மகளை விட அதிக மதிப்பெண் எடுத்த மாணவனை கொலை செய்த தாய் - காரைக்காலில் பரபரப்பு!

பாலசுப்பிரமணியன் அந்த பள்ளியில் படிக்கும் மாணவிக்கு போட்டியாக இருந்திருக்கிறார். இதனால் பொறாமையில் அந்த மாணவியின் தாயான சகாயராணி பால சுப்பிரமணியனை கொலை செய்ய திட்டமிட்டதாக கூறப்படுகிறது.
Death
DeathTwitter
Published on

படிப்பில் மகளை முந்திய மாணவனுக்கு குளிர் பானத்தில் விஷம் கலந்து கொலை செய்ய முயன்ற தாயால் காரைக்காலில் பரபரப்பு.

காரைக்கால் நேரு நகரைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகன் பால சுப்பிரமணியன். எட்டாம் வகுப்பு படித்து வரும் பால சுப்பிரமணியன் நன்றாக படித்து வந்தார். எப்போதும் வகுப்பில் முதல் ரேங்க் எடுப்பவராக இருந்திருக்கிறார்.

பாலசுப்பிரமணியன் அந்த பள்ளியில் படிக்கும் மாணவி ஒருவருக்கு போட்டியாக இருந்திருக்கிறார். இதனால் பொறாமையில் அந்த மாணவியின் தாயான சகாயராணி பால சுப்பிரமணியனை கொலை செய்ய திட்டமிட்டதாக கூறப்படுகிறது.

பள்ளியில் இருந்து வீடு வீடு திரும்பிக்கொண்டிருந்த பால சுப்பிரமணியனை வழிமறித்த சகாயராணி என்ற பெண் அவருக்கு குளிர்பானம் கொடுத்துள்ளார்.

வீட்டுக்கு வந்த மாணவனுக்கு வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டுள்ளது. அவர் குளிர்பானம் குடித்ததாக பெற்றோரிடம் கூறியுள்ளார்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த மாணவன் 2ம் தேதி நள்ளிரவில் இறந்ததாக கூறப்படுகிறது. சகாயராணி பால சுப்பிரமணியனுக்கு குளிர்பானம் வழங்கியது சிசிடிவியில் பதிவாகியிருந்தது.

Death
ஆந்திரா: தண்ணீர் என நினைத்து ஆசிட் குடித்த மாணவன் - போர் களமான கல்லூரி

தன் மகளை விட அதிக மதிப்பெண் பெறுவதனால் பொறாமையில் சகாயராணி பால சுப்பிரமணியனை கொன்றதாக மாணவனின் பெற்றோர் குற்றம் சாட்டியிருக்கின்றனர். அத்துடன் மாணவனின் உறவினர்கள் சாலைமறியலிலும் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

காவல்துறையினர் சகாயராணியை கைது செய்துள்ளனர். விசாரணனை நடைபெற்று வருகிறது.

Death
கள்ளக்குறிச்சி மாணவி மரணம் : பஸ்களுக்கு தீ வைப்பு; 144 தடை உத்தரவு - விரிவான தகவல்கள்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com