Summer vacation: வெறும் 50 ரூபாய் போதும்! சென்னையில் இருக்கும் இந்த ஸ்பாட் பற்றி தெரியுமா?

இந்த அருங்காட்சியகம் அனைத்து அரசாங்க விடுமுறை மற்றும் திங்கள் கிழமை தவிர்த்து வாரத்தின் ஆறு நாட்களிலும், காலை 10.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை திறந்திருக்கும். நீங்கள் உங்கள் குழந்தைகள் மற்றும் குடும்பத்தோடு வெறும் 50 ரூபாயில் இந்த அருங்காட்சியகத்தை சுற்றிப் பார்க்கலாம்
chennai museum
chennai museumTwitter
Published on

இரயில் மீதும் இரயில் பயணங்கள் மீதான காதல் எப்போதும் எவருக்கும் குறைவதில்லை, ஆங்கிலேயர் காலத்தில் தொடங்கப்பட்ட ரயில் சேவை பல வளர்ச்சி நிலைகளை கடந்து வந்துள்ளது.

இந்தியன் ரயில்வே தொடர்பான பல சரித்திர பக்கங்களையும் தகவல்களையும் தெரிந்து கொள்ள சென்னையில் ஒரு அருங்காட்சியகம் உள்ளது. இது ஒரு மினி சுற்றுலா தளமும் கூட! வாருங்கள் அதனை பற்றி தெரிந்து கொள்வோம்

சென்னை வில்லிவாக்கத்தில் உள்ள ICF தளம் மிகவும் முக்கியமான சுற்றுலா தலமாகும்.

இந்த இரயில் அருங்காட்சியகத்திற்குள் இந்திய ரயில்வே வரலாற்றை சொல்லும் ஓவியங்கள், பழங்கால படங்கள், கலை பொருட்கள் என அனைத்தும் மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.

அதோடு சிறுவர்கள் முதல் பெரியர்கள் வரை சுற்றி பார்க்க டாய் ட்ரைனும் உள்ளது. இதற்கு 50 ரூபாய் கட்டணம் செலுத்தினால் நீங்கள் புதிய அனுபவத்தை அனுபவிக்கலாம். இதில் பள்ளி குழந்தைகளுக்கு ரூ 25 கட்டணமாக உள்ளது.

chennai museum
சென்னை : தனியாக செல்ல கூடாத Spots - அமானுஷ்யங்கள் நிறைந்த இடங்கள் பற்றி தெரியுமா?

அதன் பிறகு நீங்கள் உங்கள் குழந்தைகள் மற்றும் குடும்பத்தினருடன் உண்டு மகிழ குளிரூட்டப்பட்ட உணவகம் உள்ளது.

இந்த உணவகம் ரயில் பெட்டி அமைப்பு போல இருக்கும்,மதிய உணவிற்காக மதியம் 12 மணி முதல் 3 மணி வரையிலும், இரவு உணவிற்காக இரவு 7 மணி முதல் 10.30 மணி வரையிலும் திறந்திருக்கும்.

மேலும் ICF தொழிற்சாலைகளில் ரயில்களில் எப்படி இயக்குகின்றன என்பதையும் நீங்கள் பார்க்கமுடியும். மதிய உணவுடன் இவற்றையெல்லாம் அனுபவிக்க நபர் ஒருவருக்கு ரூ 200 கட்டணமாகும்.

இந்த அருங்காட்சியகம் அனைத்து அரசாங்க விடுமுறை மற்றும் திங்கள் கிழமை தவிர்த்து வாரத்தின் ஆறு நாட்களிலும், காலை 10.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை திறந்திருக்கும். நீங்கள் உங்கள் குழந்தைகள் மற்றும் குடும்பத்தோடு வெறும் 50 ரூபாயில் இந்த சூப்பர் அருங்காட்சியகத்தை சுற்றிப் பார்க்கலாம்

chennai museum
சென்னை: ஒரேநாளில் குழந்தைகளுடன் உற்சாகமாக சென்று வரலாம் - வீக் எண்ட் ஸ்பாட்ஸ்!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com