இதுக்கு இல்லையா சார் ஒரு END - 41 ஆண்டுகளில் 60 வழக்குகளை போட்ட தம்பதி!

விவாகரத்து பெற்று பிரிந்து வாழ்ந்து வரும் தம்பதிக்கிடையே அவ்வபோது சண்டை ஏற்பட்டு 41 ஆண்டுகளில் 60 வழக்குகளை பதிவு செய்துள்ளதை கண்டு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியே வியப்பில் ஆழ்ந்தார்.
Law
LawTwitter

திருமணமாகி 30 ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்த தம்பதி, கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 11 ஆண்டுகளுக்கு முன் விவாகரத்து பெற்றனர்.

அவ்வபோது இருவருக்குமிடையே ஏற்படும் சண்டைகளை வீட்டிலேயே தீர்த்துக்கொள்ளாமல் எல்லாவற்றிருக்கும் நீதிமன்றத்தையே நாடியுள்ளனர். அதாவது தம்பதி இருவரும் சேர்ந்து வாழ்ந்த 30 வருடங்களிலும், சட்ட ரீதியாக பிரிந்து வாழ்ந்த 11 வருடங்களிலும் பல்வேறு காரணங்களை கூறி

கணவன் மீது மனைவியும், மனைவி மீது கணவரும் பல வழங்குகளை தொடர்ந்துள்ளனர்.

60 cases
60 casestwitter
Law
இலங்கை : வலிமை திரைப்பட பாணியில் போராட்ட களத்திற்கு வந்த Bikers - என்ன நடந்தது?

இதில் ஒரு வழக்கு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் நேற்று ஆஜராகினர். அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வு ஆச்சரியத்தில் ஆழ்ந்தது. அதற்கு காரணம் அந்த தம்பதி கடந்த 41 ஆண்டுகளில் 60 வழக்குகளை தொடர்ந்துள்ளனர். இருதரப்பையும் விசாரித்த நீதிபதி ஆச்சர்யம் அடைந்து உள்ளார்.

மேலும் சிலருக்கு தொடர்ந்து சண்டையிட்டு கொள்வது பிடித்துள்ளது எனவும் நீதிமன்ற படி ஏறவில்லை எனில் அவர்களுக்கு துாக்கம் வராது போல என்றும் கூறியுள்ளார்.

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com