Yogi

Yogi

NewsSense

Tamil News Today : உத்தர பிரதேச முதல்வராக யோகி இன்று பதவியேற்பு - 50 சாதுக்களுக்கு அழைப்பு

இன்றைய முக்கிய செய்திகளை இங்கே தொகுத்து வழங்குகிறோம்.

உத்தர பிரதேச முதல்வராக யோகி ஆதித்யநாத் இன்று பதவியேற்பு; 60 தொழிலதிபர்கள்; 50 சாதுக்களுக்கு அழைப்பு!

உத்தர பிரதேச முதல்வராக யோகி ஆதித்யநாத் இன்று பதவியேற்கிறார். இந்த பதவியேற்பு விழாவில், பிரதமர் மோடி, அமித் ஷா உள்பட பலர் பங்கேற்கின்றனர். உத்தர பிரதேசத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் மொத்தமுள்ள 403 தொகுதிகளில் பா.ஜனதா கூட்டணி 273 இடங்களை கைப்பற்றி ஆட்சியைத் தக்க வைத்தது. யோகி ஆதித்யநாத் தொடர்ந்து 2-வது முறையாக பதவியேற்க உள்ளார். லக்னோவில் உள்ள அடல் பிகாரி வாஜ்பாய் கிரிக்கெட் மைதானத்தில் மாலை 4 மணிக்கு இந்த விழா நடைபெறுகிறது. இந்த பதவியேற்பு விழாவில் பங்கேற்க, ரிலையன்ஸ் நிறுவன அதிபர் முகேஷ் அம்பானி உள்பட 60 தொழிலதிபர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. யோகி ஆதித்யநாத் தனிப்பட்ட முறையில் அயோத்தி,வாரணாசியைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட சாதுக்களுக்கு அழைப்பு விடுத்திருக்கிறார்.

Yogi

யோகி ஆதித்யநாத் : நரேந்திர மோடிக்குப் பின் பிரதமர் நாற்காலியை பிடிப்பாரா? - விரிவான அலசல்

Yogi

Uttar Pradesh CM : சாமியாரா? மகாராஜாவா? யார் இந்த யோகி ஆதித்யநாத்? - விரிவான பார்வை

M K Stalin

M K Stalin

NewsSense

முதல்வர் ஸ்டாலின் நேற்று துபாய் சென்றார்; தமிழ்நாடு அரங்கைத் திறந்து வைக்கிறார்!

துபாயில் சர்வதேச தொழில் கண்காட்சிக்கு நேற்று ஸ்டாலின் சென்றார். மார்ச் மாதம் 25-ந் தேதி (இன்று) முதல் மாநில அரசுகளுக்கு அரங்குகள் அமைத்துக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளன. இதையடுத்து அமையவுள்ள `தமிழ்நாடு அரங்கை' இன்று திறந்துவைக்கிறார். தமிழ்நாடு அரங்கு மூலம் சர்வதேச அளவில் தொழில் முதலீடுகளை ஈர்க்க தமிழக அரசுத் திட்டமிட்டு இருக்கிறது.

முதல்வருடன், தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தொழில்துறை முதன்மை செயலாளர் கிருஷ்ணன், தொழில்துறை வழிகாட்டு குழுத் தலைவர் பூஜா குல்கர்னி, முதலமைச்சரின் தனி செயலாளர்கள் உதயசந்திரன், அனு ஜார்ஜ், உமாநாத் மற்றும் மு.க.ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின், குடும்பத்தினர், பாதுகாப்பு அதிகாரிகள் என 15 பேர் சென்றிருக்கின்றனர். 5 வருடங்களுக்கு ஒரு முறை நடத்தப்படும் இந்த கண்காட்சி வருகிற 31-ந்தேதி வரை நடைபெற உள்ளது.

NewsSense

காமராஜர் பெயரில் ரூ.1000 கோடிக்குத் திட்டம் தமிழக சட்டப்பேரவையில் அமைச்சர் அறிவிப்பு!

பெருந்தலைவர் காமராஜர் பெயரில் கல்லூரி மேம்பாட்டுத் திட்டம் ரூ.1000 கோடி செலவில் செயல்படுத்தப்படும் என தமிழக சட்டப்பேரவையில் அமைச்சர் அறிவித்திருக்கிறார். இத்திட்டத்தின்படி, கல்லூரி கட்டடங்கள் அதிக அளவில் கட்டப்பட்டு, தமிழகம் முழுவதும் கல்லூரிகள் மேம்படுத்தப்படும் எனத் தெரிவித்திருக்கிறார். சென்னையில், ரூ.40 கோடியில் 6 மாடிகளுடன் நவீன மாணவர் விடுதி கட்டப்படும். என புதிய திட்டம் குறித்து நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்தார்.

Yogi

செளதி அரேபியா அரசு : அராம்கோ எண்ணெய் நிறுவன லாபம் 2 மடங்கு அதிகரித்திருக்கிறது!

பள்ளிக்குச் சென்ற மாணவிகளை வீட்டிற்கு திருப்பி அனுப்பிய தாலிபன்கள்!

கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் தாலிபன்கள் ஆப்கானிஸ்தானில் பொறுப்பேற்றது. அப்போது, அங்கு கொரோனா தொற்று நோய் காரணமாக அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டிருந்தன. ஆனால் 2 மாதங்களுக்குப் பிறகு சிறுவர்கள் மற்றும் 12 வயதுக்கு கீழ் உள்ள சிறுமிகள் மட்டுமே பள்ளிகளுக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டனர். நேற்று முன்தினம், 7 மாதங்களுக்குப் பிறகு ஆப்கானிஸ்தான் முழுவதும் இன்று 12-19 வயதுடைய பல்லாயிரக்கணக்கான பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்குத் திரும்ப உள்ளதாக தாலிபன்கள் தெரிவித்திருந்தனர். தலைநகர் காபூல் உட்பட பல மாகாணங்களில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டது. ஆனால் பள்ளிகள் திறக்கப்பட்ட சில மணி நேரங்களில் மாணவிகள் வீட்டிற்கு திருப்பி அனுப்பப்பட்டனர். தாலிபன்கள் உத்தரவின் பெயரில் மாணவிகள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது. இதுகுறித்து ஆப்கானிஸ்தான் கல்வி அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அஜீஸ் அஹ்மத் ரேயான் கூறுகையில், "இதுகுறித்து கருத்து தெரிவிக்க எங்களுக்கு அனுமதி இல்லை" என தெரிவித்திருக்கிறார்.

Yogi

தீவிரமடையும் முகேஷ் அம்பானி VS கௌதம் அதானி வணிக போட்டி - என்ன நடக்கிறது?

ஜடேஜா கேப்டன்; மொயின் அலி வருகை - சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இரு மாற்றங்கள்!

ஐபிஎல் 15-வது சீசன் வரும் சனிக்கிழமை தொடங்கவுள்ளது. முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதுகின்றன. இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து தோனி விலகியுள்ளார். புதிய கேப்டனாக ரவீந்திர ஜடேஜா செயல்படுவார் என அதிகாரப்பூரவ அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. கேப்டன் பொறுப்பிலிருந்து விலகினாலும், வீரராக அணியில் தோனி தொடர்வார் என்று அணி நிர்வாகம் அறிவித்திருக்கிறது. மேடலும், இந்தியா வருவதற்கான விசா மறுக்கப்பட்டிருந்த மொயின் அலிக்கு நேற்று முன்தினம் 'விசா' கிடைத்தது. இதையடுத்து இந்தியா புறப்பட்டா அவர் 3 நாள் தனிமைப்படுத்துதலுக்குப் பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினருடன் இணைவார். மேலும், நாளை நடைபெறும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான முதலாவது லீக் ஆட்டத்தில் மொயின் அலி பங்கேற்கமாட்டார்எ ன்று சென்னை அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் தெரிவித்திருக்கிறார்.

Yogi

உக்ரைன் ரஷ்யா போர் : kitkat விற்பனையை நிறுத்திய Nestle

Joe Biden

Joe Biden

Twitter

"உக்ரைன் போரை ரஷ்யா உடனே நிறுத்த வேண்டும்" நேட்டோ மாநாட்டுக்கு பின் ஜோ பைடன்:

பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸல்சில் நேட்டோ நாடுகளின் அவசர உச்சி மாநாடு கூட்டப்பட்டது. இதில, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கலந்து கொண்டார். அப்போது பேசிய ஜோ பைடன், உக்ரைன் படையெடுப்பு தொடர்பாக மாஸ்கோமீது அழுத்தத்தை அதிகரிக்கும் விதமாக, ரஷ்யா மீதான பொருளாதார தடைகளின் புதிய தொகுப்பை அறிவித்தார். மாநாட்டிற்குப் பின்பு பேசிய ஜோ பைடன், உக்ரைன் மீதான தாக்குதலில் ரஷ்யாவின் அதிபர் விளாடிமிர் புதின் ரசாயன அல்லது அணுசக்தி ஆயுதங்களை பயன்படுத்தினால், அதற்கு பதிலடி கொடுக்க நேட்டோவுடன் இணைந்து அமெரிக்கா தயாராக இருக்கிறது எனத் தெரிவித்திருக்கிறார். மேலும், ஜி-20 அமைப்பிலிருந்து ரஷ்யா வெளியேற வேண்டும் என்று ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

logo
Newssense
newssense.vikatan.com