பிரியாணியை விரும்பாதவர்கள் இல்லை. எந்த சந்தர்ப்பத்திலும், வேண்டாம் எனச் சொல்ல மனம் வராத ஒரு உணவு.
பிரியாணிக் கடை தொடங்குபவர்கள், கடையை பிரபலப்படுத்த முதல் நாள் சலுகையாக இலவச பிரியாணி வழங்குவர். அவ்வப்போது ஏதாவது ஒரு முக்கிய நிகழ்வுக்கு, போட்டிகள் அறிவித்து, வெல்பவர்களுக்கு இலவச பிரியாணி, விலையில் சலுகைகள் கொடுப்பார்கள்.
அந்த வகையில், திருவள்ளூரில் உள்ள பிரியாணி உணவகம் ஒன்றில், ஒரு வித்தியாசமான போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது
தைத்திருநாள் பொங்கல், நான்கு நாட்களுக்கு கொண்டாடப்படுகிறது. போகி, பொங்கல், மாட்டுப் பொங்கல் மற்றும் திருவள்ளுவர் தினம்.
நான்காம் நாளான, திருவள்ளுவர் தினத்தை ஒட்டி தான், திருவள்ளூரில் உள்ள உணவகம் இந்த ஆஃபரை அறிவித்திருக்கிறது. திருவள்ளூர் அருகே மணவாள நகரில் உள்ள உணவகம் ஒன்றில், திருக்குறள் போட்டி நடந்தது.
பிழையின்றி, சரளமாக திருக்குறளை ஒப்பிக்கும் சிறுவர் சிறுமியருக்கு பிரியாணி டோக்கன் வழங்கப்பட்டது.
உணவக உரிமையாளர்கள் எதிர்பார்த்ததை விட அதிக போட்டியாளர்கள் கலந்துகொண்டதால், வெற்றிப்பெற்ற சிறுவர் சிறுமியர் சிலருக்கு, இரவு நேரத்திற்கு டோக்கன் வழங்கப்பட்டன.
இந்த காலத்து இளைஞர்கள், அதிக நேரத்தை செல்ஃபோன்களில் செலவிடுவதாகவும், அதனை குறைக்கவே உணவகம் இந்த முயற்சியை மேற்கொண்டதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust