"ரயில்ல தள்ளி விட்டு தண்டிக்கணும்" - சத்யா கொலை வழக்கில் பொங்கிய விஜய் ஆண்டனி!

இன்று ஈசிஆர் சாலையில் சுற்றித் திரிந்துகொண்டிருந்த சதீஸை காவல்துறையினர் கைது செய்தனர். காதல் காரணமாக இளம் பெண் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
சத்யா கொலை வழக்கில் பொங்கிய விஜய் ஆண்டனி!
சத்யா கொலை வழக்கில் பொங்கிய விஜய் ஆண்டனி!ட்விட்டர்
Published on

சென்னை தம்பரத்திலிருந்து கடற்கரை நோக்கிச் சென்றுகொண்டிருந்த ரயிலில் சத்யா (20) என்ற பெண் விழுந்து இறந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

சத்யாவை நீண்ட நாட்களாக சதீஷ் (23) என்ற நபர் காதலித்து வந்துள்ளார். இருவரும் சில நாட்கள் காதலித்து பிரிந்துள்ளனர். ஆனால் கல்லூரி மாணவியான சத்யாவுக்கு வேறு ஒருவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டதாக சதீஸுக்கு தகவல் கிடைத்திருக்கிறது. இதனையடுத்து சத்யா கல்லூரிக்குச் செல்லும் போது அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சதீஷ் அவரை ரயிலில் தள்ளிவிட்டு கொலை செய்துள்ளார்.

கொலை செய்துவிட்டு தப்பியோடினார் சதீஷ். காவல்துறையினர் சதீஷ் மற்றும் சத்யா குறித்து விசாரித்து வந்தனர்.

இந்த நிலையில் மகளின் இறப்பால் வேதனையடைந்த சத்யாவின் தந்தை மாணிக்கம் (47) தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

இன்று ஈசிஆர் சாலையில் சுற்றித் திரிந்துகொண்டிருந்த சதீஸை காவல்துறையினர் கைது செய்தனர். காதல் காரணமாக இளம் பெண் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் சத்யா - சதீஷ் வழக்கில் விரைவாக விசாரணை நடத்தப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட வேண்டுமென்று குரல் கொடுத்துள்ளார் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி.

சத்யா கொலை வழக்கில் பொங்கிய விஜய் ஆண்டனி!
கோகுல்ராஜ் கொலை வழக்கில் தீர்ப்பு; யுவராஜ்-க்கு 3 ஆயுள் தண்டனை!

அவர் தனது ட்வீட்டடில், "சத்யாவை கொன்று சத்யாவின் அப்பாவின் தற்கொலைக்கு காரணமான சதிஷை, பொறுமையாக விசாரித்து 10 வருஷத்துக்கு அப்புறம் தூக்குல போடாமல், தயவு செய்து, உடனே விசாரித்து, ரயில்ல தள்ளி விட்டு தண்டிக்கும் படி, சத்யாவின் சார்பாக பொது மக்களில் ஒருவனாக, கனம் நீதிபதி அவர்களை கெஞ்சி கேட்டு கொள்கிறேன்" எனப் பதிவிட்டுள்ளார்.

சத்யா கொலை வழக்கில் பொங்கிய விஜய் ஆண்டனி!
விஜய் ஆண்டனி: உங்க குடும்பத்துல பிரச்னைனா... இத பண்ணுங்க - அட்வைஸ் செய்யும் இசையமைப்பாளர்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com