உலக முதலீட்டாளர்கள் மாநாடு தமிழக அரசு சார்பில் ஜனவரி 7 மற்றும் 8 ஆகிய இரு தேதிகளில் நடைப்பெற்றது. இந்த மாநாட்டில் பல்வேறு தொழிலதிபர்கள், தொழில் முனைவோர் கலந்துக்கொண்டனர்.
அந்த வகையில் தமிழகத்தை சேர்ந்த குக்கிங் சேனல் குழு கலந்து கொண்டனர். தி வில்லேஜ் குக்கிங் எனும் யூடியூப் சேனல் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொண்டு தங்களது அனுபவத்தை பகிர்ந்து கொண்டனர்.
”தங்கள் அனுபவத்தை கொண்டு சமையல் செய்து வருவதாகவும் அது சக்ஸஸ் ஆகுவதாகவும் தெரிவித்தனர்.
அந்த குழுவில் இருக்கும் முதியவர் ஒருவர் தான் பல இடங்களில் சமைத்திருப்பதாகவும் தனது சமையல் குறித்து எந்தவித விமர்சனமும் வந்ததில்லை எனவும் கூறியவர் தற்போது இந்த வீடியோ பார்த்துவிட்டு பலரும் நன்றாக இருக்கிறது என்று கூறி வருகின்றனர். அது மிகவும் சந்தோஷமாக இருப்பதாக நெகிழ்ந்தார்.
பின்னர் தாங்கள் சமைக்கும் உணவு பொருள்களை வீணாக்காமல் முதியோர் இல்லங்களில் வழங்கி வருவதாகவும் தெரிவித்தனர்.
ஒரு வீடியோவுக்கு குறைந்தபட்சம் ஒரு லட்சமும், அதிகபட்ச 3 லட்சமும் செலவாகுவதாக அவர்கள் கூறினர்.
மேலும் விக்ரம் படத்தில் தாங்கள் நடித்ததற்கு ஒரு ரூபாய் கூட வாங்கவில்லை எனவும் விளம்பரத்திற்காக எந்த தொகையும் பெறக்கூடாது என சேனல் தொடங்கும் போதே முடிவு செய்துள்ளதாகவும்” கூறினர்.
சாக்லேட் நிறுவனம் ஒன்று பத்து நொடி விளம்பரத்திற்கு 4.5 லட்சம் தருகிறோம் என்று சொன்னதை கூட நிராகரித்ததாக வில்லேஜ் குக்கிங் சேனல் பிரபலம் சுப்ரமணியன் பேட்டி அளித்திருந்தார். தற்போது இவர்களின் பேச்சு கவனம் பெற்று வருகிறது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust