முதியவருக்கு உதவிய காவல் அதிகாரி - நெகிழ வைக்கும் வீடியோ இணையத்தில் வைரல்

உத்தரப் பிரதேச காவல்துறை அதிகாரி ஒருவர் தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து "மிக அழகான, பாராட்டிற்குரிய செயல். நாங்கள் எப்போதும் உங்களுடன் இருப்போம்" என்று பதிவிட்டு பகிர்ந்திருந்தார்.
Cop helps cart-puller
Cop helps cart-pullerTwitter
Published on

வெறும் காலில் நடக்கும் முதியவருக்கு காவல்துறை அதிகாரி ஒருவர் காலணிகள் வாங்கி கொடுக்கும் வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

"காவல்துறை உங்கள் நண்பன்" என்று சொல்வது வெறும் வாய்ச்சொல் அல்ல என்பதை நிரூபிப்பது போல பல சம்பவங்கள் அங்கும் இங்குமாக நடந்துக்கொண்டு தான் இருக்கிறது.


சமீபத்தில் போக்குவரத்துதுறை காவலர் ஒருவர் கையில் சீமாரை எடுத்துக்கொண்டு சாலையை சுத்தம் செய்த வீடியோ அதிகளவில் பகிரப்பட்டு பலரது பாராட்டையும் அன்பையும் சம்பாதித்தது. மற்றோரு காவலர் ஒரு பள்ளிக் குழந்தைக்கு பாடம் சொல்லிக்கொடுத்த வீடியோவையும் நாம் பார்த்திருப்போம்.

Police Officer
Police OfficerPexels

இப்போது மேலும் ஒரு காவலர், இதே போன்ற ஒரு நற்செயலால் நம் மனங்களில் நீங்கா இடம் பிடித்திருக்கிறார். ஒரு தள்ளு வண்டியை ஓட்டிக்கொண்டு செல்லும் முதியவர் வெறும் காலில் சாலையில் நடந்து செல்கிறார்.

அவரை அழைத்த காவல் துறை அதிகாரி, அந்த முதியவருக்கு காலணிகளை வழங்குகிறார். இதற்கு அந்த முதியவரும் காவல் அதிகாரிக்கு நன்றி சொல்லும் வீடியோ தான் அது.

உத்தரப் பிரதேசத்தின் காவல்துறை அதிகாரி ஒருவர் தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து "மிக அழகான, பாராட்டிற்குரிய செயல். நாங்கள் எப்போதும் உங்களுடன் இருப்போம்" என்று பதிவிட்டு பகிர்ந்திருந்தார்.


காவலரின் இந்த செயல் நெகிழ்ச்சியடையச் செய்துள்ளது. டிவிட்டரின் கமென்ட் செக்ஷனில் இதயம் தொட்ட இந்த செயலுக்கு தங்களின் இதயங்களை பகிர்ந்து வருகின்றனர்.

அதிலும் மற்றொருவர் " இவ்வுலகில் மிக உயர்ந்த செயல், மனிதனுக்கு செய்யும் உதவி தான் " என்று கமென்ட் செய்திருந்தார்.

இரன்டு லட்சம் பார்வைகளை கடந்த இந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

Cop helps cart-puller
சாலையை சுத்தம் செய்யும் டிராஃபிக் போலீஸ் : வைரலாகும் வீடியோ - என்ன, எங்கே, ஏன்?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com