சாண்டா கிளாஸிடம் தன் பெற்றோருக்காக பரிசு கேட்டு 8 வயது சிறுமி எழுதிய கடிதம் ஒன்று இணையவாசிகளை நெகிழச் செய்துள்ளது.
டிசம்பர் வந்தாலே குளிர்காலம், ஹாலிடே சீசன், முக்கியமாக கிறிஸ்துமஸ், ஒரு வாரத்தில் புத்தாண்டு என கொண்டாட்டமாக இருக்கும். இதில் கிறிஸ்துமஸ் பண்டிகை என்பது எல்லோரையும் குதூகலமடைய செய்யும்.
வண்ண வண்ண நட்சத்திரங்கள், கண்கவர் அலங்கார பொருட்கள் கொண்டு அலங்கரிக்கப்பட்ட கிறிஸ்துமஸ் ட்ரீ, மனதிற்கு நெருக்கமானவர்களுக்கு பரிசுகள் வழங்குவது என குதூகலமடைய காரணங்களை அடுக்கிக்கொண்டே போகலாம்.
அதில் முக்கியமான ஒன்று கிறிஸ்துமஸ் அன்றைக்கு சாண்டா க்ளாஸ் வருவார், நாம் ஆசைப்பட்ட பொருட்களை பரிசுகளாக தருவார் என்பது. நாமும் குழந்தைகளாக இருக்கும்போது நமக்கு வேண்டிய பொருளை தரச் சொல்லிக் கேட்டு கிறிஸ்துமஸ் நாளில் அவரின் வருகைக்கு ஆவலோடு காத்திருப்போம்.
அப்படி இங்கும் ஒரு 8 வயது குழந்தை கிறிஸ்துமஸ் தாத்தாவிடம் பரிசை கேட்டுவிட்டு காத்திருக்கிறாள். அவள் கேட்ட பரிசு தான் தற்போது இணையத்தில் வைரலாகி பலரின் மனதை கனக்கச் செய்துள்ளது.
நிகோல் கானெல் என்ற பெண் தன் ட்விட்டர் பக்கத்தில் ஒரு கடிதத்தின் புகைப்படத்தை பகிர்ந்திருந்தார். அந்த கடிதத்தை நிகோல் சகோதரியின் 8 வயது மகள் எம்மி எழுதியிருப்பதாக தலைப்பில் தெரிவித்திருந்தார்.
எம்மி அந்த கடிதத்தில், ”இந்த கிறிஸ்துமஸிற்கு எனக்கு பரிசாக கொஞ்சம் பணம் கொடுங்கள். என் அம்மாவும் அப்பாவும் பாவம், பணமில்லாமல் ரொம்ப கஷ்டப்படுகிறார்கள்.
நான் கேட்பது அதிகம் என்று தெரியும். ஆனால், இதை தயவு செய்து என் ஆசையை நிறைவேற்றுங்கள்” என்று எழுதியிருந்தாள்.
நிகோல் இதை படித்துவிட்டு கண்கலங்கி விட்டதாக தெரிவித்திருந்தார். கிறிஸ்துமஸ் பண்டிகையின் சந்தோஷத்தில் இருக்கும் சமயத்தில், இந்த கடிதம் தங்களை மனமுடைய செய்துள்ளதாக நெட்டிசன்கள் தெரிவித்து வருகின்றனர்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust