புகைப்படக்காரர் இல்லாமல் கல்யாண வீடுகள் முழுமையடையாது தான். திருமணத்தில் நடைபெறும் நெகிழ்ச்சியான தருணங்களைப் புகைப்படம் எடுத்து அதனை ஆல்பத்தில் பார்ப்பது எல்லாரும் மகிழ்ச்சியளிக்கக் கூடியது. புகைப்படம் நமது பேரக்குழந்தைகளுக்குக் கல்யாணக் கதை சொல்லும் நாள் வரை உடன் வரும். புகைப்படங்கள் தற்போது விஷேசங்களில் எந்த அளவு முக்கியத்துவம் பெற்றிருக்கிறது என்றால், மணமகன் புகைப்படம் எடுக்கத் தயார் செய்யாததால் திருமணத்தையே நிறுத்தியிருக்கிறார் கான்பூரைச் சேர்ந்த மணமகள் ஒருவர்.
அனைத்து ஏற்பாடுகளும் முடிந்த பின்னர் புகைப்படம் எடுக்காததால் திருமணம் நின்ற நிகழ்வு அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. திருமணத்தின் நெகிழ்ச்சியான தருணங்கள் புகைப்படங்களாக எடுக்கப்படாது என்பதை மணமகளின் மனம் ஏற்றுக்கொள்ளவில்லை.
மாப்பிள்ளை வீட்டுக்காரர்களும் பெண் வீட்டுக்காரர்களும் முயற்சி செய்தும் மணமகளைத் திருமணத்துக்கு ஒத்துக்கொள்ள வைக்க முடியவில்லை. மணமகனை விடப் புகைப்படங்களே முக்கியம் என முடிவு செய்துவிட்டார் மணமகள்.
மணமகன் ஒருவர் போனால் இன்னொருவர் வரலாம். ஆனால் கல்யாணம் ஒரு முறை தானே என அவர் நினைத்திருக்கலாம். இது குறித்து மணமகள், “வாழ்க்கையில் முக்கியமான இந்த நாளைப் பற்றி கவலை இல்லாதவர், எதிர்காலத்தில் என்னை எப்படி நன்றாகப் பார்த்துக்கொள்வார்?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
பெரியவர்கள் எவ்வளவு கேட்டும் மணமகள் தனது முடிவை மாற்றிக்கொள்ளாததால் இந்த சம்பவத்தில் காவல்துறையினரும் குறுக்கிட வேண்டியதாயிற்று. காவல்துறையில் இந்த விவகாரம் பேசப்பட்டு இரு குடும்பத்தினரும் பணத்தைத் திரும்பக் கொடுத்து பெற்றுக்கொண்டு சுமூகமாக கல்யாணத்தை நிறுத்திக் கொண்டனர்.
ப்ரீ வெட்டிங், போஸ்ட் வெட்டிங், பிரக்னன்சி போட்டோகிராபி என புகைப்படங்கள் வாழ்க்கையில் முக்கிய இடம் பிடிக்கும் இந்த காலத்தில் புகைப்படமே எடுக்காமல் கல்யாணம் நடத்த துணிந்த மாப்பிள்ளைக்கு இப்படி ஒரு நிலை வரும் என புகைப்படக்காரர்கள் கூட நினைத்திருக்க மாட்டார்கள்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust