Swiggy : குதிரையில் சென்று உணவு டெலிவரி செய்யும் ஸ்விக்கி ஊழியர் - வைரல் வீடியோ

ஸ்விக்கி ஊழியர் ஒருவர் குதிரையில் சவாரி செய்தபடி வாடிக்கையாளர்களுக்கு உணவு டெலிவரி செய்யும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
swiggy employee
swiggy employeeTwitter
Published on

பொதுவாக வட மாநில திருமணங்களில், குதிரைகள் இடம்பெறும். அதாவது மணமகன் திருமண நிகழ்விற்கு குதிரையில் வருவதைக் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் இங்கு ஒருவர் உணவு டெலிவரி செய்ய குதிரையில் செல்கிறார்.

மும்பையில் பெய்து வரும் கனமழையிலும் ஸ்விக்கி ஊழியர் ஒருவர் குதிரையில் சவாரி செய்தபடி வாடிக்கையாளர்களுக்கு உணவுப் பொருட்களைக் கொண்டு சேர்க்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Swiggy
SwiggyTwitter

ஸ்விக்கி டெலிவரி ஊழியரின் இந்த செயலை கண்ட இணையவாசிகள் பலரும், தங்களது கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

மும்பையில் கன மழை பெய்துவரும் நிலையில் இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு எச்சரிக்கை வெளியிட்டுள்ளது.

இதற்கிடையே இந்த கடும் மழை காரணமாக, மும்பை நகரின் கல்பாதேவி மற்றும் சியோன் பகுதிகளில் இரண்டு கட்டிடங்கள் இடிந்துள்ளன. ஆனால் அதிஷ்டவசமாக உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை.

swiggy employee
Food Delivery செய்யும் பெண்ணை தாக்கும் 4 பெண்கள் - வைரல் வீடியோ

இடிந்த கட்டிடங்களில் இருந்து மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாக கூறப்படுகிறது.

மும்பையில் வெள்ளம் காரணமாக தண்ணீர் அதிகம் தேங்கியுள்ள பகுதிகளில் பேருந்து மற்றும் இரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இத்தனை சவால்களுக்கு மத்தியில் அந்த ஸ்விக்கி ஊழியர் குதிரை மீது சென்று தனக்கு வரும் ஆர்டர்களை டெலிவர் செய்துவருவது பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது

swiggy employee
மணமகளின் காலில் விழுந்து ஆசி பெற்ற மணமகனுக்கு குவியும் பாராட்டுகள் - வைரல் வீடியோ

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com