ஆடம்பர ஹோட்டலில் இலவசமாக தங்கலாம் ஆனால் ஒரு கண்டிஷன் - என்ன? எங்கே?

சொகுசு வசதிகளைக் கொண்டிருக்கும் ஆடம்பர ஹோட்டலில் ஒரு நாளேனும் இருந்து விட வேண்டும் என்று நீங்கள் விரும்பினால், இது உங்களுக்கான தகவல்.
Zero Suite
Zero Suite Twitter
Published on

நட்சத்திர ஹோட்டலில் தங்குவதென்பது பலருக்கும் ஒரு கனவு... காரணம் அங்குக் கிடைக்கும் வசதிகள். ஆனால், செல்வந்தர்களை தவிர ஆடம்பர ஹோட்டல்களில் யாரும் தங்குவதில்லை. ஏனென்றால் அதற்கான செலவு அப்படி.


ஆடம்பர ஹோட்டலில் ஒரு நாளேனும் இருந்து விட வேண்டும் என்று நீங்கள் விரும்பினால், இது உங்களுக்கான தகவல்.

ஸ்பெயின் நாட்டில் உள்ள ஒரு ஆடம்பர ஹோட்டல், அங்கு வரும் சுற்றுலாப் பயணிகளை, இலவசமாக தங்கவிடுகிறது. ஆனால் அதற்கு ஒரு கண்டிஷனையும் சேர்த்து சொல்கிறது ஹோட்டல் நிர்வாகம்.

அது என்ன நிபந்தனை?

இபிஸா என்ற இந்த விடுதியில், ஒரு நபர் இலவசமாக ஒரு இரவுக்கு தங்க முடியும். ஆனால் அது நாம் எப்போதும் தங்கும் அறைகளை போல இருக்காது. இது முழுக்க கண்ணாடியால் ஆன அறை. இதன் கழிவறை மட்டும் தான் சுவற்றினால் கட்டப்பட்டுள்ளது. மற்றபடி, இந்த அறை சுவருக்குப் பதிலாக கண்ணாடியால் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் பெயர் Zero Suite

அதுவும் இந்த அறை ஹோட்டலின் வரவேற்பு தளத்தில் உள்ளது. ஆக, அங்கு தங்கினால், வருவோர் போவோரெல்லாம் நம்மை பார்க்க இயலும். அங்கு ஏதேனும் பார்டி நடக்கிறதென்றால், விழாக்கள் நடக்கிறதென்றாலும் நாம் அந்த அறையை விட்டு வர இயலாது. நாமும் வெளியில் நடப்பதை பார்க்கலாம்

பிரைவஸி என்பது இருக்காது. இந்த நிபந்தனைக்கு ஒப்புக்கொண்டால் தாராளமாக நீங்கள் இலவசமாகவே தங்கலாம் என்கிறது விடுதி நிர்வாகம். இந்த அறையில் ஒரு டபுள் பெட், ஒரு மேஜை மற்றும் நாற்காலி, போழுப்போக்கிற்கு ஒரு டிவி என அனைத்து வசதிகளும் உண்டு.
இந்த அறையில் தங்கிய பலரும் அவர்களது அனுபவத்தை பகிர்ந்துள்ளனர்.

அதில் ஒருவர் கூறியதாவது, "நான் அங்கு தங்கியிருந்தது எனக்கு மிகவும் ஜாலியாகவும் திரில்லிங்காகவும் இருந்தது. மேலும் அங்கு வந்த மற்ற விருந்தாளிகள் என்னை மரியாதையுடனே நடத்தினர். எனக்கு இது ஒரு வித்தியாசமான அனுபவம்" என்றார்.
இந்த Transparent Room கொண்ட ஹோட்டல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Zero Suite
Sky Cruise : தரையிறங்காமல் வானிலேயே பறந்து திரியும் ஒரு ஹோட்டல் - ஆச்சரிய தகவல்கள்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com