செலவை குறைப்பதற்காக நாய் உணவை சாப்பிடும் கல்லூரி மாணவர் - ஷாக்கான இணையவாசிகள்

இது குறித்து அவர் ரெட்டிட் தளத்தில், "நான் மிகவும் மனமுடைந்து விட்டதால் நாய் உணவை உண்கிறேன்" என எழுதியுள்ளார். "நான் இது வரை காய்ந்த நாய் உணவை மட்டுமே உண்கிறேன். ஈரமான உணவை உண்ண முயற்சி செய்ததில்லை" என்றும் குறிப்பிட்டுள்ளார்.
Dog Food
Dog FoodCanva
Published on

நமது வாழ்க்கையில் உணவு, உடை, இருப்பிடம் ஆகியவை அடிப்படைத் தேவைகளாக வரையறுக்கப்பட்டுள்ளன. ஆனால் இவற்றை பூர்த்தி செய்து கொள்ளவே நாம் ஆயுள் முழுக்க போராட வேண்டிய சூழல் இருக்கிறது. சமீபத்தில் ஒரு ஆய்வு இந்தியர்கள் பலர் தங்களது தினசரி தேவைகளை நிறைவு செய்த பின்னர் சரியாக உணவருந்தக் கூட முடியாத பொருளாதார நிலையில் இருப்பதாகக் கூறியது.

சாதாரண மனிதர்களை விட கல்லூரி மாணவர்களுக்கு இந்த பொருளாதார அழுத்தம் எப்போதும் அதிகமாக இருக்கும். தங்களது வருமானம் தினசரி தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ள முடியாத சூழலில் மனிதர்கள் இரண்டு விதமான முடிவுகளை எடுப்பர். ஒன்று அதிக நேரம் உழைப்பது. மற்றொன்று தேவைகளை குறைத்து அல்லது வேறு வழிகளைப் பயன்படுத்தி வாழ்க்கைமுறையை சிக்கனமாக்குவது. இதில் இரண்டாவது வழியைத் தேர்வு செய்திருக்கிறார் கல்லூரி மாணவர் ஒருவர்.

மறைத்து உண்ணும் பழக்கம்

தனது தினசரி சுழற்சியை சிக்கனமானதாக மாற்ற, காலை, மதியம் அல்லது இரவில் நாய் உணவை உண்ணத் தொடங்கியிருக்கிறார் அந்த மாணவர்.

அக்கம் பக்கத்தினர் இவர் ஏன் நாய் உணவு கவர்களை வைத்திருக்கிறார் என கேள்வி எழுப்பியதால் யாருக்கும் தெரியாமல் மறைத்து உண்ணத் தொடங்கியிருக்கிறார்.

இது குறித்து அவர் ரெட்டிட் தளத்தில், "நான் மிகவும் மனமுடைந்து விட்டதால் நாய் உணவை உண்கிறேன்" என எழுதியுள்ளார். "நான் இது வரை காய்ந்த நாய் உணவை மட்டுமே உண்கிறேன். ஈரமான உணவை உண்ண முயற்சி செய்ததில்லை" என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Dog Food
உணவு அரசியல் : ஆரோக்கியமான உணவு இன்றி தவிக்கும் 70% இந்தியர்கள் - என்ன நடக்கிறது இங்கே?
Dog Food
Dog FoodCanva

நாய் உணவை உண்ணும் பழக்கம்

ஒரு நாளில் அவரது நண்பன் சவாலாக கொஞ்சம் நாய் உணவை உண்ண சொல்லியிருக்கிறார். அப்போது அவற்றை சாப்பிட்டபின் அதன் ருசி அவருக்கு பிடித்திருக்கிறது.

"நான் நாய் உணவை தினசரி உண்ணுவது குறித்து என் நண்பனிடம் கூறினேன்" என தெரிவித்த அவர், தனது நண்பன் மிக மோசமாக பதிலளித்தாக கூறினார்.

Dog Food
நாய் வளர்க்குறீங்களா? இந்த 10 விஷயத்தைக் கண்டிப்பாக தெரிஞ்சுக்கங்க

ஷாக்கான சமூக வலைத்தளம்

மாணவரின் இந்த பதிவுக்கு சமூக வலைத்தளங்களில் பலரும் கருத்துக்களைப் பதிவிட்டு வருகின்றனர். "இப்படி உண்பதனால் எந்த சத்தும் கிடைக்காது.

பொதுவாக விலை மலிவான நாய் உணவுகள் எந்த சத்தும் கொண்டிருக்காது" என ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார்.

"நாய் உணவில் மனிதர்கள் சாப்பிடும் பொருட்கள் இருக்காது. இது பெரும்பாலும் கோழி எலும்புகள், இறகுகள் போன்ற தரையில் கிடக்கும் விலங்கு பாகங்களைக் கொண்டிருக்கும்." என மற்றொருவர் கூறினார்.

நாய் உணவை உண்பது விஷமல்ல. ஆனால் விலை உயர்ந்த நாய் உணவை முயற்சிக்கலாம் என சிலரும், அரிசி போன்ற விலை மலிவான உணவுப் பொருளை பயன்படுத்துமாறு பலரும் கூறினர்.

Dog Food
Depression - மன அழுத்தம் தப்பிப்பது எப்படி? | Nalam 360

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com