Morning News Today : செஸ் ஒலிம்பியாட் போட்டி: பிரதமருடன் தமிழ்நாடு குழு இன்று சந்திப்பு

ஜூலை 28 ஆம் தேதி துவங்கவிருக்கும் செஸ் ஒலிம்பியாட் போட்டியின் துவக்க விழாவில் பிரதமர் மோடி பங்கேற்கவுள்ளதை அடுத்து, தமிழ்நாடு குழு இன்று அவரை சந்தித்தனர்
Modi
ModiTwitter
Published on

செஸ் ஒலிம்பியாட் போட்டி: பிரதமர் மோடியுடன் தமிழ்நாடு குழு இன்று சந்திப்பு

வருகிற 28-ம் தேதி முதல் ஆகஸ்ட் 10-ம் தேதி சர்வதேச அளவில் 44 -வது 'செஸ் ஒலிம்பியாட்' சதுரங்கப் போட்டிகள் மாமல்லபுரத்தில் நடைபெறுகிறது. 188 நாடுகளை சேர்ந்த 2,500-க்கும் மேற்பட்ட சதுரங்க வீரர்கள் பங்கேற்று விளையாட உள்ளனர். சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் நடக்கும் இதன் தொடக்க விழாவில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார்.

இதற்காக, பிரதமர் மோடியுடன் தமிழ்நாடு குழு இன்று காலை 11 மணிக்கு சந்தித்தனர். செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழா அழைப்பிதழை திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.ஆர்.பாலு, கனிமொழி, அமைச்சர் மெய்யநாதன், தலைமை செயலர் இறையன்பு ஆகியோர் வழங்கினர்.

கள்ளக்குறிச்சி மாணவி வழக்கு - சிபிசிஐடிக்கு மாற்றம்

கள்ளக்குறிச்சியில் பிளஸ் 2 மாணவி மரணம் காரணமாக, நேற்று முன்தினம் நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதில் மாணவி படித்த தனியார் பள்ளி சூறையாடப்பட்டு, அங்கிருந்த வாகனங்கள் தீ வைத்துக் கொளுத்தப்பட்டது.

இந்தப் போராட்டத்தால் அப்பகுதி முழுவதும் பதற்றமான சூழல் நீடித்து வருகிறது. கலவரம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி பலரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், மாணவியின் மரண வழக்கு விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது.

Sylendra Babu
Sylendra Babutwitter
Modi
கள்ளக்குறிச்சி மாணவி மரணம் : பஸ்களுக்கு தீ வைப்பு; 144 தடை உத்தரவு - விரிவான தகவல்கள்

இந்திய - சீன எல்லையில் மாயமான 19 தொழிலாளர்கள்

அருணாசல பிரதேசத்தின் குருங் குமி மாவட்டத்தில் இந்திய-சீன எல்லையை ஒட்டிய பகுதியில் தொழிலாளர்கள் பலர் சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர். அசாமை சேர்ந்த தொழிலாளர்கள் சிலர் பக்ரீத் பண்டிகையைக் கொண்டாட விடுமுறை தரும்படி பெங்கியா பத்தோ என்ற ஒப்பந்ததாரரிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.

அனுமதி தர மறுத்ததால், யாருக்கும் தெரியாமல் கொண்டாட்டத்தில் ஈடுபட, வன பகுதி வழியே சென்றுள்ளனர். அடர்வன பகுதியில் சென்ற அவர்கள் பின்னர் காணவில்லை. இதுகுறித்து துணை ஆணையாளர் பெங்கியா நிகீ கூறும்போது, "கடந்த வாரம் 19 தொழிலாளர்கள் காட்டுக்குள் காணாமல் போயிருக்கின்றனர். தொழிலாளர்களில் ஒருவரின் உடல் பக்கத்தில் உள்ள ஆற்றில் கண்டெடுக்கப்பட்டுள்ளது" என்றார்.

India - China
India - ChinaTwitter

உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல்: இந்திய வீரருக்குத் தங்கம்

தென்கொரியாவில் உள்ள சாங்வான் நகரில் உலகக் கோப்பை துப்பாக்கி சுடும் போட்டி நடந்து வருகிறது. ஆண்களுக்கான 'ஸ்கீட்' போட்டியின் உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த 46 வயதான மைராஜ் அகமது கான் தங்கப்பதக்கம் வென்றிருக்கிறார். உலகக் கோப்பை போட்டியில் 'ஸ்கீட்' பிரிவில் தங்கப்பதக்கம் கைப்பற்றிய முதல் இந்திய வீரர் என்ற பெருமையைப் பெற்றிருக்கிறார்.

பெண்களுக்கான 50 மீட்டர் ரைபிள் (3 நிலை) போட்டியில் வெண்கலப்பதக்கத்துக்கான போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்திய அணி வெண்கலப்பதக்கத்தை வென்றது. இந்த போட்டியில் இந்தியா இதுவரை 5 தங்கம், 5 வெள்ளி, 3 வெண்கலம் என 13 பதக்கங்களுடன் முதலிடத்தில் நீடிக்கிறது.

Mairaj Ahmad Khan
Mairaj Ahmad Khan டிவிட்டர்
Modi
தோனி, கோலியை வீழ்த்திய உலகின் டாப் 10 பணக்கார விளையாட்டு வீரர்கள் இவர்கள்தான்!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com