கிரண் பேடி முதல் அமிதாப் பச்சன் வரை : பிரபலங்கள் பகிர்ந்த போலிச் செய்திகள் | Fact Check

மெத்தப் படித்தவர்கள், இந்தியாவின் ஆதர்ச நாயகர்களாகத் திகழ்பவர்கள், உலகமே கொண்டாடும் கலைஞர்கள் எல்லாம் கூட தங்களுக்கு வரும் விஷயங்களின் உண்மைத்தன்மையைச் சரிபார்க்காமல், அதைப் பொதுவெளியில் தங்கள் சமூக ஊடகங்களில் பகிர்வது தான் சோகத்திலும் சோகம்.
பிரபலங்கள்
பிரபலங்கள்Twitter

'பால 70 டிகிரி செல்ஷியஸுக்கு மேல கொதிக்க வைக்க கூடாதுன்னு பத்தமடை ஐஐடில ஆராய்ச்சி பண்ணி சொல்லி இருக்காங்க தெரியுமா..?' என ஒரு அறிவாளி வாட்ஸ் ஆப் செயலியில் கிளப்பிவிட்டதை எல்லாம் நம்பி, அதை நாளு பேருக்கு அனுப்பும் மனிதர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

ஒரு சாதாரண மனிதர், கூலித் தொழில் செய்பவர், தனியார் நிறுவனத்தில் மாத சம்பளத்துக்கு வேலை பார்ப்பவர் போன்றோர் இது போல வட்ஸ் ஆப் செயலி ஃபார்வர்டுகளை பார்த்து ஆனந்தப்பட்டு, அதை மற்றவர்களுக்கு பகிர்கிறார்கள் என்றால் கூட பரவாயில்லை.

மெத்தப் படித்தவர்கள், இந்தியாவின் ஆதர்ச நாயகர்களாகத் திகழ்பவர்கள், உலகமே கொண்டாடும் கலைஞர்கள் எல்லாம் கூட தங்களுக்கு வரும் விஷயங்களின் உண்மைத்தன்மையைச் சரிபார்க்காமல், அதைப் பொதுவெளியில் தங்கள் சமூக ஊடகங்களில் பகிர்வது தான் சோகத்திலும் சோகம்.

அப்படி இந்தியாவில் நடந்த சில விஷயங்களைத் தான் இக்கட்டுரையில் பார்க்கவிருக்கிறோம்.

1. கிரண் பேடி - முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி

மேலே ட்விட்டரில் அவர் பதிவிட்டுள்ள காணொளிக் காட்சியை நேஷனல் ஜியோகிராபி சேனல் 1 மில்லியன் டாலர் கொடுத்திருப்பதாகப் பதிவிட்டுள்ளார். உண்மையில், இந்த காட்சி கடந்த 2017ஆம் ஆண்டிலேயே ஒரு தொலைக்காட்சித் தொடரில் வந்தது என ப்ளூம்பெர்க் குவின்ட் குறிப்பிட்டுள்ளது.

இவர் இப்படிச் சரிபார்க்காத தகவல்களைப் பதிவிடுவது ஒன்றும் புதிய விஷயமல்ல. இதற்கு முன் சூரியனிலிருந்து ஓம் என்கிற ஒலி வருவதாக ஒரு காணொளிப் பதிவைப் பகிர்ந்த போதும் கடுமையாக இணைய வாசிகளால் விமர்சிக்கப்பட்டது. அதோடு உண்மையில் ஓம் என்கிற ஒலி சூரியனிலிருந்து வரவில்லையென பல்வேறு ஆதாரப்பூர்வமான விளக்கங்கள் கொடுக்கப்பட்டன.

2016ஆம் ஆண்டு இந்தியப் பொருட்களை மட்டுமே வாங்கப் பிரதமர் நரேந்திர மோதி அழைப்புவிடுப்பதாகக் கூறி போலி செய்தி அறிக்கையைப் பகிர்ந்தார்.

2017ஆம் ஆண்டு அமெரிக்காவில் உள்ள இரட்டை கோபுரம், பைசா சாய்ந்த கோபுரம், அமெரிக்காவில் உள்ள சுதந்திர தேவிச் சிலை, பாரிஸ் நகரத்தில் உள்ள ஈஃபிள் டவர், ரியோ டி ஜெனிரியோவில் உள்ள ஏசு கிறிஸ்து சிலை... போன்ற உலகின் முன்னணி கட்டுமானங்களில் எல்லாம் இந்தியக் கொடி நிறத்தில் வண்ண விளக்கு ஏற்றப்பட்டிருப்பதாக டிவிட்டரில் பதிவிட்டார்.

அதே 2017ஆம் ஆண்டில் நடனமாடும் ஒரு பெண்ணின் காணொளியைப் பகிர்ந்து '97 வயதிலும் உற்சாகமாக நடனமாடும் இவர் தான் நரேந்திர மோதியின் தாய்' என பதிவிட்டார்.

இப்படிச் சரிபார்க்காமல் இவர் பதிவிட்ட செய்திகளின் பட்டியல் மிகப் பெரியது. கிரண் பேடி மெத்தப்படித்த ஐபிஎஸ் அதிகாரி. மகசேசே விருது வென்றவர். புதுச்சேரி யூனியன் பிரதேசத்துக்குத் துணை நிலை ஆளுநராக இருந்தவர். இப்படிப்பட்டவர்கள் இது போன்ற சரிபார்க்கப்படாத விஷயங்களைப் பகிரும் போது நெட்டிசன்கள் கொஞ்சம் கூட கருணை காட்டுவதில்லை.

2. அமிதாப் பச்சன் - நடிகர்

இவருக்குப் பெரிய அறிமுகம் தேவை இல்லை. இந்தி சினிமாவின் உச்ச நட்சத்திரம்.

