Zelensky
ZelenskyTwitter

வீட்டில் விழுந்த ரஷ்ய ஏவுகணையை கண்டுகொள்ளாமல் 'ஷேவ்' செய்யும் உக்ரைனியர் - வைரல் வீடியோ

உக்ரைனை சேர்ந்த ஒருவரது வீட்டின் சமையல் அறையில், ரஷ்ய ராணுவத்தின் ஏவுகணை ஒன்று சிக்கிக்கொண்டுள்ளது. செங்குத்தாக அது ஒரு பக்கம் நிற்க, அதை ஒரு பொருட்டாகவே மதிக்காமல், சர்வ சாதாரணமாக அந்த நபர் சவரம் செய்துகொள்கிறார்.
Published on

தனது வீட்டின் சமையல் அறையில், ரஷ்ய ஏவுகணை ஒன்று சிக்கிக்கொண்டுள்ளதையும் பொருட்படுத்தாமல், உக்ரைன் நாட்டை சேர்ந்த ஒருவர் சவரம் செய்துகொள்ளும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.


கடந்த பிப்ரவரி மாதம் ரஷ்யா உக்ரைன் மீது போரை தொடங்கியது. இன்று வரை போர் நீடித்துக் கொண்டிருப்பது நாம் எல்லோரும் அறிந்ததே. ஆரம்பத்தில், அங்கிருக்கும் பொதுமக்களை வெளியேற்றுவது, உயிர் சேதம் அதிகமாகும் முன், போரை நிறுத்துவது என பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது.

Missile in the kitchen
Missile in the kitchenvideo

நான்கு மாதங்கள் கடந்து விட்ட நிலையிலும் போர் நடந்துகொண்டிருக்க, ஆரம்பத்திலிருந்த பதற்றமும், வருத்தமும், பயமும் இப்போது நடைமுறையாகிவிட்டது என்று தான் சொல்லவேண்டும்.

ஒரு விஷயம் தொடர்ந்து அரங்கேறிக்கொண்டிருந்தால் நம் மனம் அதற்கு பழக்கப்பட்டு போய்விடுமல்லவா? அது போல தான் ஒரு சம்பவம் நிகழ்ந்திருக்கிறது உக்ரைனில்.

உக்ரைனை சேர்ந்த ஒருவரது வீட்டின் சமையல் அறையில், ரஷ்ய ராணுவத்தின் ஏவுகணை ஒன்று சிக்கிக்கொண்டுள்ளது. செங்குத்தாக அது ஒரு பக்கம் நிற்க, அதை ஒரு பொருட்டாகவே மதிக்காமல், சர்வ சாதாரணமாக அந்த நபர் சவரம் செய்துகொள்கிறார்.


இந்த வினோத காட்சியின் வீடியோ ரெட் இட் பக்கத்தில் பகிரப்பட்டு, இணையத்தின் கவனத்தை ஈர்த்து வருகிறது. ஒரு பயனர், "எட்டுக்கால் பூச்சி இருந்தாலே நான் அந்த அறைக்குள் செல்லமாட்டேன். நீங்கள் எப்படி இவ்வளவு casual ஆக இருக்கிறீர்கள்" என்று ஒருவர் கேட்டிருந்தார். இன்னொருவர், "சில நாட்கள் கழித்து வீட்டை சீரமைக்கும்போது அதை அலங்கார விளக்காக மாற்றலாம். அது பழுதடைந்துவிட்ட பட்சத்தில்" என கூறியுள்ளார்.

எது எப்படியோ, "நான்லாம் சுனாமிலயே ஸ்விம்மிங்க போட்றவங்க" என்று அவர் அந்த ஏவுகணையை கண்டுகொள்ளாமல் இருப்பது இணையத்தை கலக்கி வருகிறது.

Zelensky
உக்ரைன் போர் : கருங்கடலில் கண்ணிவெடி வைத்த ரஷ்யா - என்ன நடக்கிறது அங்கே?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

logo
Newssense
newssense.vikatan.com