Wedding
Wedding Pexels

மணமகளின் காலில் விழுந்து ஆசி பெற்ற மணமகனுக்கு குவியும் பாராட்டுகள் - வைரல் வீடியோ

தாலி கட்டியதும் கணவனின் காலில் விழுந்து மனைவியை வணங்க சொல்வார்கள். ஆனால் இங்கு இவரது கணவர், தன் மனைவியின் காலை தொட்டு கும்பிட்டார். இதை சற்றும் எதிர்பாராத மணப்பெண்ணுக்கு செம்ம சர்பிரைஸ்.
Published on

திருமணத்தின் போது, மனைவியின் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்ற கணவரின் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.

காலம் காலமாக நமக்கு வீட்டிலும், சினிமாவிலும் காண்பித்து வந்தது, நம்மை விட வயதில் பெரியவர்களை பார்த்தால் அவர்கள் காலில் விழுந்து ஆசி பெற வேண்டும் என்பது தான்.

மனைவிகள் கணவரின் காலை தொட்டுக் கும்பிடும் பழக்கத்தை காலகாலமாக சினிமாவும் சீரியல்களும் காண்பித்து வருகின்றன. அப்போது தான் விடிந்திருக்கும். வெளியில் பனிமூட்டம் இன்னும் குறையாமல், சூரிய வெளிச்சம் எட்டிப்பர்த்துக்கொண்டிருக்க, குயில்களும் குருவிகளும் கூவும். மனைவியின் முதல் வேலை தூங்கும் தன் கணவர் எழுந்துவிடாமல், அவர்து பாதங்களை பணிவது தான். பின்னால் வித்யாசாகர் பிஜிஎம் போடுவார். தெய்வீகமாக இருக்கும்.

இதை பார்த்து வளர்ந்த நாம், பிற்காலத்தில் இப்படிதான் நம் வாழ்கையிலும் நடக்கும் என்றெல்லாம் கனவு கண்டதுண்டு. அதிலும் பெண்கள் இப்படி நடந்துகொண்டே ஆக வேண்டும் என்பது எழுதப்படாத ஒரு விதியாக இருந்தது. அது அவர்கள், 'நல்ல குடும்ப பெண்' என சான்றிதழ் கொடுக்கும் ஒரு குணமாக கருதப்படுகிறது.

Wedding Ceremony
Wedding CeremonyPexels

அதே சமயத்தில் ஆதர்ச தம்பதிக்கு அழகு, தங்கள் வாழ்வில் அனைத்தையும் பகிர்ந்துகொள்ளுதல் தான் என்பதையும் நம் பெரியோர்கள் நமக்கு சொல்லிக்கொடுத்திருக்கிறார்கள். அப்படியிருக்கும்போது, மரியாதையும், அங்கீகாரமும், கவுரவமும் கணவனுக்கு மட்டும் ஏன் என்ற கேள்வி எழவே, சில Stereotype களை இந்த தலைமுறை களைய துவங்கியது.

சில நாட்களுக்கு முன்பு ஏன் என் மனைவி மட்டும் தாலி அணியவேண்டும்? நானும் அணிகிறேன் என்று ஒருவர் திருமணத்தின்போது, தன் மனைவியின் கையால் தாலியை கட்டிக்கொண்டார். அவரது மனைவி எப்போதெல்லாம் கழுத்தில் தாலியை அணிகிறாரோ, அப்போதெல்லாம் தானும் அணிவதாக உறுதியளித்தார். அதுவும் வெளியில், எல்லோரும் பார்க்கும்படி அணிவேன், அதில் எனக்கு கூச்சமில்லை என்றும் கூறி அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.

இப்படி, தங்கள் மனைவிக்காக காலில் மெட்டி அணிவது, கையில் மருதாணி இட்டுக்கொள்வது என, ஆண்கள் பல வகையில், அவர்களது மனைவிக்கு சம நிலையை திருமணத்தின் முதல் நாளிலிருந்தே கொடுத்து வருகிறார்கள்.

A Core Memory
A Core MemoryInstagram

பேங்கிங் அனலிஸ்டாக பணிபுரியும் திதி கொராடியா ராய் தான் அந்த லக்கி பெண். இவர் இன்ஸ்டாகிரம் இன்ஃப்ளூயென்சராகவும் உள்ளார்

ஆம்! தாலி கட்டியதும் கணவனின் காலில் விழுந்து மனைவியை கும்பிட சொல்வார்கள். ஆனால் இங்கு இவரது கணவர், தன் மனைவியின் காலை தொட்டு கும்பிட்டார். இதை சற்றும் எதிர்பாராத திதிக்கு செம்ம சர்பிரைஸ்.

காதல் எப்படி இரு தரப்பிலிருந்தும் இருக்கவேண்டுமோ, அது போல தானே மரியாதையும்?

அதை நிரூபிக்கும் வண்ணம் உள்ளது இந்த தம்பதியின் செயல். அதுவும், சந்தோஷமாக, எந்த வித தயக்கமும் இன்றி அவர் அந்த பெண்ணின் காலில் விழுந்தார். இதை தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த திதி "எங்கள் திருமணத்திற்கு வந்திருந்த புரோகிதருக்கு முதலில் இது பிடிக்கவில்லை. ஆனால் கிளம்பும் முன் அவர் நான் மிகவும் கொடுத்துவைத்தவள் என்று சொல்லிவிட்டு சென்றார்" என்று பதிவிட்டிருந்தார்.

கமென்ட் செக்ஷனில் தம்பதிக்கு வாழ்த்து தெரிவித்த பலரின் கருத்தும் இதுவாக தான் இருந்தது. ஒருவர் "Love this so much" என்று கமென்ட் செய்தார். இன்னொருவர், "இது தான் நான் இன்று இன்டெர்னெட்டில் பார்த்த மிக அழகான விஷயம்" என்று பதிவிட்டிருந்தார்.

ஆணும் பெண்ணும் சமம் என்பது, வீட்டிலிருந்து துவங்கினால் தான் சமூகத்திலும் அதற்கு வலு அதிகரிக்கும் என்பதற்கு இவர்கள் சான்று!

வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்

Wedding
Pride Month: மெக்சிகோவில் பிரமாண்டமாக நடைபெற்ற 100 தன்பாலின ஈர்ப்பாளர்கள் திருமணம்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

logo
Newssense
newssense.vikatan.com