மழைக்காலம் வந்தாலே பள்ளிக் குழந்தைகளுக்கு குதூகலமாகிவிடும். சின்னதாக சாரல் வந்தால் கூட விடுமுறை கிடைக்குமா என டி.வி முன்னால் உட்கார்ந்து பார்க்க ஆரம்பித்துவிடுவார்கள். இந்த காலத்து குழந்தைகள் இதில் இன்னும் ஒரு படி மேலே சென்று சமூக வலைத்தளங்களில் அதிகாரிகளிடம் நேரடியாக விடுமுறைக்கு கெஞ்சுகின்றனர்.
அப்படிக் கேட்கும் குழந்தைகளுக்கு விருதுநகர் கலெக்டர் கொடுத்த பதில் இப்போது ட்ரெண்டாகி வருகிறது.
செய்தி தொலைக்காட்சியில் மழைக் காரணமாக விடுமுறை என வந்த செய்தியை உறுதிப்படுத்தக் கூறி மாணவர் ஒருவர் கலெக்டரை டேக் செய்து ட்வீட் செய்ய, அதற்கு கலெக்டர் “பாலே இங்க தேறல பாயாசம் கேக்குதா” என திருச்சிற்றம்பலம் பட பாடலை சுட்டிக்காட்டி, சீக்கிரம் தூங்கி காலை பள்ளிக்கு வருமாறு அறிவுறுத்தியுள்ளார்.
இதற்கு ட்விட்டர்வாசிகளின் ரியாக்ஷன்கள்:
இதே போல சில நாட்களுக்கு முன்னர் வெதர்மேன் பிரதீப் கனமழைக்கு வாய்ப்பில்லை எனக் கூறியதனால் அவரை பேஸ்புக்கில் திட்டித்தீர்த்தனர் சுட்டிக்குழந்தைகள்.
இந்த மழைக்காரணமாக மானவர்களும் கலெக்டர்களும் சமூக வலைத்தளங்களில் நெருக்கமாகிவிட்டனர் என்பதை நிரூபிக்கும் வகையில் புதுக்கோட்டை மாவட்ட கலெக்டருக்கும் ஒரு சம்பவம் நடந்திருக்கிறது.
அவரது இன்ஸ்டாவில் பர்சனல் மெசேஜில் வந்து மாணவர்கள் ஐஸ் வைத்தகதையை இங்குப் பார்க்கலாம்,
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust