தலையில் சூட்கேஸை பேலன்ஸ் செய்துகொண்டு சைக்கிள் ஓட்டும் நபர்- வைரல் வீடியோ

சாதாரணமாக வண்டியோ சைக்கிளோ ஓட்டும்போதே நாம் பார்த்து செல்லவேண்டியுள்ள நிலையில், இவர் தலையில் பெட்டியுடன், எதிரே வந்த தடுப்பை லாவகமாக அதன் மேல் மோதாமல் வளைந்து கடந்து சென்றார். இது அவரது அதீத திறனை குறிக்கும் வண்ணம் இருப்பதாக பலரும் பாராட்டி வருகின்றனர்.
Cyclist(rep)
Cyclist(rep)Pexels
Published on

நியூயார்க்கின் ப்ரூக்லின் பகுதியில், தலையில் சூட்கேஸை வைத்துக்கொண்டு ஒருவர் சைக்கிள் ஓட்டும் வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

அவர் அந்த சூட்கேஸை கயிறோ அல்லது வேறு எந்த பிடிப்போ வைத்துக் கட்டவில்லை. அதை முழுக்க முழுக்க தன் தலை மேல் வைத்து பேலன்ஸ் செய்துகொண்டு சைக்கிளை ஓட்டிச்செல்கிறார்.

இந்த வீடியோ யூடியூபின் ஸ்டோரிஃபுல் என்ற சேனலில் பகிரப்பட்டு பலரது கவனத்தை ஈர்த்து வருகிறது. தலையில் சூட்கேஸை நின்ற வாக்கில் வைத்து சைக்கிளை மிதிக்கும் அவர், "என்னால் முடியும், நான் பார்த்துக்கொள்கிறேன்" என்று சாலையில் நின்றிருந்தவர்களிடம் சொல்லிக்கொண்டே அவர் முன்னோக்கி சென்றார்.


சாதாரணமாக வண்டியோ சைக்கிளோ ஓட்டும்போதே நாம் பார்த்து செல்லவேண்டியுள்ள நிலையில், இவர் தலையில் பெட்டியுடன், எதிரே வந்த தடுப்பை லாவகமாக அதன் மேல் மோதாமல் வளைந்து கடந்து சென்றார். இது அவரது அதீத திறனை குறிக்கும் வண்ணம் இருப்பதாக பலரும் பாராட்டி வருகின்றனர்.

இதற்கு முன்னர் இதேபோல் தலைமேல் துணிகளை வைத்துக்கொண்டு சைக்கிள் ஓட்டி சென்ற வீடியோ இணையத்தில் வைரல் ஆனது.

இதை பகிர்ந்த ஆனந்த் மஹிந்திரா, இவர்களை போல திறமைசாலிகள் நம் நாட்டில் நிறைய இருந்தும், பல காரணங்களால் அறியப்படாமலோ, அல்லது உரிய அங்கீகாரம் கிடைக்காமலோ இருந்து விடுகின்றனர் என்பது வருத்தமளிக்கிறது என்று சொல்லியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Cyclist(rep)
உலகின் ஆபத்தான ரயிலில் ஹனிமூன் ஃபோட்டோஷூட் நடத்திய ட்ராவலர் தம்பதி - வைரல் புகைப்படங்கள்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com