60 ஆண்டுகளாக கருவை சுமந்த பெண் - 91 வயது மூதாட்டியின் மர்மமான மருத்துவ வழக்கு?

91 வயது மூதாட்டியின் வயிற்றில் கரு வந்தது எப்படி என சிந்தித்த மருத்துவர்கள், அந்த கரு 60 ஆண்டுகளுக்கும் மேலாக அந்த மூதாட்டியின் வயிற்றில் இருந்துள்ளதைக் கண்டறிந்தனர்.
60 ஆண்டுகளாக கருவை சுமந்த பெண் - 91 வயது மூதாட்டியின் மர்மமான மருத்துவ வழக்கு?
60 ஆண்டுகளாக கருவை சுமந்த பெண் - 91 வயது மூதாட்டியின் மர்மமான மருத்துவ வழக்கு?twitter
Published on

சிலி நாட்டில் 91 வயது பாட்டியின் வயிற்றில் இருக்கும் கட்டிக்காக சிகிச்சை அளிக்க வந்த மருத்துவர்கள் அவரது வயிற்றில் கரு இருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

பொதுவாக 50 வயதில் பெண்களுக்கு மாதவிடாய் நின்றுவிடும். அதன் பிறகு இயற்கையாக கரு உருவாவது சாத்தியமில்லை.

ஆனால் 91 வயது (2015ல்) மூதாட்டியின் வயிற்றில் கரு வந்தது எப்படி என சிந்தித்த மருத்துவர்கள், அந்த கரு 60 ஆண்டுகளுக்கும் மேலாக அந்த மூதாட்டியின் வயிற்றில் இருந்துள்ளதைக் கண்டறிந்தனர்.

இதனை Estela Melendez என்ற அந்த மூதாட்டியிடம் கூறியபோது, "எனக்கு நான் எப்படிக் கருவுற்றேன் என்பது பற்றி எதுவுமே புரியவில்லை" என்றிருக்கிறார்.

மூதாட்டியின் வயிற்றை எக்ஸ்-ரே எடுத்தபோது அவரது கருவைக் கண்கூடாக பார்க்க முடிந்திருக்கிறது.


எஸ்டெலா மெலெண்ட்ச்ஸுக்கு 17 வயதில் திருமணம் நடைபெற்றிருக்கிறது. 2015ம் ஆண்டு ஜனவரியில் அவரது கணவர் இறக்கும் வரை இருவரும் மகிழ்ச்சியான வாழ்க்கையை நடத்தியிருக்கின்றனர்.

60 ஆண்டுகளாக கருவை சுமந்த பெண் - 91 வயது மூதாட்டியின் மர்மமான மருத்துவ வழக்கு?
கர்ப்பம் தரிக்க இந்தியாவுக்கு வரும் ஜெர்மனி பெண்கள்: தூய ஆரியர்கள் இருப்பது உண்மையா?

அவர்களால் குழந்தைப் பெற்றுக்கொள்ள முடியாதது மிகப் பெரிய வருத்தமாக இருந்துள்ளது. இப்போது அவரது வயிற்றில் எஞ்சியிருக்கும் கருவை அவர்கள் ஒன்றாக வாழ்ந்ததன் நினைவாக கருதுகிறார்.

மூதாட்டியின் வயிற்றில் இருந்து கருவை நீக்க மருத்துவர்கள் முடிவு செய்துள்ளனர். ஆனால் இது அவருக்கு பெரிய பிரச்னைகளை ஏற்படுத்தும் என்பதனால் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படவில்லை.

தானும் தனது கணவரும் ஏங்கிய கருவை சுமந்தபடி வாழ்ந்தார் மூதாட்டி.

60 ஆண்டுகளாக கருவை சுமந்த பெண் - 91 வயது மூதாட்டியின் மர்மமான மருத்துவ வழக்கு?
பிறந்து 40 நாட்களான ஆண் குழந்தையின் வயிற்றில் கரு - நடந்தது என்ன ?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com