அமெரிக்காவில் கடந்த ஆண்டு ஜனவரி 6ஆம் தேதி நடைபெற்ற வன்முறையை அடுத்து முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்பின் டிவிட்டர் கணக்கு முடக்கப்பட்டது.
மேலும், வன்முறை தொடர்பாக தவறான தகவல்களைப் பரப்பிய, 70,000க்கும் மேற்பட்ட டிவிட்டர் கணக்குகளுக்கு தடை விதிக்கப்பட்டது.
இதற்கிடையில் தடை செய்யப்பட்ட டிரம்பின் டுவிட்டர் கணக்கை மீட்டெடுக்கக் கோரி வழக்கு தொடரப்பட்டது.
டொனால்ட் டிரம்பின் டிவிட்டர் கணக்கு மீதான தடையை நீக்கக் கோரிய மனு நேற்று விசாரணைக்கு வந்தது.ஆனால், வழக்கை விசாரித்த நீதிபதி, டிரம்ப் தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
இதனால் அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்பால் டிவிட்டரை பயன்படுத்த முடியாத நிலை தொடர்ந்து நீடிக்கிறது.
இந்நிலையில் ட்ரம்பின் டிவிட்டர் கணக்கு மீதான தடையை நீக்குவேன் என எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
மேலும் டிவிட்டரில் இருந்து டொனால்ட் டிரம்ப் தடைசெய்யப்பட்டது முழுக்க முழுக்க முட்டாள் தனமான முடிவு என்றும் தெரிவித்துள்ளார்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp