வெயிலைச் சமாளிக்க நைட்டி அணியும் ஆண்கள் - எங்கு தெரியுமா?

இங்கிலாந்து மக்களை வெயில் அவதிக்குள்ளாக்கி வருவதால், டிவிட்டரில் இந்த கடும் வெயிலினை சமாளிக்க என்ன செய்யவேண்டும் என்று 10 டிப்ஸ் தந்துள்ளார் ஜில் டமாடாக் என்ற ஃபிலிப்பைன் நாட்டு எழுத்தாளர்.
Duster Dress
Duster DressTwitter
Published on

கடும் வெயிலில் தங்கள் உடல் வெப்பநிலையை கூலாக வைத்துக்கொள்ள, நைட்டி அணியுமாறு ஒருவர் டிவிட்டரில் பகிர்ந்துள்ள பதிவு தற்போது இணையத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.


இங்கிலாந்தில் நிலவி வரும் கடும் வெயிலின் காரணமாக மக்கள் தங்களை கூலாக வைத்துக்கொள்ளப் பல முயற்சிகளை செய்து வருகின்றனர். இந்நிலையில், ஃபிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த எழுத்தாளர் ஒருவர் கூறியுள்ள அட்வைஸ் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

எப்போதுமே மழைக்காலமாக இருக்கும் இங்கிலாந்து நாட்டில் கடந்த சில நாட்களாக கடும் வெயில் சுட்டெரிக்கிறது. இதனால் அங்குள்ள மக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். வணிக வளாகங்கள் நீண்ட நேரம் திறந்திருப்பது, நீச்சல் குளங்களில் குளிக்கும் நேரத்தை நீட்டிப்பது, சினிமா தியேட்டரில் இலவசமாக ஏசியில் உட்கார்ந்து படம் பார்த்துக்கொள்ளலாம் போன்ற சலுகைகள் அங்கு கொடுக்கப்பட்டு வருகின்றன.

அவற்றையும் மீறி இங்கிலாந்து மக்களை வெயில் அவதிக்குள்ளாக்கி வருவதால், டிவிட்டரில் இந்த கடும் வெயிலினை சமாளிக்க என்ன செய்யவேண்டும் என்று 10 டிப்ஸ் தந்துள்ளார் ஜில் டமாடாக் என்ற ஃபிலிப்பைன் நாட்டு எழுத்தாளர்.

Duster Dress
வெயிலை சமாளிக்க என்னென்ன சாப்பிடலாம்? எவற்றை தவிர்க்கலாம்

அதில் அவர் கூறியிருக்கும் முதல் விஷயம், நைட்டி அணியவேண்டும் என்பது தான்!

ஆம், லூஸான காட்டன் அல்லது லினெனினால் ஆன ஆடைகளை அணியவேண்டும். ஆண்கள் கூட இந்த புதிய விதமான ஆடையை அணியலாம் என்றும் அவர் கூறியிருந்தார். இந்த நைட்டி போன்ற ஆடையை ஃபிலிப்பைன்ஸில் டஸ்டர் டிரெஸ் (Duster Dress) என்று அழைக்கின்றனர்.

காலை பத்து மணி முதல் மாலை நான்கு மணி வரை எங்கும் அசையாமல் இருக்கவேண்டும். எந்த வேலையும் செய்யக்கூடாது. அனைத்து ஜன்னல் கதவுகளையும் திறந்து வைத்துவிட்டு டிவியில் தொடரை பார்க்கவேண்டும்

இப்படி இந்த வெப்பத்தைச் சமாளிக்க மொத்தம் 10 டிப்ஸை ஒவ்வொரு பதிவாக ஜில் பகிர்ந்திருந்தார்.

இவர் சொல்லியிருந்த மற்ற டிப்ஸை விட, நைட்டி அணிவது சிறந்தது என்ற டிப் தான் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது

பின்னர் சரியாக ஃபேனுக்கு நேராக படுத்துக்கொண்டு சோபாவில் உறக்கம், எழுந்தவுடன் குளிர்ந்த தண்ணீரில் குளியல், அதற்கு பிறகு உடலை கூலாக வைத்துக்கொள்ள டாஹோ என்றழைக்கப்படும் அவர்களது ஊரின் ஒரு இனிப்பு வகையைச் சாப்பிடச் சொல்கிறார். ஒரு வேளை டாஹோ வேண்டாம் என்றால் ஐஸ் டீ தான்!

இரவு உணவை முடித்துவிட்டு, மீண்டும் ஒரு முறை குளித்து சிறுவயதில் நம் Cousinகளுடன் ஒன்றாக படுத்து உறங்கியது போல தரையிலேயே படுத்து உறங்கிவிடுங்கள் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.


மேலும் இரண்டு இளைஞர்கள் டஸ்டர் டிரெஸ் என்றழைக்கப்படும் நைட்டியை அணிந்துக்கொண்டு போஸ் செய்யும் புகைப்படத்தையும் அவர் பகிர்ந்திருந்தார். தற்போது இந்த பதிவு வைரலாகி வருகிறது. இதை பலரும் ரீஷேர் செய்து, மிகச் சரியான அட்வைஸ் என்றும் பாராட்டி வருகின்றனர்

Duster Dress
'ஏசி தியேட்டரில் இலவசமாக படம் பார்க்கலாம்' ஆனால் ஒரு கண்டிஷன் - என்ன அது?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com