நீலகிரி : அழிந்துவரும் தோடர் எறுமைகள்; வேதனையில் பழங்குடி மக்கள் - காரணம் என்ன?
நீலகிரி : அழிந்துவரும் தோடர் எறுமைகள்; வேதனையில் பழங்குடி மக்கள் - காரணம் என்ன?Twitter

நீலகிரி : அழிந்துவரும் தோடர் எறுமைகள்; வேதனையில் பழங்குடி மக்கள் - காரணம் என்ன?

தோடர் மக்களின் அடையாளமான எறுமைகள் இந்தியாவில் அழிந்துவரும் கால்நடைகள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. "எறுமைகள் இல்லாவிட்டால் தங்களது அடையாளங்களை இழந்துவிடுவோம்" என அஞ்சுகின்றனர் மக்கள்.

நீலகிரி மலைப்பகுதியில் நீண்ட நெடுங்காலமாக வசித்துவரும் பூர்வீக பழங்குடி மக்கள் தோடர்கள். சைவம் மட்டுமே சாப்பிட்டு இயற்கையை வழிபட்டு வரும் இந்த மக்கள், சாம்பல் நிற வளைந்த நீளமான கொம்புகளை உடைய எறுமையை புனித விலங்காக கருதுகின்றனர்.

இந்த எறுமைகளின் எண்ணிக்கை குறைந்துவிட்டதால் அவர்களது இனத்தின் அழிவும் ஆரம்பித்துவிட்டதாக கவலை கொள்கின்றனர் தோடர் மக்கள்.

தோடர் மக்களின் அடையாளமான எறுமைகள் இந்தியாவில் அழிந்துவரும் கால்நடைகள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. அரசு இந்த எருமைகளின் கருமுட்டைகள் மற்றும் விந்தணுக்களை உறைய வைத்துப் பாதுகாத்து வருகிறது.

தோடர் இன கல்யாணத்தில் இந்த எறுமையை சீதனமாக வழங்கும் பழக்கம் இருந்துவருகிறது. எறுமைகள் மறைந்து வருவதனால் இந்த பழக்கமும் மறைந்துவிடுமே என கவலைத் தெரிவிக்கின்றனர்.

ஒரு பெண் எத்தனை எறுமைகளை புகுந்த வீட்டுக்கு கொண்டுவருகிறாளோ அந்த அளவு செல்வம் சேரும் என்பது நம்பிக்கை. பெண்கள் கொண்டுவரும் எறுமையின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது.

பெண்களைப் பொறுத்தவரையில் திருமணத்தின் போது கொடுக்கப்படும் தங்கத்தை விட எறுமையை பெரிதாக எண்ணுகின்றனர்.

தோடர் எறுமைகளை நாட்டில் வேறெந்த பகுதியிலும் காண முடியாது. நீலகிரி மலைகளைத் தவிர வேறு இடங்களில் இந்த எறுமைகள் வாழ்வதற்கான சூழல் இல்லை.

தோடர் மக்களின் வாழ்க்கையில் எறுமைகள் முக்கியப்பங்காற்றுகின்றன. பிறப்பு முதல் இறப்பு வரை ஒவ்வொரு சடங்கிலும் எறுமைகளை முன்னிருத்துகின்றனர். கோவிலில் எறுமைகளுக்கான பாடல்களைப் பாடுவது முதல் எறுமை நெய்யில் விளக்கு போடுவது வரை ஆன்மிக ரீதியிலும் எறுமைகள் முக்கியத்துவம் பெறுகின்றன.

எறுமைகளின் எண்ணிக்கை கடந்த 20 ஆண்டுகளில் வெகுவாக குறைந்துள்ளது. தமிழ்நாடு அரசின் கால்நடை அமைச்சத்தின் புள்ளிவிவரங்கள், "1994ல் தோடர் இன எருமைகள், 3,531ஆக இருந்தன. அந்த எண்ணிக்கை, 2023ல் வெறும் 1,600ஆக குறைந்துள்ளது" எனக் குறிப்பிடுகின்றன.

இது தொடர்பாக பிபிசியில் பேசிய தோடர் இன செயற்பாட்டாளர் வாசமல்லி, "நீலகிரி மலைப்பகுதியில் உள்ள புல்வெளிகள் ஆக்கிரமிக்கப்பட்டதுதான் எறுமைகள் குறைந்ததற்கு முக்கிய காரணம் என்று கூறியிருக்கிறார்.

