சென்னையில் விடுமுறை இல்லாத சலிப்பான வாழ்க்கையை வாழும் போது பல இடங்களைச் சுற்றிப்பார்க்கத் தோன்றும். ஆனால் வார இறுதியில் இருக்கும் வேலைகளால் வீட்டிலேயே இருந்துவிடும் இருக்கிறது.
இருக்கும் ஒரு ஓய்வு நாளையும் மொபைலிலோ, நெட்ஃப்லிக்ஸிலோ கழித்து விடுகிறோம்.
சென்னையில் இருந்து ஒரே நாளில் சென்றுவரக் கூடிய இடங்கள் இருந்தால் குழந்தைகளுடன் பிக்னிக் செல்லலாம் கோடை விடுமுறையை குழந்தைகளும் உல்லாசமாக கடக்க முடியும்.
அப்படிப்பட்ட இடங்களைத் தான் பார்க்கப்போகிறோம்.
சென்னையில் 53 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்திருக்கிறது மகாபலிபுரம் அல்லது மாமல்லபுரம். கடற்கரை நகரமான இங்கு பழமையான கற்கோயில்கள் இருக்கின்றன. கடற்கரை, கலங்கரை விளக்கம், சிற்பங்கள் நிறைந்த கோவிலை இங்கே பார்க்கலாம்.
சென்னையை அடுத்த மாவட்டமான காஞ்சிபுரம் 71 கிலோ மீட்டர் தொலைவில் தான் இருக்கிறது. இங்கு பல பழமையான கோவில்கள் இருப்பதனால் இந்தியாவின் 7 புனித தளங்களில் ஒன்றாக காஞ்சிபுரம் இருக்கிறது.
கோவில்களைப் போல இங்குள்ள பட்டும் மிகவும் பிரபலம்.
திருவண்ணாமலையில் சிவன் நெருப்பு வடிவில் எழுந்தருளியதாக நம்பப்படுவதனால் ஆன்மீக ரீதியில் மிகவும் முக்கியத்துவம் பெற்ற இடமாக இருக்கிறது திருவண்ணாமலை.
குறிப்பாக இங்குள்ள அருணாச்சலேஸ்வரா கோவில் மிகவும் புகழ் பெற்றது. இங்கு தங்க சிவலிங்கம் இருக்கிறது.
11ம் நூற்றாண்டிலேயே கட்டப்பட்ட கோவில்கள் இங்கு இருக்கின்றது. வரலாற்றிரீதியாகவும் திருவண்ணாமலைக்கு சிறப்புகள் இருக்கிறது.
பறவைகளைப் பார்த்து ரசிக்கும் மனம் கொண்டவர்களுக்கு வேடந்தாங்கல் ஒரு பூலோக சொர்கம் என்றே கூறலாம்.
இந்தியாவில் ஒரு பழமையான பெரிய சரணாலயமாக வேடந்தாங்கல் திகழ்கிறது.
சென்னையில் இருந்து 89 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வேடந்தாங்கல் குளிர்காலத்தில் வருவதற்கு சிறந்த இடம். கோடையில் செல்வதாக இருந்தால் பறவைகள் வரத்துக்குறித்து தெரிந்துகொள்வது முக்கியம்.
கோவளம் சென்னையில் இருந்து வெறும் 40 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மீனவ கிராமம். இங்கு பெரிய தனியார் ஹோட்டல்கள் உள்ளன. சர்ஃபிங், கயாகிங் விளையாட்டுகள் செல்லலாம்.
சென்னையில் இருந்து 150 கிலோமீட்டர் தொலைவில் சித்தூரில் உள்ளது திருப்பதி. உலகில் உள்ள பணக்கார கோவில்களில் ஒன்று திருப்பதி. எப்போதும் கூட்டமாக இருந்தாலும் மலைமேலே ஏறி கோவிலை பார்த்துவருவது மனதுக்கு உற்சாகத்தைக் கொடுக்கும்.
சத்ரஸ் அல்லது சதுரங்க்கப்பட்டணம் சென்னையில் இருந்து 69 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. 17ம் நூற்றாண்டில் டச்சு காலணியின் பகுதியாக இருந்தது. கடல்படையினர் இந்த நிலத்தில் போரிட்டதனால் இங்கு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் பல உள்ளன.
ஆந்திரபிரதேசத்தின் சித்தூரில் தான் இந்த இடமும் அமைந்துள்ளது. சென்னைக்கும் ஸ்ரீ காளஹஸ்திக்கும் இடையில் 118 கிலோமீட்டர் தொலைவு. பஞ்சபூத லிங்கம் எனப்படும் 5 சிவலிங்கங்களில் ஒன்று இங்குள்ளது.
பட்டுத்துணியில் ஓவியங்கள் வரையும் கலம்கரா (பட்டுசித்ரா) கலையின் பிறப்பிடம் இதுதான் எனக் கூறப்படுகிறது.
சென்னையில் இருந்து 183 கிலோ மீட்டர் நீளத்தில் கடலூரில் இருக்கிறது சில்வர் பீச். இன்னும் பெரிய அளவில் சுற்றுலாத்தளமாக விரிவடையாததால் மிகவும் அமைதியாகவும் பிரைவசியுடனும் இங்கு சென்று வரலாம்.
அருகிலேயே பசுமையான சதுப்புநிலக்காடும் உள்ளது. இங்கு சில அரிய பறவைகளைப் பார்க்கலாம். 100 ஆண்டுகள் பழமையான கலங்கரை விளக்கமும் அருகில் உள்ளது.
சென்னைக்கு அருகில் உள்ள சுற்றுலாத்தளங்களில் ஒன்று புலிகட் ஏரி. இங்கு பறவைகள் சரணலாயமும் உள்ளது. இங்குள்ள டச்சு தேவாலயங்கள், கலங்கரை விளக்கம் மற்றும் சிந்தமேஸ்வரர் கோவிலையும் பார்க்கலாம்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust