கண்ணாமூச்சி முதல் மாட்டுத்தாவணி வரை : வித்தியாசமான பெயர்களை கொண்ட ஊர்கள் - என்னென்ன?

தமிழகத்தில் உள்ள ஒரு சில ஊர்களுக்கு இடப்பட்டுள்ள வித்தியாசமான பெயர்கள், அது எந்த பகுதியில் அமைந்துள்ளது என்பதை பார்க்கலாம்.
கண்ணாமூச்சி முதல் மாட்டுத்தாவணி வரை : வித்தியாசமான பெயர்களை கொண்ட ஊர்கள் - என்னென்ன?
கண்ணாமூச்சி முதல் மாட்டுத்தாவணி வரை : வித்தியாசமான பெயர்களை கொண்ட ஊர்கள் - என்னென்ன?Twitter

'அவன் ஊரைச் சொல்லு அவன் யாருன்னு சொல்றேன்' இந்த வார்த்தையை கிராமங்களில் அடிக்கடி சொல்லக் கேட்டிருப்போம். அந்த அளவுக்கு ஒரு ஊருடைய பெயர் ஒவ்வொரு தனிமனிதனுக்குமான அடையாளமாக இருந்து வருகிறது. நம்மில் பலரும் நமது ஊரைப் பற்றி சொல்லச் சொன்னால் பெருமையாக பல விஷயங்களை பேசுவோம்.

ஆனால், சிலர் தங்களது ஊரின் பெயரையே வெளியே சொல்ல கூச்சப்படுவதையும் பார்த்திருப்போம். அது ஏன் என்றால் அந்த ஊருக்கு வைக்கப்பட்டுள்ள பெயர் அப்படி. இப்போது, தமிழகத்தில் உள்ள ஒரு சில ஊர்களுக்கு இடப்பட்டுள்ள வித்தியாசமான பெயர்கள், அது எந்த பகுதியில் அமைந்துள்ளது என்பதை பார்க்கலாம்.

எழுமலை - மதுரை மாவட்டம், பேரையூர் வட்டத்தில் உள்ள முதல்நிலை பேரூராட்சி எழுமலை.

கேட்டவரம்பாளையம் - திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கலசப்பாக்கம் வட்டாரத்தில் அமைந்துள்ளது கேட்டவரம்பாளையம் கிராமம். இந்த கிராமத்தில் உள்ள மிகப் பழமை வாய்ந்த மாரியம்மன் கோவில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சார்ந்ததாம்.

பால் வார்த்து வென்றான் - திருவண்ணமலை மாவட்டத்தில் அமைந்துள்ள ஊர் பால் வார்த்து வென்றான்.

குந்தாணி பாளையம் - கரூர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஊர் குந்தாணி பாளையம். இந்த குந்தாணி என்ற பெயருக்கு வாய் அகன்ற பாத்திரம் என்று அர்த்தமாம்.

கண்ணாமூச்சி - சேலம் மாவட்டத்தின் மேட்டூர் தாலுகாவில் உள்ளது கண்ணாமூச்சி கிராமம்.

மாட்டுத்தாவணி - மதுரை மாவட்டத்தில் உள்ள பிரபலமான ஊர் மாட்டுத்தாவணி. இந்த இடம் முன்னொரு காலத்தில் மாடுகளை விற்பனை செய்யும் இடமாக இருந்ததாம். அதைக் குறிக்கும் விதமாக இந்த இடத்திற்கு மாட்டுத்தாவணி என்று பெயரிடப்பட்டுள்ளது.

நல்லமரம் - நல்லமரம் என்ற ஊர் மதுரை மாவட்டத்தில் உள்ள தே. கல்லுப்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் அமைந்துள்ள கிராமமாகும்.

எப்போதும் வென்றான் - தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள கிராமத்தின் பெயர் தான் எப்போதும் வென்றான்.

நாயகனைப் பிரியாள் - இந்த ஊர் அரியலூர் மாவட்டத்தில் உள்ளது.

மூவிருந்தாளி - மூவிருந்தாளி என்ற ஊர் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மேலநீலதநல்லூர் வட்டாரத்தில் அமைந்துள்ளது.

பிச்சைத்தலைவன்பட்டி - திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள குருவிகுளம் வட்டாரத்தில் அமைந்துள்ளது பிச்சைத்தலைவன்பட்டி.

