Sky Cruise : தரையிறங்காமல் வானிலேயே பறந்து திரியும் ஒரு ஹோட்டல் - ஆச்சரிய தகவல்கள்

இந்த பறக்கும் ஹோட்டலில் ஷாப்பிங் மால், விளையாட்டு மையங்கள், உணவகங்கள், பார்கள், விளையாட்டு மைதானங்கள், திரையரங்குகள், நீச்சல் குளங்கள், திருமண மண்டபங்கள், கூட்ட அரங்குகள் என அனைத்து வசதிகளும் இருக்கும். ஒரு மெட்ரோ நகரில் வாழும் முழு வாழ்வையும் இங்கு வாழ முடியும்.
Flying Sky Cruise
Flying Sky Cruise Youtube
Published on

விமானத்தில் பயணிப்பது சிலருக்கு அச்சம் தரும், சிலருக்கு அடக்க முடியாத பரவசத்தைத் தரும். எதுவாகினும் அந்த அனுபவத்தை ஒரு முறையேனும் பெற வேண்டும் என்ற ஆசை நம் ஒவ்வொருவருக்கும் இருக்கும். ஆனால் எத்தனை முறை பறக்க ஆசைப் பட்டிருப்போம்? எவ்வளவு நேரம்? என்ன இருந்தாலும் விமானப் பயணம் சில மணிநேரத்தில் முடிந்துவிடுமே... என்ற எண்ணத்தைப் போக்கியிருக்கிறது ஒரு புதிய தொழல்நுட்பம்.

ஹஷேம் அல்-கைலி என்ற நபர் இந்த பறக்கும் ஹோட்டலை வடிவமைத்துள்ளார். இது அனுசக்தியால் இயங்கக் கூடியது. இது பறக்கத் தொடங்கிய பின்னர் தரையிறங்கவே செய்யாதாம். சில ஆண்டுகளாவது வானில் சுற்றிக்கொண்டிருக்கும் என்கின்றனர்.

ஏமன் நாட்டைச் சேர்ந்த Hashem Al-Ghaili இது குறித்த வீடியோவை தனது யூடுயூபில் வெளியிட்டுள்ளார். இது இணையத்தில் பரவலாக வரவேற்பைப் பெற்றுள்ளது. இதனை ஒரு பறக்கும் ஹோட்டல்லின் முன்மாதிரியாக வைத்து வடிவமைத்தாராம். இது சாதாரண விமானத்தை விட பல மடங்கு பெரிதாக இருக்கும்.

பயணம் செய்வதற்கு மட்டுமின்றி இதற்குள் ஒரு வாழ்க்கையே வாழ்ந்துவிடலாம். இதில், பொழுதுபோக்கு தளம், ஷாப்பிங் மால், விளையாட்டு மையங்கள், உணவகங்கள், பார்கள், விளையாட்டு மைதானங்கள், திரையரங்குகள், நீச்சல் குளங்கள், திருமண மண்டபங்கள், கூட்ட அரங்குகள் என அனைத்து வசதிகளும் இருக்கும். ஒரு மெட்ரோ நகரில் வாழும் முழு வாழ்வையும் இங்கு வாழ முடியும்.

ஒரே நேரத்தில் இதில் 5000 பேர்வரைப் பயணிக்கலாம். அத்துடன் இந்த விமானத்தை இயக்குவதற்கு தனியாக விமானியெல்லாம் கிடையாது. முழுக்க முழுக்க செயற்கை நுண்ணறிவு மூலம் இது இயங்கும். இது பறக்கும் போது ஏதாவது பிரச்னை ஏற்பட்டால் கூட வானிலேயே சரி செய்யப்படும். எக்காரணத்துக்காகவும் கீழிறக்கப்படாது.

Flying Sky Cruise
விசித்திர விமானங்கள் : இந்த 10 விமானங்கள் எதற்கு பயன்படுகிறது தெரியுமா? - ஒரு அடடா தகவல்

இதில் எலெக்ட்ரிக் ஜெட் வசதியும் உள்ளது. இதிலிருந்து செல்ல நினைப்பவர்கள் ஜெட் மூலம் உலகின் எந்த பகுதிக்கும் சென்று திரும்பலாம்.

ஸ்கை குரூஸ் என அழைக்கப்படும் இந்த விமானம் குறித்து நெட்டிசன்கள் பல சந்தேகங்களையும் கேள்விகளையும் எழுப்பியுள்ளனர்.

இது செயலிழந்தாலோ அல்லது உள்ளே வேறேதும் பிரச்னைகள் ஏற்பட்டாலோ என்ன செய்வது என பல கேள்விகள் ஒருபக்கமும் இது பணக்காரர்களுக்கானது, ஆடம்பர வாழ்க்கைக்கு மட்டுமே இது உதவும் என விமர்சனங்கள் ஒரு பக்கமும் பெருகியிருக்கின்றன.

இது எப்போது உருவாக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வரும் எனக் காண ஆவலுடன் இருக்கின்றனர் டைட்டானிக் பட ரசிகர்கள்!

Flying Sky Cruise
மோனிகா கன்னா : தீ பிடித்த விமானம், 185 பேரை காப்பாற்றிய பைலட் - திக்திக் நிமிடங்கள்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com