எறுமைகள் தானாக மேய்ந்துவிட்டு வீடுதிரும்பும். எறுமை மேய்க்க செல்லும் குழந்தைகள் புல்வெளிகளில் விளையாடிவிட்டு வீடுதிரும்புவர். ஆனால் இப்போது கேளிக்கை விடுதிகள் உள்ளிட்ட கட்டடங்கள் அதிகரித்துவிட்டன.

மேய்ச்சலுக்கு தேவையான புல் இல்லாததால் எறுமைகளுக்கு உணவுப் பற்றாக்குறை வந்துள்ளது. நீலகிரி மலை சுற்றுலாபயணிகளுக்கான இடமாக மாறிவிட்டதனால் பழங்குடி மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக வாசமல்லி கூறியிருக்கிறார்.

நீலகிரி : அழிந்துவரும் தோடர் எறுமைகள்; வேதனையில் பழங்குடி மக்கள் - காரணம் என்ன?
Longwa: இந்திய-மியான்மர் எல்லையில் இரட்டை குடியுரிமை கொண்ட பழங்குடி கிராமம்!பின்னணி என்ன?

தோடர் மக்கள் மேய்ச்சலில் இருந்து விவசாயத்துக்கு மாறியது எறுமைகளின் எண்ணிக்கை குறைந்ததற்கு மற்றொரு முக்கிய காரணமாக கருதப்படுகிறது. மேய்சலை விட கார் ஓட்டுநராக சுற்றுலாசார்ந்த வேலையில் ஈடுபடுவது இன்றைய தோடர் இளைஞர்களின் அதிகம் காணப்படுகிறது.

இதனால் எறுமைகளின் பராமரிப்பு குறைந்துள்ளது. எறுமைகளுக்கு தேவையான ஊட்டச்சத்து சரிவர கிடைக்காததால் கருவுறுவதும், ஆரோக்கியமான கன்றுகள் பிறப்பதும் குறைந்துள்ளது.

Twitter

புல்வெளிகளின் ஆக்கிரமிக்கும் ஒருபுறம் இருக்க, வெளிநாட்டு புல் வகைகள் அதிகமாக வளருவது மற்றொரு பிரச்னையாக இருந்து வருகிறது. நீலகிரி மலைகளை கிக்கியூ என்ற ஆப்பிரிக்க புல் வகை அக்கிரமித்துள்ளது. இதனால் இந்த பகுதி அதிக பசுமையாக தெரியும். ஆனால் அதனால் எந்த பயனும் கிடையாது.

உள்ளூர் புல்வகைகள் மழைநீரை தேக்கி வைக்கும். அத்துடன் அவைதான் எறுமைகளுக்கு ஏற்ற ஊட்டசத்துமிக்க உணவாகவும் இருக்கும். தோடர் பழங்குடி மக்களின் அடையாளமே அவர்களின் எறுமைகள் தான்.

நீலகிரி : அழிந்துவரும் தோடர் எறுமைகள்; வேதனையில் பழங்குடி மக்கள் - காரணம் என்ன?
ஊட்டி: கேர்ன் ஹில் முதல் முத்தநாடு மந்து வரை: பயணிகள் பார்க்கத்தவறும் பூலோக சொர்க்கம்!

இறந்தவர்களுக்கு எறுமைகளை பலிகொடுக்கும் சடங்கு கிட்டத்தட்ட நின்றுவிட்டது. தங்களது அடையாளத்தையும் பழக்கவழக்கத்தையும் பாதுகாக்க தோடர் பழங்குடி மக்கள் நடவடிக்கை எடுக்கத்தொடங்கியுள்ளனர்.

இளைஞர்கள் எறுமைகளுக்கு ஊட்டச்சத்து அளிப்பது, முதலுதவி போன்ற பயிற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். தோடர் மக்களைப் பொறுத்தவரையில் ஒருவர் வீட்டில் எறுமை இல்லாவிட்டால் அவரை மிகவும் அற்பமானவர் என எடைபோடுவர். இதனால் சொந்தங்களின் வீட்டில் எறுமைகளை வாங்கி வளர்கின்றனர். இந்த நிலை மாறி எறுமைகள் மீண்டும் செழிக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகவும் உள்ளது.

நீலகிரி : அழிந்துவரும் தோடர் எறுமைகள்; வேதனையில் பழங்குடி மக்கள் - காரணம் என்ன?
மணிப்பூர்: பழங்குடி மக்களுக்கும் மெய்தேய் மக்களும் என்ன பகை - விரிவான தகவல்!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Related Stories

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com