
மதுரையில் நிறைமதி
சீனா யுனான் மின்ஸு பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறைத் தலைவர் நிறைமதி கிகி ஜாங். சீனாவின் சர்வதேச தமிழ் வானொலியில் நிகழ்ச்சித் தயாரிப்பாளராகவும் பணியாற்றியவர். தமிழ்க் கல்வெட்டுகள், கோயில்களின் சுவடுகள் கண்டெடுக்கப்பட்ட சீனத்தின் தொன்ம நகரொன்றில் வசிக்கும் நிறைமதி, “எனது தமிழ் நண்பர்கள் எல்லோருக்கும் இனிய உலகத் தாய்மொழித் தினம் வாழ்த்துக்கள்” என முகநூல் வழியாகத் தனது வாழ்த்துகளைப் பகிர்ந்துள்ளார்.
சர்வதேச மொழிகள் கற்பதில் ஆர்வம் மிகுந்திருந்த இவர், தமிழ் தான் உலகின் தொன்மையான மொழி என அறிந்து 2007 முதல் 2011 வரை நான்கு ஆண்டுகள் பீஜிங்கில் உள்ள தகவல் தொடர்பு பல்கலைக்கழகத்தில் தமிழ்மொழி படித்துள்ளார்.
அவர் பகிர்ந்துள்ள முகநூல் பதிவில், “இனிய உலகத் தாய்மொழித் தினம் வாழ்த்துகள்! எங்கள் தாய்மொழி சீனமும், எங்களுக்குப் பிடிக்கும் தமிழும் வாழ்க வளமுடன்!” எனக் குறிப்பிட்டிருந்தது.
சென்னை மற்றும் மதுரைக்கு உள்ளிட்ட நகரங்களுக்குப் பணி நிமித்தமாக வந்திருக்கிறார் நிறைமதி. மதுரையில் காமராசர் பல்கலைக்கழகத்தில் தங்கி அவர் பண்பாடு சார்ந்த களப்பணிகள், ஆராய்சிகள் மேற்கொண்ட அவர் அவரது மதுரை நாட்குறிப்பிலிருந்து ஒரு புத்தகத்தையும் வெளியிட்டிருக்கிறார்.