தலைவாசல் - தலைவாசல் ஊராட்சி ஒன்றியம் தமிழகத்தில் உள்ள சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ளது.

கண் கொடுத்த வனிதம் - திருவாரூர், குடவாசல் வட்டத்தில் உள்ளது கண்கொடுத்த வனிதம் என்ற ஊர்.

அரிய கோஷ்டி - இந்த ஊர் வேலூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது.

சேலை - திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஊரின் பெயர் தான் சேலை.

உலகம் - கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சூளகிரி தாலுகாவைச் சேர்ந்த கிராமம் ஒன்றின் பெயர் உலகம்.

எருமை வெட்டிபாளையம் - திருவள்ளூர் மாவட்டம் காரனோடை அருகில் உள்ள கிராமம் எருமை வெட்டிபாளையம்.

கண்ணாடி - கடலூர் மாவட்டத்தில் உள்ள குறிஞ்சிப்பாடி தாலுகாவைச் சேர்ந்தது கண்ணாடி என்ற கிராமம்.

கண்ணாமூச்சி முதல் மாட்டுத்தாவணி வரை : வித்தியாசமான பெயர்களை கொண்ட ஊர்கள் - என்னென்ன?
முத்து நகரம் முதல் குட்டி ஜப்பான் வரை: இந்திய நகரங்களின் சிறப்பு பெயர்கள் - என்னென்ன?

இனாம்குளத்தூர் - திருச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள ஊர் இனாம்குளத்தூர். இந்த ஊருக்கு முன்பு வேலாங்குளத்தூர் என்ற பெயரும் இருந்தது குறிப்பிடத்தக்கது.

வளையமாதேவி - தமிழ்நாட்டின் சேலம் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் அருகேயுள்ள கிராமம் வளையமாதேவி.

வானமாதேவி - வானமாதேவி கடலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள முக்கியமான ஒரு ஊராட்சி ஆகும்.

தேவன் குறிச்சி - மதுரை மாவட்டத்தில் இருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள பேரையூர் பகுதியில் அமைந்துள்ளது இந்த கிராமம்.

கண்ணாமூச்சி முதல் மாட்டுத்தாவணி வரை : வித்தியாசமான பெயர்களை கொண்ட ஊர்கள் - என்னென்ன?
ஆந்திரப் பிரதேசம்: ஒவ்வொரு மூன்று குடும்பத்திற்கும் ஒரு மருத்துவர் - ஓர் அடடே கிராமம்

ஆசாரிபள்ளம் - கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஒரு பேரூராட்சி ஆசாரிப்பள்ளம். இந்த ஆசாரிப்பள்ளம் பேரூராட்சியானது நாகர்கோவில் மாநகராட்சிப் பகுதியுடன் தற்போது இணைக்கப்பட்டுள்ளது.

பாலூர் - இந்த ஊர் கடலூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது.

நெய்வாசல் - நெய்வாசல் என்பது தஞ்சாவூர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும்.

வெண்ணாத்தாங்கரை - தஞ்சாவூர் மாவட்டத்தில் அமைந்துள்ள வெண்ணாற்றங்கரை ஊர் அனுமார் கோயிலுக்கு புகழ் பெற்றது.

ஒரு கோடி - விழுப்புரம் மாவட்டத்தில் அமைந்துள்ள சிறிய கிராமத்தின் பெயர் ஒரு கோடி.

வயிருசட்டிப்பாளையம் - திருச்சி அருகே அமைந்துள்ள ஊர் வைரிசெட்டிப்பாளையம். இந்த இடத்தில் நடத்தப்படும் மீன்பிடி திருவிழா பிரபலமானது. இந்த இடம் வயிருசட்டிப்பாளையம் என்ற பெயரில் இருந்து மருவியது.

காக்காபாளையம் - சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ள ஊர் காக்காபாளையம். இந்த ஊரில் உள்ள ஏரி பழமை வாய்ந்தது.

குருணிகுளத்துப்பட்டி - கரூர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஊரின் பெயர் குருணிகுளத்துப்பட்டி.

கண்ணாமூச்சி முதல் மாட்டுத்தாவணி வரை : வித்தியாசமான பெயர்களை கொண்ட ஊர்கள் - என்னென்ன?
இந்தியாவில் இருக்கும் மில்லியனர்கள் கிராமம்- வறுமையே இல்லாத அடடே கிராமத்தின் பின்னணி என்ன?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com