குதிரையில் உணவு டெலிவரி செய்த ஸ்விக்கி ஊழியர் - கண்டுபிடித்து கொடுத்தால் ரூ.5000 சன்மானம்

அடையாளம் தெரியாத நபர் எங்கள் நிறுவன பேக்கை எடுத்துக்கொண்டு டெலிவரி செய்வது போன்ற வீடியோ இணையத்தில் வெளியானதையடுத்து, எங்களின் கவனத்திற்கு வந்துள்ளது.
swiggy employee
swiggy employeeTwitter
Published on

குதிரையில் அமர்ந்து உணவு டெலிவரி செய்த ஊழியரை கண்டுபிடித்துத் தருவோருக்கு ரூ 5000 சன்மானம் வழங்கப்படும் என ஸ்விக்கி தெரிவித்துள்ளது.

மும்பையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கொட்டும் மழையிலும் குதிரையில் அமர்ந்தபடி உணவு டெலிவரி வழங்கிய ஸ்விக்கி ஊழியரின் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலானது.

இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானதை தொடர்ந்து ஸ்விக்கி நிறுவனம் குதிரையில் அமர்ந்து உணவினை டெலிவரி செய்த நபரை சரியாக அடையாளம் காணமுடியவில்லை என்று கூறியுள்ளது.

இணையவாசிகள் மற்றும் உணவு பிரியர்களின் கவனத்திற்கு! யார் என்று அடையாளம் தெரியாத நபர் எங்கள் நிறுவன பேக்கை எடுத்துக்கொண்டு டெலிவரி செய்வது போன்ற வீடியோ இணையத்தில் வெளியானதையடுத்து, எங்களின் கவனத்திற்கு வந்துள்ளது.

swiggy employee
Swiggy , Zomatoல் இவ்வளவு பணம் இழக்கிறோமா? - இளைஞரின் கேள்விக்கு நிறுவனத்தின் பதில்

குதிரையில் சவாரி செய்தது யார் என்று கூறும் முதல் நபருக்கு ரூ.5000 வழங்க முடிவு செய்துள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும் தாங்கள் டெலிவரி வாகனங்களுக்கு பதிலாகக் குதிரைகள், கழுதைகள் அல்லது வேறு எந்த விலங்குகளையும் கொண்டுவர அனுமதிக்கவில்லை என்றும் ஸ்விக்கி தெளிவுபடுத்தியுள்ளனர்.

swiggy employee
Oyo, Ola, Swiggy - இந்த நிறுவனங்களின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com