திருவள்ளூர் மாவட்டத்தில் பூண்டி அருகே உள்ள ஆசிரமத்தில் 20 வயது கல்லூரி மாணவி பூச்சிமருந்து குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே உள்ள வெள்ளாத்து கோட்டை கிராமம். இங்கு ஓடை ஓரம் அமைந்துள்ள கோவிலில் வைத்து முனுசாமி என்பவர் அருள்வாக்கு கூறிவருகிறார்.
தாமரைபாக்கத்தை அடுத்த கொமக்கமேடு கிராமத்தை சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பவரின் மகள் ஹேமமாலினி (வயது 20). இவர் தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பிகாம் படித்து வருகிறார். கடந்த 18 மாதங்களாக ஆவி சேட்டையால் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் உறவினர்களால் அந்த கோவிலுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
இவருக்கு ஆசிரமத்தில் வைத்து சிகிச்சை கொடுப்பதாக முனுசாமி கூறியதாக தெரிகிறது. இதனால் கடந்த ஓராண்டுக்கும் மேல் அந்த மாணவி ஆசிரமத்தில் தங்கி வந்துள்ளார்.
இரண்டு நாட்களுக்கு முன்னர் ஹேமாமாலினி தனது பெரியம்மா இந்திராணி மற்றும் தங்கையுடன் கோவிலுக்குச் சென்று பூஜை செய்துள்ளார். இரவு பூஜை முடிந்து நள்ளிரவு பூசாரி முனுசாமியின் மனைவியுடன் தூங்கச் செல்வதற்கு முன்பு ஹேமமாலினிக்கு தேங்காய் பூசணிக்காய் எலுமிச்சம்பழம் சுற்றி திருஷ்டி கழித்து உள்ளனர். பின்னர் இரவு ஹேமமாலினி உடன் வந்த அவரது தங்கை உள்ளிட்ட நான்கு பெண்கள் கோவில் பூசாரி முனுசாமிக்கு இட்லி தோசை சமைத்து கொடுத்ததுடன் பரிமாறி பணிவிடை செய்து உள்ளனர்.
பூசாரி முனுசாமியின் அறையில் ஹேமாமாலினி மற்றும் அவரது தங்கை படுத்து தூங்கி உள்ளனர். இவர்களுடன் வந்த பெரியம்மா இந்திராணி அங்குள்ள அம்மன் கோவில் மண்டபத்தில் கோவிலுக்கு வந்திருந்தவர்களுடன் படுத்து தூங்கிக் கொண்டிருந்தார். இந்நிலையில் அதிகாலை ஹேமமாலினி திடீரென விஷம் குடித்து வாந்தி எடுத்து மயங்கி பேச்சு மூச்சின்றி உயிருக்கு போராடிய நிலையில் இருந்துள்ளார்.
அங்கு சென்ற பிறகுதான் தெரிந்தது அவர் பூச்சிமருந்து குடித்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி அந்த மாணவி உயிரிழந்துவிட்டார். இதையடுத்து மாணவியின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது.