Elon Musk: சீனாவிலும் ஒரு எலான் மஸ்க் ? காண விரும்பும் ட்விட்டர் சிஇஓ

சமீபத்தில் ட்விட்டர் நிறுவனத்தை சொந்தமாக்கிய எலான் மஸ்க், தன்னைப்போலவே உருவம் கொண்டவர் என்று கூறப்படும் சீனாவை சேர்ந்த யிலோங் மா நிஜம் எனில், அவரை சந்திக்க விரும்புவதாக தெரிவித்துள்ளார்.
Musk and his lookalike
Musk and his lookalikeTwitter
Published on

சமீபத்தில் ட்விட்டரை நிறுவனத்தை ஸ்பேஸ் X நிறுவனத் தலைவர் எலான் மஸ்க் விலைக்கு வாங்கியிருந்தார். அதன் பின் அவரது ட்விட்டர் பக்கம் எப்போதும் ஆக்டிவாக இருக்கிறது. தினம் அவரது ட்வீட்களுக்கு ரசிகர்களின் ரியாக்ஷன்ஸ் அனல் பறக்கும்.

இரு தினங்களுக்கு முன்பு "தான் மர்மமான முறையில் இறந்துவிட்டால்", உங்களை தெரிந்துகொண்டதில் மகிழ்ச்சி என்று பதிவிட்டிருந்தார். அதனை தொடர்ந்து அவரை பின் தொடர்பவர்கள் வேடிக்கையான கேள்விகளைக் கேட்க அதற்கு அசராமல் பதிலளித்துக்கொண்டிருந்தார் மஸ்க். இதில், "நீங்கள் அப்படி இறந்துவிட்டால், ட்விட்டரை நான் எடுத்துக்கொள்ளலாமா?" என்ற கேள்வியும் அடங்கும்.

இவ்வாறான ஒரு துர்ச்சம்பவத்தை பற்றி பேசியதற்கு, தன் தாயிடம் திட்டும் வாங்கி, அதற்கு மன்னிப்பும் கேட்டிருந்தார் மஸ்க்!

Musk's Tweet
Musk's TweetTwitter

இப்படி ஒரு புறம் இருக்க, இப்போது இணையத்தில் வைரல் ஆகி வருபவர் எலான் மஸ்க் மட்டுமல்ல! அச்சு அசலாக அவரைப் போலவே காட்சியளிக்கும் சீனாவை சேர்ந்த யிலோங் மாவும் தான். சொல்லப்போனால், மஸ்க்கை விட இவரை பற்றிய பேச்சு தான் இப்போது அதிகமாக இருக்கிறது. இந்த விஷயம் ட்விட்டர் தலைவரின் காதுகளை எட்ட, யிலோங் மா ஒருவேளை நிஜம் என்றால் அவரை நேரில் சந்திக்க விரும்புவதாக கூறியுள்ளார் அவர்.

இந்த சீனாவைச் சேர்ந்த யிலோங் மா யார்?

இவர் டோயின் எனப்படும் சீன டிக் டாக் பிரபலம். இவரது வீடியோக்கள் இணையத்தை கலக்க, பலரும் இவர் எலான் மஸ்க் தானோ என்ற சந்தேகம் எழுந்துள்ளதாகக் கூறிவந்தனர். மேலும் சிலர் இந்த மஸ்க் லுக் அலைக்-கை பிஸினஸ் டீல்களுக்கு தூண்டில் ஆக பயன்படுத்தலாம் என்றும் விளையாட்டாகக் கூறிவந்தனர். சீனாவின் எலான் மஸ்க் என்றே பெயர் சூட்டப்பட்ட யிலோங்கை பார்த்துவிட்டு, ஒருவேளை தானும் ஏதாவது விதத்தில் சீனாவை சேர்ந்தவனாக இருக்கலாம் என்றும் மஸ்க் ட்வீட் செய்திருந்தார்.

Yilong Ma
Yilong MaTwitter

"இவர் நிஜமெனில் நான் இவரை காண விரும்புகிறேன். இந்நாட்களில் போலிகளைக் கண்டுகொள்வது எளிதல்ல" என்றும் ட்வீட் செய்திருந்தார் மஸ்க். ஆனால் யிலோங் மா, மஸ்க் தான் தன் ஹீரோ என்று, அந்நாட்டு ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளமான வீபோவில் (Wiebo) பதிவிட்டிருந்தார்.

டீப்ஃபேக்(Deepfake) என்பது ஒரு மேம்பட்ட தொழில்நுட்பமாகும். இது ஒரு பொது நபரின் முகத்தை மற்றொரு நபரின் மீது வைப்பதற்கு, ஒரு வீடியோவில் மாற்றத்தைச் செய்ய யாரையும் அனுமதிக்கிறது. போலி செய்திகளைப் பரப்ப அல்லது ஒரு தொந்தரவை உருவாக்க இந்த தொழில்நுட்பத்தைத் தவறாகப் பயன்படுத்தலாம் என்பதால் பல நாடுகள் இதை தடை செய்ய முயற்சிகளை முடுக்கிவிட்டுள்ளன.

Musk and his lookalike
Elon Musk : ட்ரம்பின் ட்விட்டர் கணக்கு மீதான தடையை நீக்குவேன் - எலான் மஸ்க்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com