Crush-யை இம்ப்ரஸ் செய்ய நடனமாடிய பறவை - ரியாக்‌ஷன் என்ன தெரியுமா?

ஆஸ்திரேலியாவில் அதிகம் காணப்படும் விக்டோரியாஸ் ரைஃபில்பிர்ட் எனும் பறவை, தன் இணையை ஈர்க்க நடனமாடிக்கொண்டிருக்கையில், அதை சற்றும் பொருட்படுத்தாமல் பெண் பறவை பறந்து சென்ற வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
Victoria's Riflebird
Victoria's RiflebirdPexels
Published on

சாதாரணமாக மனிதர்களுக்கே தலைகீழாக நின்றாலும் அவர்கள் காதலிகளை இம்ப்ரஸ் செய்வது கடினமாகத் தான் உள்ளது. ஆலப்புழாவுக்கு சென்ற கார்த்திக்கிற்கு கூட காதல் தோல்வி தான். அமெரிக்கா சென்ற சூர்யாவுக்கும் கைகூடவில்லை. மனிதர்களுக்குத் தான் இந்த கதி என்றால், பாவம் பறவைகளுக்கும் இதே நிலை தான்.

Victoria's Riflebird
Victoria's RiflebirdPexels

Victoria's Riflebird எனும் இனத்தைச் சேர்ந்த பறவைகள் இரண்டின் வீடியோ இப்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. தன் இணையை ஈர்ப்பதற்காக அற்புத நடமாடுகிறது ஒரு ஆண் பறவை. கொஞ்ச நேரம் சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு, ஆண் பறவை நடனமாடி முடிக்கும் முன் அந்த பெண் பறவை பறந்தே சென்றுவிட்டது. இதை எதார்த்தமாகப் படம்பிடித்திருந்ததை, Wonder of Science என்ற ட்விட்டர் பக்கத்தின் மூலம் பகிர்ந்தது இன்டர்நெட்டை கலக்கி வருகிறது.

இந்த வகை ஆண் பறவைகள் இனச்சேர்க்கை காலத்தின் போது நடனமாடி தங்கள் இணையை கவர்வது வழக்கம். அதுபோல தான் இந்த பறவையும் செய்துள்ளது. ஆனால் பாவம் அது நடனமாடி முடிக்கும் முன்னரே "அவள் பறந்து போனாளே" என்பதுபோல ஆகிவிட்டது.


ஆனால் அந்த பறவையின் நடனத்திற்கும், அதன் முயற்சிக்கும் ரசிகர்கள் கூடிவிட்டனர். ஒரு டிவிட்டர் பயனர், " நான் பெண்ணில்லை, ஆனால் இந்த நடனத்தை பார்த்து நான் இம்ப்ரஸ் ஆகி விட்டேன்" என்று கூறியிருந்தார். இன்னொருவர், "பறவையின் நடனத்திறமையை பாராட்டவேண்டும். அந்த பெண் பறவை ஈர்க்கப்படாவிட்டாலும், அவனுக்கு நான் ரசிகனாகிவிட்டேன்" என்றார்.

Victoria's Riflebird
Victoria's RiflebirdPexels

இதையெல்லாம் விட அந்த பெண் பறவை பறந்தவுடன், ஆண் பறவையிடம் தோன்றும் ஏமாற்றம் தான் இதில் பெரிய காமெடி! அந்த வீடியோவை கண்டு சிரிக்காமலும் இருக்கமுடியவில்லை. அந்த பறவையை நினைத்துப் பரிதாபப்படாமலும் இருக்கமுடியவில்லை.

Victoria's Riflebird
CPR செய்து நாயின் உயிரைக் காப்பாற்றிய நபர் - இணையத்தில் வைரலாகும் வீடியோ

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com