டெல்லி - லடாக் : புல்லட்டில் பயணம் செய்த 56 வயது சிங்கப்பெண்

கேரளாவைச் சேர்ந்த 56 வயதான பெண்மணி ஒருவர் புல்லட் பைக்கில் டெல்லி முதல் லே நகரம் வரை கிட்டதட்ட 2,400 கி.மீ தொலைவிற்கு தனியாக சென்று அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.
Mini Augustine
Mini Augustinetwitter
Published on

கேரளாவின் கோட்டயம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் மினி. இவர் கனரா வங்கியின் ரீஜினல் அலுவலகத்தில் 56 வயதான சீனியர் மேனேஜராக பணியாற்றி வருகிறார்.

இவர் தனது சிறு வயதிலிருந்தே அவரது சகோதரர்களுடனே வளர்ந்தவர் என்பதால் சைக்கிள், பைக் உள்ளிட்டவற்றவை மீது அதிக ஆர்வம் இருந்துள்ளது. சிறு வயதில் தன்னுடைய சகோதரர்களுடன் இணைந்து நீண்ட தூரம் சைக்கிளில் பயணம் செய்துள்ளார். பின்பு மினி வளர வளர சைக்கிள் மீதான ஆர்வம் அப்படியே பைக்கிற்கு மாறியது. பைக்குகளை ஓட்ட தொடங்கிய மினி, தனது வாழ்க்கையில் ஒரு அங்கமாக அதனை மாற்றிக் கொண்டார்.

Mini Augustine
Mini Augustinetwitter

மினியின் கனவிற்கு அவரது குடும்பத்தினர்கள் தடை எதுவுமே போடவில்லை. மினியின் பெற்றோர்கள், சகோதரர்கள், கணவன் என அனைவரும் இவருக்கு ஆதரவு அளித்தனர். இவரது கணவர் புல்லட் 350 பைக்கை எவ்வாறு ஓட்ட வேண்டும் என்று கற்று கொடுத்ததிலிருந்து அவருக்கு பைக் ஓட்டுவதில் மேல் இருந்த மோகம் மேலும் அதிகரித்தது.

”சிறகுகள் வீசி சுதந்திர ஆசையில் நான் போகிறேன்” என்று மினி தனது கனவை நோக்கி ஓட தொடங்கினார்.

2017 ஆம் ஆண்டில் தனது ராயல் என்பீல்டு பைக்கில் லடாக்கில் உள்ள கர்துங்லா கணவாயை அடைந்த வயதான பெண்மணி என்ற சாதனை படைத்தார். சமீபத்தில் ராஜஸ்தானுக்கு 2600 கிமீ பயணத்தை மேற்கொண்டது சமூகவலைத்தளங்கள் மற்றும் பத்திரிகைகளில் வைரலாகப் பேசப்பட்டார்.

Mini Augustine
Mini Augustinetwitter
Mini Augustine
ஏ.ஆர்.ரஹ்மான் - காயத்ரி ரகுராம் : இந்தி படங்களுக்கு தமிழ் பாடல் பாட வேண்டிய தானே?

இந்நிலையில் 500cc புல்லட்டில் டெல்லி முதல் லே நகரம் வரை சுமார் 2400கி.மீ 18 நாட்கள் பயணம் செய்து மினி மீண்டும் ஒரு சாதனையை படைத்துள்ளார்.

இந்த வயதில் இவ்வளவு தூரங்கள் ஒரு பெண் பைக்கில் பயணம் செய்தது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்த நீண்ட நெடிய பயணம் தற்போது இவரது வாழ்வில் சிறந்ததொரு திருப்புமுனையாக அமைந்திருக்கிறது. இந்த பயணத்திற்காக கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கும் மேலாக மினி பயிற்சி எடுத்துள்ளார்.

முறையான பயிற்சி பெற்ற பின்னரே அவர் பாதுகாப்பாக இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார். கனவுகளை நிறைவேற்ற வயது ஒரு தடையில்லை என்று மற்ற பெண்களுக்கும் முன் உதரணமாக திகழ்கிறார் மினி.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com