரிக் ஆட்டோ சேவை தொடங்கப்பட்டுள்ளது.
ஒரு கிலோ மீட்டருக்கு 25 ரூபாய் தான் கட்டணம் தானம். இதேபோல் மினி பஸ் சேவையும் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
சென்னை மெட்ரோ ரயில் சேவை விம்கோ நகர் -விமான நிலையம், பரங்கி மலை- கோயம்பேடு-திருமங்கலம்- சென்ட்ரல் என இரண்டு வழித்தடங்களில் இயக்கப்படுகிறது.
இதையடுத்து மாதவரத்தில் இருந்து சிப்காட் வரை 3-வது வழித்தடமும் அமைக்கப்பட்டு வருகிறது.
சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் (CMRL) பல வசதிகளை செய்து வருகிறது. சென்னை மெட்ரோ ரயிலில் தினசரி பயணிப்போர் பாஸ் எடுத்து பயணிக்கலாம். அப்படி பயணித்தால் டிக்கெட்டில் சலுகை வழங்கப்படுகிறது. இதேபோல் பார்க்கிங் சலுகையும் வழங்கப்படுகிறது.
இந்நிலையில் சென்னை திருமங்கலம் மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து 10 கிமீ சுற்றளவில் பயணம் செய்ய மின்சார ஆட்டோ சேவை தொடங்கப்பட்டுள்ளது. ஒரு கிலோ மீட்டருக்கு 25 ரூபாய் தான் கட்டணம்.
சென்னை மெட்ரோ நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
எலக்ட்ரிக் ஆட்டோ, மினி பஸ் சேவை தொடங்கப்பட்டுள்ளது. திருமங்கலம் மெட்ரோ இரயில் நிலையத்தைப் பயன்படுத்தும் பயணிகளுக்காக இயக்கப்படுகிறது.
திருமங்கலம் முதல் கொரட்டூர் நீர் கால்வாய் சாலை, அண்ணாநகர் மேற்கு டிப்போ, பாடி சரவணா ஸ்டோர்ஸ், பக்தவத்சலம் நினைவு மகளிர் கல்லூரி, கொரட்டூர் பேருந்து நிலையம், கொரட்டூர் ரயில் நிலையம் போன்ற பகுதிகளை உள்ளடக்கிய மினிபஸ் சேவையை வழங்குகிறது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust