Vijay Hazare: 50 ஓவர்களில் 500 ரன்கள்; வரலாற்று சாதனை படைத்த தமிழக வீரர்கள்!

தமிழக அணி, 50 ஓவர் முடிவில் 506 ரன் எடுத்தது. இது லிஸ்ட் ஏ ஆடவர் கிரிக்கெட் போட்டிகளில் இதுவரை எடுக்கப்பட்ட அதிகபட்ச ரன்களாகும்.
ஜெகதீசன்
ஜெகதீசன்ட்விட்டர்
Published on

விஜய் ஹசாரே தொடரில் இரட்டை சதமடித்து சாதனை படைத்திருக்கிறார் தமிழக கிரிக்கெட் வீரர் நாராயன் ஜெகதீசன். இந்த போட்டியில் தமிழக அணி அருணாச்சல பிரதேசத்தை 435 ரன்கள் வித்தியாசத்தில் வென்றுள்ளது.

இந்தியாவில் உள்ளூர் தொடரான விஜய் ஹசாரே கோப்பை தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 6வது போட்டியில் தமிழகம், அருணாச்சல பிரதேசம் அணிகள் மோதியது

டாஸ் வென்ற அருணாச்சலபிரதேசம் அணி ஃபீல்டிங் தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த தமிழக அணிக்கு ஓப்பனிங் பேட்டராக களமிரங்கிய ஜெகதீசன், 141 பந்துகளில் 277 ரன்களை குவித்தார். இதில் 25 ஃபோர் மற்றும், 15 சிக்சர்கள் அடங்கும்.

இதன் மூலம் ஜெகதீசன் விஜய் ஹசாரே போட்டிகளின் ஒரே சீசனில் 5 சதமடித்த வீரர் என்ற புதிய வரலாற்று சாதனையை படைத்துள்ளார். மற்றொரு புறம், சாய் சுதர்ஷன் 102 பந்துகளில் 154 ரன்கள் எடுத்தார். தமிழக அணி 416 ரன்கள் எடுத்த பின்னர் தான் முதல் விக்கெட் விழுந்தது.

தமிழக அணி, 50 ஓவர் முடிவில் 506 ரன்கள் எடுத்தது. இது லிஸ்ட் ஏ ஆடவர் கிரிக்கெட் போட்டிகளில் இதுவரை எடுக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோராகும். பின்னர் விளையாடிய அருணாச்சல பிரதேச அணி, 71 ரன்களில் ஆட்டமிழந்தது. தமிழக அணி 435 ரன் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது.

ஜெகதீசன்
தோனி போட்ட கண்டிஷன்: ஜடேஜாவை தக்கவைத்த சிஎஸ்கே - டிவிட்டர் பதிவு வைரல்

ஜெகதீசன் இதுவரை நடந்த போட்டிகள் அனைத்திலுமே சதமடித்திருக்கிறார் (114, 107, 168, 128). இதற்கு முன்னர் விஜய் ஹசாரே கோப்பையில் ஒரே சீசனில் நான்கு சதமடித்த வீரர்கள் பட்டியலில், விராட் கோலி உள்ளிட்ட நான்கு வீரர்களின் சாதனையை சமன் செய்திருந்தார்.

தற்போது உலகளாவிய முதல் தர கிரிக்கெட்டிலும் தொடர்ச்சியாக ஐந்து சதங்களை விளாசிய ஒரே வீரர் எனும் மாபெரும் இமாலய சாதனைப் படைத்துள்ளார்.

இதற்கு முன்னர் இங்கிலாந்தின் ஆலிஸ்டன் பிரௌன் கடந்த 2002 ஆம் ஆண்டு 268 ரன்களை எடுத்ததே சாதனையாக இருந்தது. அதனை 20 ஆண்டுகள் கழித்து தற்போது ஜெகதீசன் முறியடித்துள்ளார்.

ஜெகதீசன்
விராட் கோலி : "எங்கள் பார்ட்னர்ஷிப் எப்போதும் ஸ்பெஷல்..." - 7+18 காம்போ குறித்து கோலி

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com