கணவரின் மறுபிறவி என நம்பி நாகப்பாம்புடன் 4 நாட்கள் வாழ்ந்த பெண்மணி

வீட்டினுள் நுழைந்த நாகப்பாம்பு அப்படியே அங்கு விரிக்கப்பட்டிருந்த பாயில் வந்து அமர்ந்திருக்கிறது. அந்த மூதாட்டி இந்த நாக பாம்பை கணவனின் மறுபிறவி என்று எண்ணி நான்கு நாட்கள் அதற்குப் பால் ஊற்றி அதனுடனே தங்கி வந்துள்ளார்.
Saravva Kambara
Saravva KambaraTwitter
Published on

கர்நாடக மாநிலம், பாகல்கோட்டை மாவட்டத்தின் குலஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த மூதாட்டி சரவ்வா கம்பரா (வயது 55). இவரின் கணவர் மோனேஷ் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் உடல்நலக் குறைவு காரணமாக இறந்துவிட்டார்.

இந்நிலையில் மூதாட்டி தனியாக வீட்டில் இருந்த போது நாகப்பாம்பு ஒன்று நுழைந்துள்ளது. இதனைக் கண்டு முதலில் அச்சப்பட்ட மூதாட்டி, நாகப் பாம்பின் செய்கை கண்டு சற்று அமைதி காத்தார்.

வீட்டினுள் நுழைந்த நாகப்பாம்பு அப்படியே அங்கு விரிக்கப்பட்டிருந்த பாயில் வந்து அமர்ந்தது. மூதாட்டி அந்த நாக பாம்பை கணவனின் மறுபிறவி என்று எண்ணி நான்கு நாட்கள் அதற்குப் பால் ஊற்றி அதனுடனே தங்கி வந்துள்ளார்.

Saravva Kambara
நாய்க்கு தங்க சிலை : வட கொரியா கிம் -ஐ தெரியும் இந்த துர்க்மெனிஸ்தான் அதிபரை தெரியுமா?
Snake
SnakeTwitter

பக்கத்து வீட்டில் இருக்கும் பெண்மணி ஒருவர் மூதாட்டியின் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது பாம்பைக் கண்டு அச்சப்பட்டுக் கத்தியுள்ளார். அதற்கு அந்த மூதாட்டி அது ஒன்றும் செய்யாது, தனது கணவரின் மறுபிறவி என்று கூறியுள்ளார். இதனைக் கேட்ட பக்கத்து வீட்டுப் பெண்மணி அதிர்ச்சி அடைந்துள்ளார்.

இதனை அறிந்த அப்பகுதி மக்கள் பாம்பைப் பிடிக்க முயன்றபோது, மூதாட்டி அவர்களைத் தடுத்துள்ளார். அதனைத் தொடர்ந்து வனத்துறை மற்றும் காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. மூதாட்டியிடம் கிராம மக்கள் விளக்கம் அளித்த பின்னர் அவர் பாம்பைப் பிடித்துச் செல்ல அனுமதித்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Saravva Kambara
Vava Suresh: 50 ஆயிரம் பாம்புகளை பிடித்தவரின் தற்போதைய நிலை என்ன?|யார் இந்த வாவா சுரேஷ்?
Charn Janwatchakal
Charn JanwatchakalTwitter

இதே போன்று, தன்னுடன் வாழ்ந்து மறைந்த துணையின் மீதான அதீத காதலால், தாய்லாந்தில் 21 ஆண்டுகள்,மனைவியின் இறந்த சடலத்துடன் 72 வயது முதியவர் ஒருவர் வாழ்ந்து வந்த சம்பவம் அனைவரையும் நெகிழ்ச்சியடைய செய்தது.

Saravva Kambara
கரடியின் சாணத்தில் தயாரிக்கப்படும் டீ - இவ்வளவு Demand ஆ ?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com