தொடர் மின்வெட்டு - தோனியின் மனைவி சாக்‌ஷி மாநில அரசுக்கு கேள்வி

ஜார்க்கண்ட் மாநிலத்தில் மின் வெட்டு நிலவுவது குறித்து தோனியின் மனைவி சாக்‌ஷி தனது ட்விட்டர் பக்கத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.
Sakshi
SakshiTwitter
Published on

நாட்டில் உள்ள மின் உற்பத்தி நிலையங்களில் நிலக்கரி தட்டுப்பாடு நிலவுகிறது. இதன் எதிரொலியால், பல்வேறு மாநிலங்களில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுகிறது. கோடைக் காலம் என்பதால் மக்கள் கூடுதலாக அவதிப்படுகின்றனர்.

இந்நிலையில், நிலக்கரி தட்டுப்பாடு பிரச்சினைக்கு மத்தியில் ஜார்கண்ட் மாநிலத்தில் நிலவி வரும் மின் நெருக்கடி தொடர்பாக இந்திய கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனியின் மனைவி சாக்‌ஷி சிங் அம்மாநில அரசுக்குக் கேள்வி எழுப்பியுள்ளார்.

தனது ட்விட்டர் பதிவில் `மின்சாரத்தைச் சேமிக்க எங்களது கடமையைத் தொடர்ந்து செய்து வருகிறோம். இருந்தபோதிலும் ஜார்க்கண்ட் மாநிலத்தில் பல ஆண்டுகளாக ஏன் மின் வெட்டு நிலவுகிறது? பல ஆண்டுகளாக வரி செலுத்துபவராக இந்த கேள்வியை அரசிடம் கேட்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவு இணையத்தளத்தில் தீயாய் பரவி வருகிறது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Sakshi
அமெரிக்கா : ஒரு நாள் மேயராக பதவி வகித்த பூனை - எப்படி சாத்தியம் ?

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com