இந்திய சாலையில் Tesla Car: ஆச்சர்யப்பட்ட தொழிலதிபர் - காத்திருந்த ட்விஸ்ட்!

தொழிலதிபர் அஷ்னீர் க்ரோவர் டெல்லியின் Karol Bagh பகுதியில் ஒரு டெஸ்லா காரை பார்த்து வியந்துள்ளார்.
இந்திய சாலையில் Tesla Car: ஆச்சர்யப்பட்ட தொழிலதிபர் - காத்திருந்த ட்விஸ்ட்!
இந்திய சாலையில் Tesla Car: ஆச்சர்யப்பட்ட தொழிலதிபர் - காத்திருந்த ட்விஸ்ட்!Twitter
Published on

இந்திய சாலையில் உங்களால் ஒரு டெஸ்லா காரை காண முடியும் என நினைக்கிறீர்களா? தொழிலதிபர் அஷ்னீர் க்ரோவர் டெல்லியின்  Karol Bagh பகுதியில் ஒரு டெஸ்லா காரை பார்த்து வியந்துள்ளார்.

ஆனால் கூர்ந்து பார்த்தபோதுதான் அது ஒரு கிராஸ்-பிரீட் டெஸ்லா கார் எனக் கண்டறிந்துள்ளார். அதனை உலகின் முதல் க்ராஸ் பிரீட் டெஸ்லா கார் என வர்ணித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

டெல்லியைச் சேர்ந்த யாரோ ஒருவர்  சீன எலெக்ட்ரிக் கார் உற்பத்தியாளர் BYD ஆட்டோ நிறுவனத்தின் காரை வாங்கி அதனை டெஸ்லா கார் போல வடிவமைத்துள்ளனர் எனக் கூறப்படுகிறது.

அஷ்னீர் க்ரோவர் மட்டுமல்லாமல் நெட்டிசன்களும் இந்த வடிவமைப்பை பார்த்து ஆச்சரியமடைந்துள்ளனர்.

டெஸ்லா உலகின் பிரபலமான கார் நிறுவனங்களில் ஒன்று. எலான் மஸ்க் தலைமையில் இயங்கும் நிறுவனம் இந்தியாவில் வர்த்தகத்தைத் தொடங்க பல காலமாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

இப்போதைக்கு டெஸ்லா கார்களை அதிக வரி செலுத்தி இறக்குமதி செய்ய மட்டுமே முடியும். அதனால் பெரும் பணக்காரர்கள் மட்டுமே வாங்க முடியும்.

இந்திய சாலையில் Tesla Car: ஆச்சர்யப்பட்ட தொழிலதிபர் - காத்திருந்த ட்விஸ்ட்!
கார், பைக்குகளை நாய்கள் துரத்துவது ஏன்?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com