'ஏசி தியேட்டரில் இலவசமாக படம் பார்க்கலாம்' ஆனால் ஒரு கண்டிஷன் - என்ன அது?

மால்களில் நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. நீச்சல் குளங்களில் குளிக்க டிஸ்கவுன்ட்கள், ஆஃபர்களும் வழங்கப்படுகின்றன. இதே போல ஒரு திரையரங்கத்தில் மக்கள் இலவசமாக ஏசியில் உட்கார்ந்து படம் பார்க்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதற்கொரு நிபந்தனையை வைக்கிறது திரையரங்கம்.
Theatre
TheatrePexels
Published on

நமக்கு எந்த பருவ நிலையும் முழு திருப்தியை தராது தான். மழையும் குளிரும் அதிகமாக இருந்தால், வெயில் எப்படா வரும் என்பது போல நமக்கு தோன்றும். வெயிலின் தாக்கம் சற்று அதிகமானால் குளிர்காலம் வேண்டி காத்திருக்கத் தொடங்குவோம்.

அதிகபட்ச வெயிலினை சமாளிக்க, ஏர் கூலர், ஏசி போன்ற சாதனங்களின் பயன்பாடு சமீபகாலங்களில் வீடுகளிலும், வெளியிடங்களிலும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், மழைக்காலமாகவே இருக்கும் பிரிட்டனில் தற்போது வெயில் அதிகமாக உள்ளது. உள்ளூர் வானிலை ஆய்வு மையம் ஜூலை 18 ஆம் தேதி இதுவரை இல்லாத அளவு வெப்பம் அதிகமாக இருக்கும் என்று கணித்துள்ளது.

மேலும் இங்கிலாந்தில் உள்ள பல இடங்களில் வெப்ப நிலை 40 டிகிரியைத் தொட்டதால் ரெட் அலெர்ட்டும் விடுத்திருந்தது வானிலை மையம்.

Heatwave
HeatwavePexels

வெயிலை எதிர்கொள்ள மக்கள் பல யுக்திகளை கையாண்டு வரும் நிலையில், அங்குள்ள வணிக நிறுவனங்களும் வெயிலை எதிர்கொள்ள சில ஏற்பாடுகளை செய்து வருகிறது. மால்களில் நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. நீச்சல் குளங்களில் குளிக்க டிஸ்கவுன்ட்கள், ஆஃபர்களும் வழங்கப்படுகின்றன.

இதே போல ஒரு திரையரங்கத்தில் மக்கள் இலவசமாக ஏசியில் உட்கார்ந்து படம் பார்க்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதற்கொரு நிபந்தனையை வைக்கிறது திரையரங்கம்.

Theatre
Summer Skin Care: சன்ஸ்க்ரீன் பயன்படுத்துவது நல்லதா? எப்படி பயன்படுத்துவது?

பிரிட்டனில் உள்ள ஷோகேஸ் சினிமாஸ் என்ற திரையரங்கம் வெப்பம் அதிகமாக இருக்கும் நாட்களில் பொதுமக்கள் இலவசமாக அங்கு வந்து ஏசியில் உட்கார்ந்து படம் பார்க்கலாம்.

ஆனால், வருபவர்களின் தலைமுடி நிறம் சிவப்பாக இருந்தால் மட்டுமே இந்த சலுகை அவர்களுக்கு கிடைக்கும். வருபவர்கள் பிரிட்டனை சேர்ந்தவர்களாக இருந்தாலுமே, அவர்கள் 'ரெட் ஹெட்' இல்லையென்றால், திரையரங்கில் இலவச அனுமதி கிடையாது. என்பது தான் அந்த நிபந்தனை.

Red Head
Red HeadPexels
Theatre
பிரிட்டன் மக்கள் மூதாதையர்கள் கருப்புத் தோல் கொண்டவர்கள் - ஆச்சர்ய ஆய்வு முடிவு

அந்த திரையரங்கின் மேலாளர் கூறுகையில், "இங்கிலாந்தில் மக்கள் வெயிலை எதிர்பார்க்கிறார்கள் தான் என்றாலும், சிலருக்கு அதை எதிர்கொள்வதில் கஷ்டம் இருக்கத்தான் செய்கிறது" என்றார்

இந்த அதிக வெயிலை எதிர்கொள்ளத் தான் அவர்கள் இப்படி ஒரு சலுகையைத் தருவதாக அவர் கூறினார். இந்த சலுகை வரும் திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமை, இரண்டு நாட்களுக்கு இருக்கும் என்று அவர் தெரிவித்தார்.

Theatre
ஆடம்பர ஹோட்டலில் இலவசமாக தங்கலாம் ஆனால் ஒரு கண்டிஷன் - என்ன? எங்கே?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com