இந்தியா கொரோனாவில் தத்தளித்துக் கொண்டிருந்த போது, ஒரு குறிப்பிட்ட நாளில் இரவு 9 மணிக்கு, 9 நிமிடங்களுக்கு உங்கள் வீட்டு ஒளிவிளக்குகளை அனைத்து வைக்குமாறு பிரதமர் மோதி கூறினார். அதற்காக இந்தியாவில் உள்ள பலரும் தங்கள் வீட்டு விளக்குகளை 9 மணிக்கு முன் முழுமையாக ஒளிரவிட்ட போது எடுக்கப்பட்ட படம் என்று கூறி ஒரு போலி படத்தை தன் சமூக வலைத்தளத்தில் 2020 ஏப்ரல் 5ஆம் தேதி பகிர்ந்தார். அதைப் பார்த்தால் பச்சைக் குழந்தை கூட போலிப் படமெனக் கூறிவிடும்.

இந்தியாவில் முதற்கட்ட ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த போது, இதே அமிதாப் பச்சன் கைதட்டுவதால் வைரஸ் எப்படி இறந்து போகும் என தன் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டார். அப்பதிவில் அமாவாசை அன்று வைரஸ் பேக்டீரியா போன்றவை தன் உச்ச சக்தியில் இருக்கும். கைதட்டும் அதிர்வு வைரஸ் பரவுவதைக் குறைக்கும். சந்திரன் ரேவதிக்கு மாறுகிறது எனப் பல வதந்திகளை ஒற்றைப் பதிவில் கூறி பலரின் கடும் விமர்சனத்துக்கு உள்ளானார்.

பிரபலங்கள்
Depression - மன அழுத்தம் தப்பிப்பது எப்படி? | Nalam 360

3. சோனு நிகம் - பாடகர்

கொரோனா வைரஸ் 12 மணி நேரத்தில் இறந்துவிடும் என்றும், பிரதமர் அறிவித்திருக்கும் ஊரடங்கு உத்தரவு காலம் முடிவுக்கு வருவதற்குள் இந்தியாவில் ஒட்டுமொத்த கொரோனாவும் ஒரு முடிவுக்கு வந்துவிடும் எனப் பிரதமரின் புகழ் பாடிய காணொளி இது.

4. ரஜினிகாந்த் - நடிகர்

தமிழ்நாட்டு சினிமா துறையில் முன்னணி நடிகராக வலம் வரும் ரஜினிகாந்த் கூட, பிரதமர் கூறியது போல அனைவரும் ஊரடங்கு உத்தரவைப் பின்பற்றி வீட்டுக்குள் இருக்க வேண்டும். கொரோனா 12 - 14 மணி நேரத்துக்குள் கட்டுப்படுத்தப்படும் என ஒரு காணொளியைப் பதிவு செய்து தன் ட்விட்டரில் பதிவிட்டார். அது ட்விட்டரின் விதிகளை மீறி தவறான செய்திகளைப் பரப்புவதாக இருந்ததால் அக்காணொளி நீக்கப்பட்டது.

பிரபலங்கள்
Putin: "ரஷ்ய அதிபர் புடின் படுத்தபடுக்கையாக உள்ளார்" - உளவாளி சொல்லும் பகீர் தகவல்

5. ஸ்ரத்தா கபூர் - நடிகை

அங்கே எல்லையில் ராணுவ வீரர்கள் குளிரில் உறைந்து போகிறார்கள் என ஒரு படத்தை சமூக வலைதளத்தில் பதிவு செய்து 'இந்திய ராணுவ வீரர்களுக்கு எத்தனை நன்றி சொன்னாலும் தகும்' என பாராட்டி, மற்றவர்களையும் ராணுவ வீரர்களை மதிக்குமாறும், ஒரு சல்யூட் அடிக்குமாறும் கூறி இருந்தார். என்ன ஒரே ஒரு குறை என்றால், அது ரஷ்ய ராணுவ வீரர்களின் படம்.

6. கங்கனா ரனாவத் - நடிகை

'சிவசேனா குண்டர்களிடம் இருந்து நீங்கள் பாதுகாப்பாக இருப்பதைக் குறித்துக் கொள்ளுங்கள்' என ஃபேஸ்புக் ஒரு புதிய வசதியை அறிமுகப்படுத்தி இருப்பதாக, தி ஃபாக்ஸி (the Fauxy) என்கிற டிரோல் ரக நகைச்சுவை வலைத்தள செய்தி வெளியானதை மேற்கோள் காட்டி கங்கனா ரனாவத் தன் சமூகவலைதளத்தில் குறிப்பிட்டு நன்றி எல்லாம் கூறி இருந்தார்.

100 ரூபாய் சம்பாதிப்பதற்காக விவசாயிகள் போராட்டத்தில் கலந்து கொண்டதாக ஒரு வயதான மூதாட்டியை விமர்சித்தார். அதோடு, சி ஏ ஏ & என் ஆர் சி சட்டத்துக்கு எதிராகப் போராடிய பில்கிஸ் பானு தான் அவர் என்றும் அவரை கடுமையாகச் சாடினார். கள ஆய்வு செய்த பிபிசி, அவர் பெயர் மஹிந்தர் கெளர் என்று நிரூபித்தது. பஞ்சாபி பாடகர் மற்றும் நடிகர் தில்ஜித் தோசான்ச் அந்த மூதாட்டி பிபிசிக்கு கொடுத்த நேர்காணல் காணொளியை தனது ட்விட்டரில் பதிவிட்டார்.

பிரபலங்கள்
AR Rahman: கேன்ஸ் திருவிழாவில் ஏ.ஆர்.ரஹ்மான் இயக்கிய 'Le Musk'

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on


Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com