Thirupulivanam: காஞ்சிபுரத்தில் அமைந்திருக்கும் இந்த சிவன் கோவிலின் வரலாறு என்ன?

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் கிராமத்தில் அமைந்திருக்கிறது திருப்புலிவனம் கோவில். இங்கு வியாக்ரபுரீஸ்வரன் என்ற பெயரில் சிவபெருமான் மக்களுக்கு காட்சியளிக்கிறார். வியாகபுரீஸ்வரனின் உண்மையான பெயர், திருப்புலிவனமுடைய நாயனார்.
Thirupulivanam: காஞ்சிபுரத்தில் அமைந்திருக்கும் இந்த சிவன் கோவிலின் வரலாறு என்ன?
Thirupulivanam: காஞ்சிபுரத்தில் அமைந்திருக்கும் இந்த சிவன் கோவிலின் வரலாறு என்ன?Twitter
Published on

தமிழ் மண்ணை ஆண்ட மன்னர் பரம்பரைகளில் பல்லவர்களும், சோழர்களும் கொஞ்சம் அதிக வரலாற்று முக்கியத்துவத்தை பெற்றிருக்கிறார்கள் எனலாம். அவர்களின் காலத்தில் கலைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.

பல்லவர் காலத்தில் உருவாக்கப்பட்ட மகாபலிபுரத்தின் அழகை வர்ணிக்க நம்மிடம் வார்த்தைகள் இல்லை.

பல்லவர் காலத்தில் இருந்த கலைகளின் மீதான ஆர்வம், சோழர் காலத்திலும் பாதிப்பை ஏற்படுத்தியது எனலாம். அதன் ஒரு சான்றாகவே இருக்கிறது இந்த கதை.

காஞ்சிபுரம் மாவட்டம் உதிரமேரூர் கிராமத்தில் அமைந்திருக்கிறது திருப்புலிவனம் கோவில். இங்கு வியாக்ரபுரீஸ்வரன் என்ற பெயரில் சிவபெருமான் மக்களுக்கு காட்சியளிக்கிறார். வியாகபுரீஸ்வரனின் உண்மையான பெயர், திருப்புலிவனமுடைய நாயனார்

இந்த கோவில் பல்லவர்களின் ஆட்சி காலத்தில் நந்திவர்மன் என்ற மன்னனால் கட்டப்பட்டதாக கல்வெட்டுகள் குறிக்கின்றன. ஆனால் அந்த சமயத்தில் இந்த கோவிலை செங்கற்களால் கட்டினர் எனவும், ஆண்டுகள் கழித்து முதலாம் குலோத்துங்க சோழ மன்னனின் காலத்தில், கிரானைட் கொண்டு மறு சீரமைப்பு செய்தனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த வியாகபுரீஸ்வரன் சுயம்புவாக தோன்றிய லிங்கமாகும். கதைகளின்படி, வியாக்ரபாதா என்ற முனிவரும் அவரது மனைவி பதஞ்சலியும் இங்கு சிவனுக்கு சேவைகள் செய்து வந்தனர்.

ஆனால் அவரால் தினமும் சிவனுக்கு புதிய பூக்கள் வழங்க முடியவில்லை என்ற கவலை இருந்தது. முனிவரின் முன் தோன்றிய சிவபெருமான், அவரின் மனக்கவலைக்கான காரணத்தை கேட்டார்.

முனிவரும் தெரிவிக்க சிவன் அவருக்கு புலிகளுடைய கால்களை வழங்கினார்!

மகிழ்ச்சியடைந்த முனிவர் சிவ லிங்கத்தை கட்டியணைத்தபோது காயங்கள் ஏற்பட்டுள்ளது.

இந்த தழும்புகளை இன்றும் நாம் லிங்கத்தின் மேல் காணலாம். அந்த காயத்தின் மீது சந்தனம் பூசுகிறார்கள்.

இதனாலேயே லிங்கத்தினை வியாக்ரபுரீஸ்வரன் என்று அழைக்கின்றனர் (சமஸ்கிருதத்தில் வியாக்ரா என்ற புலி என பொருள்படுகிறது).

இந்த லிங்கத்தின் தலையில் ஒரு கட்டி இருக்கிறது. கோவில் பூசாரி ஒருவர் தன் உயிரை காப்பாற்றிக்கொள்ள மன்னரிடம் லிங்கத்தின் மேல் பகுதியில் கட்டி இருப்பதாக கூறியதால், இந்த உருவம் தோன்றியது என்றும் கதைகள் கூறுகின்றனர்.

Thirupulivanam: காஞ்சிபுரத்தில் அமைந்திருக்கும் இந்த சிவன் கோவிலின் வரலாறு என்ன?
பீகார் மகாபோதி கோவில்: நூற்றாண்டுகள் பழமையான இந்திய பாரம்பரிய தலத்தின் சிறப்புகள் என்ன?

இந்த திருப்புலிவனம் கோவிலில் மூன்று அடுக்கு கோபுரம் இருக்கிறது. கோபுரத்துக்கு வெளியில் ஒரு நந்தி மண்டம, பலி பீடம் மற்றும் கோவில் தெப்பக்குளம் இருக்கிறது.

இந்த கோபுரத்துக்கு பின்னால் ஒரு பெரிய மண்டபமும் மண்டபத்தின் அருகில் சக்கரங்களுடன் கூடிய ஒரு தேர் வடிவம் இருக்கிறது. இது சோழர்களின் காலத்தில் கட்டப்பட்டது. இந்த மண்டபத்தில் அமைந்திருக்கும் படிக்கட்டுகள் கோவிலில் உட்புறத்துக்கு நம்மை அழைத்துச் செல்கிறது. அங்கு மற்றுமொரு நந்தி மண்டபமும் ஒரு பலி பீடமும் இருக்கிறது.

இந்த கோவிலின் மற்றுமொரு சிறப்பு, சிவலிங்கத்தின் பின்னால் தான் சூரியனின் கதிர்கள் விழுகிறது.

Thirupulivanam: காஞ்சிபுரத்தில் அமைந்திருக்கும் இந்த சிவன் கோவிலின் வரலாறு என்ன?
பேய்களால் கட்டப்பட்ட இந்திய சிவன் கோவில் குறித்து தெரியுமா?எங்கு இருக்கிறது?

இந்த கோவிலில் சோழர்கள் எழுப்பிய மற்ற கோவில்களில் இருப்பது போன்ற சிறிய சிறிய சிற்பங்களை நாம் காணமுடிகிறது.

இவை பெரும்பாலும் சோழ மன்னர்கள் அல்லது அவர்களின் காலத்தில் இருந்த சிற்றரசர்களின் சிலைகள் தான்.

இந்த கோவிலில் விஷ்ணு, நரசிம்மர் அனுமன் போன்ற மற்ற கடவுள்களின் சன்னிதிகளையும் நாம் காணலாம். அர்த்தனாரீஸ்வரர் கோலத்தில் தக்‌ஷினாமூர்த்தியின் சிலையும் இங்கு இருக்கிறது.

இந்த தக்‌ஷினாமூர்த்தியை வழிபட்டால், பிரிவின் விளிம்பில் இருக்கும் தம்பதிகள் ஒன்று சேர்ந்துவிடுவார்கள் என்பது ஐதீகம்.

Thirupulivanam: காஞ்சிபுரத்தில் அமைந்திருக்கும் இந்த சிவன் கோவிலின் வரலாறு என்ன?
8ம் நூற்றாண்டில் தொலைந்து போன கோவில்; தேடி கண்டுபிடித்த ASI - மீண்டும் மாயமானது எப்படி?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com