இணையத்தில் வைரலாகும் இந்த வீடியோவில் ஒரு நாய் மூன்று புலிக் குட்டிகளுடன் ஆனந்தமாக விளையாடுகிறது. குழந்தைகள் சுறுசுறுப்பாக விளையாட அம்மாக்கள் அதனை ரசிப்பது வழக்கம். அந்த அம்மா வேறு இனத்தைச் சேர்ந்ததாக இருந்தாலும் அதே அன்புடன் குழந்தைகளைக் கவனித்து வருகிறது. இந்த நாய் அன்பு எல்லையற்றது என இந்த வீடியோக்கள் காட்டுகின்றன.
இந்த வீடியோ சீனாவில் எடுக்கப்பட்டது. இந்த குட்டி புலிகளின் தாய் இவற்றை சரியாக கவனிக்காமல் ஒதுக்கி வந்த நிலையில் நாய் அவற்றுக்கு தாயாக மாறியுள்ளது.
இன்ஸ்டாகிராமில் இந்த வீடியோ பதிவேற்றம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து நெட்டிசன்கள் கமண்ட்களில் அன்பைக் கொப்பளித்து வருகின்றனர்.
இதே போன்ற மற்றொரு வீடியோவும் சமீபத்தில் வைரலானது. அதில் ஒரு மனிதக் குரங்கு சிறிய சிங்கக்குட்டிக்குப் பாலூட்டியது. ஐஎஃபெஸ் சுசாதா நந்தா என்பவர் வெளியிட்ட அந்த வீடியோவில் மனிதர்களைப் போலப் பால் புட்டியைப் பிடித்துப் பாலூட்டும் குரங்கு அதன் நெற்றியில் முத்தமிடுகிறது.
அந்த வீடியோவில் “வளர்ப்புத் தாயின் முடிவில்லா முத்தம்” எனத் தலைப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோவில் நேரம் மற்றும் இடம் குறிப்பிடப்படவில்லை இது போன்ற வேறு இனத்துத் தாயால் வளர்க்கப்படும் விலங்குகள் குறித்த வீடியோக்கள் அடிக்கடி இணையத்தில் வைரலாகின்றன.
இந்த வீடியோக்கள் நமக்குக் கூறுவது, “ஒரு உயிருக்கு பெற்றோராக இருக்க DNA-வை விட அன்பு தான் அவசியம்” என்பது தான். இவற்றைத் தான் வள்ளுவர் அப்போதே “அன்பிற்குமுண்டோ அடைக்கும் தாழ்” எனக் கூறினார் என்றால் மிகையாகாது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp