உலகின் ஆபத்தான ரயிலில் ஹனிமூன் ஃபோட்டோஷூட் நடத்திய ட்ராவலர் தம்பதி - வைரல் புகைப்படங்கள்

தற்போது ஒரு காதல் ஜோடி, உலகின் மிக ஆபத்தான ரயில் எனக் கருதப்படும் Train du desert என்ற ரயிலில் சென்று தங்களது ஹனிமூன் ஃபோட்டோஷூட்டை நடத்தியுள்ளனர். இது இரும்பை எடுத்து செல்லும் "iron freight train" ஆகும்.
Kristijan Ilicic and Andrea Trgovcevic
Kristijan Ilicic and Andrea TrgovcevicInstagram
Published on

இன்றைய காலத்தில் முதல் நாள் சந்திப்பிலிருந்து துவங்கி, திருமண நிச்சயதார்த்தம், ப்ரீ வெட்டிங், வெட்டிங், போஸ்ட் வெட்டிங் என ஃபோட்டோ எடுக்கும் கலாச்சாரம், பரவலாக இருக்கிறது.

தங்களது வாழ்வின் இனிமையான தருணங்களை சேகரித்து வைக்கும் ஒரு கருவியாக புகைப்படங்கள் இருப்பதால், இந்த கலாச்சாரம் தழைத்தோங்கியிருக்கிறது.


தற்போது இன்னும் ஒரு படி மேலே போய், இயற்கை, சாகசங்கள், சவால்கள் நிறைந்த, வித்தியாசமான ஃபோட்டோஷூட் நடத்துவது டிரெண்டாகி வருகிறது. சமீபத்தில் ஒரு தம்பதி தங்களது திருமணத்தில் தீ பற்ற வைத்து புகைப்படம் எடுத்த வீடியோ இணையத்தில் வைரலானது.

Pre-wedding Photoshoot
Pre-wedding PhotoshootTwitter

அந்த வகையில், மற்றொரு காதல் ஜோடி, உலகின் மிக ஆபத்தான ரயில் எனக் கருதப்படும் Train du desert என்ற ரயிலில் சென்று தங்களது ஹனிமூன் ஃபோட்டோஷூட்டை நடத்தியுள்ளனர். இது இரும்பை எடுத்து செல்லும் "iron freight train" ஆகும்.


கிட்ட தட்ட 20 மணி நேர பயணத்திற்கு பதிவு செய்த கிரிஸ்டிஜன் இலிசிக் மற்றும் ஆண்ட்ரியா ட்ர்கோவ்செவிக் ஜோடி, பல வித்தியாசமான மற்றும் ஆபத்தான போஸ்களையும் கொடுத்து புகைப்படங்களை எடுத்துக்கொண்டனர். ஓடும் ரயிலில், தாதுவின் மீது நின்றிருக்கும் இலிசிக் அவரது மனைவியை கையில் ஏந்தியவாறு போஸ் கொடுத்தனர்.

பின்னர், இவர்கள் நின்றிருந்த பெட்டியின் ஓரத்தில் ஆண்ட்ரியா நிற்க, அவரை தாங்கி பிடிக்கிறார் இலிசிக். இப்படி பல ரோமன்டிக், அட்வென்சர் போஸ்கள்! அதுவும் இருவரது கண்களும் கட்டப்பட்டு.

Train du Desert
Train du DesertTwitter

இந்த ரயிலில் பயணிகளுக்கான பெட்டி இல்லை. இதிலுள்ள 200க்கும் மேற்பட்ட பெட்டிகளிலும் இரும்பின் தாது தான் கொண்டு செல்லப்படும். ஒரு வேளை மனிதர்கள் யாரேனும் இந்த ரயிலில் பயணிக்க வேண்டுமானால், இந்த தாது மீது அமர்ந்து தான் செல்வார்களாம். அதுவும் மிக மிக அரிதாக தான் நடக்கும்.


இதன் பெயருக்கேற்றவாரு, இந்த ரயில் பயணத்தின்போது காலநிலை கடினமானதாக இருக்கும். 700 கிலோமீட்டர் தூரம் பயணப்படும் இந்த ரயிலில், பகலில் 45 டிகிரீ செல்ஸியஸ் வெப்பநிலையும், இரவு நெருங்க நெருங்க வெப்பநிலை பூஜியத்திற்கும் கீழ் சென்றுவிடும்.

Kristijan Ilicic and Andrea Trgovcevic
புகைப்படம் எடுக்காததால் கல்யாணத்தை நிறுத்திய மணமகள் - காவல்துறை வரை சென்ற விவகாரம்

கிரிஸ்டிஜன் இலிசிக் மற்றும் ஆண்ட்ரியா ட்ர்கோவ்செவிக் ஜோடி டிராவல் இன்ஃப்ளுயென்சர்ஸ். இலிசிக் 150 நாடுகளுக்கு மேல் பயணம் செய்துள்ளார். இதுவரை தாங்கள் செய்திராத முறையில் தங்களது ஹனிமூன் ஃபோட்டோஷூட் இருக்கவேண்டும் என்று முடிவெடுத்து தான் வடமேற்கு ஆப்ரிக்காவின் மாரிடேனியாவிலுள்ள இந்த Train du Desert ஐ தங்களது ஹனிமூன் ஃபோட்டோஷூட் டெஸ்டினேஷனாக தேர்ந்தெடுத்துள்ளனர்.

இவர்களது ஹனிமூன் ஃபோட்டோக்களை கிளிக்கியது இலிசிகின் நண்பர். "நாங்கள் எங்கள் போஸ்ட் வெட்டிங் ஃபோட்டோஷூட்டிற்கு தேர்ந்தெடுத்த இடம் ட்ரெயின் டு டெஸர்ட் தான். இதில் மிகவும் சவாலாக இருந்தது இரவு நேரப் பயணம் தான். வெப்பநிலை பூஜியத்திற்கும் கீழே செல்வதால் குளிர் அதிகமாக இருக்கும். மேலும், காற்று, தூசி, இவற்றுடன் இந்த இரும்பு தாதுவும் நம் கண்களுக்குள் செல்வதால் சற்று கடினமாக தான் இருந்தது" என்கிறார் இலிசிக்

தற்போது இவர்களது இந்த புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

Kristijan Ilicic and Andrea Trgovcevic
தீயைப் பற்றவைத்து Pre Wedding Photoshoot நடத்திய ஸ்டண்ட் கலைஞர்கள் - வைரல் வீடியோ

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com