மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த கல்பனா என்பவர் 53 வயதை எட்டிய நிலையில் தனது பள்ளிப் படிப்பு கனவை நிறைவேற்றி உள்ளார். கல்பனாவின் 16 வயதில் தந்தை இறந்து போனதால் குடும்ப சூழ்நிலை காரணமாகப் பள்ளிப்படிப்பைப் பாதியிலேயே நிறுத்தியுள்ளார்.
ஆனால் என்றாவது ஒருநாள் தனது பள்ளிப் படிப்பை முடிக்க வேண்டும் என்ற லட்சியத்தோடு வாழ்ந்த வந்துள்ளார் கல்பனா.
இதனால் 37 ஆண்டுகள் கழித்து, அரசின் இரவு நேரப் பள்ளிக்குச் சென்று தேர்வுக்குத் தயாராகியுள்ளார். தேர்வு எழுதி பத்தாம் வகுப்பில் 79.6 சதவீத மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சியடைந்துள்ளார்
இதுகுறித்து அவர் கூறுகையில் எனது கணவர் மற்றும் மகன்களுக்கும் தெரியாமல் இரவு நேரம் பள்ளிக்குச் சென்று தேர்வுகளுக்கு படித்ததாக அவர் தெரிவித்தார்.
பள்ளிப் படிப்பு கனவை 37 ஆண்டுகள் கழித்தும் நிறைவேற்றிய கல்பனாவை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust