உணவில் ஏன் மசாலா சேர்த்துக்கொள்ளப்பட்டது தெரியுமா? - வரலாற்றில் 10 கட்டுக்கதைகள்

வரலாற்றை நாம் பின்னோக்கி சென்று தெரிந்துக் கொள்ள முடியாது, அந்த படிவங்கள் என்ன சொல்கின்றனவோ அவை தான் நமக்கு ஆதாரங்கள். ஆனால் முக்கிய வரலாற்று விஷயங்களியே சில கட்டுகதைகள் இருக்கின்றனர்.
உணவில் ஏன் மசாலா சேர்த்துக்கொள்ளப்பட்டது தெரியுமா? - வரலாற்றில் 10 கட்டுக்கதைகள்
உணவில் ஏன் மசாலா சேர்த்துக்கொள்ளப்பட்டது தெரியுமா? - வரலாற்றில் 10 கட்டுக்கதைகள்Twitter
Published on

ஆதிகாலத்து விஷயங்கள் குறித்து தெரிந்துக் கொள்ள வரலாறு பல வகைகளில் பயன்படுகிறது.

பழங்காலங்களில் நடந்த முக்கிய நிகழ்வுகளை அறிய, ஆராய்ச்சிகள் மேற்கொள்ள என அனைத்திற்கு வரலாறு முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.

ஆனால் அந்த வரலாற்றை நாம் பின்னோக்கி சென்று தெரிந்துக் கொள்ள முடியாது, அந்த படிவங்கள் என்ன சொல்கின்றனவோ அவை தான் நமக்கு ஆதாரங்கள்.

ஆனால் முக்கிய வரலாற்று விஷயங்களியே சில கட்டுகதைகள் இருக்கின்றனர். அப்படி வரலாற்றில் இருக்கும் சில கட்டுக்கதைகளை காணலாம்.

வரலாறு முக்கியம் அமைச்சரே...

1. இறந்தவர்களை விட அதிகமான மக்கள் இன்று உயிருடன் இருக்கிறார்கள்

எகிப்திய பிரமிடுகள் கட்டப்பட்ட காலத்திலிருந்து சுமார் 600 கோடி மக்கள் இறந்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

அது இன்று பூமியில் உள்ள மக்களின் எண்ணிக்கையை விட ஒரு பில்லியன் குறைவாக இருக்கும்.

இருப்பினும் ஆயுட்காலம் பொதுவாக உலகின் பல பகுதிகளில் மேம்படுத்தப்பட்டுள்ளது என்பது உண்மைதான்.

உணவில் ஏன் மசாலா சேர்த்துக்கொள்ளப்பட்டது தெரியுமா? - வரலாற்றில் 10 கட்டுக்கதைகள்
டி.பி.கூப்பர் : 50 ஆண்டுகளாக அமெரிக்காவை அலற விடும் நிஜ விக்ரம் - ஒரு பரபர கதை
Earth
EarthTwitter

2. தட்டையான பூமி

பூமி தட்டையானது எல்லோரும் நினைத்துக் கொண்டிருந்தார்கள் ஆனால் வரலாற்று ஆசிரியர், கிறிஸ்டோபர் கொலம்பஸ் பூமி தட்டையானது அல்ல, ஆனால் வட்டமானது என்பதை உலகிற்கு நிரூபிக்க முயற்சித்தார்.

பழங்காலத்தவர்கள் பூமி தட்டையானது என நம்பினார்கள். அந்த கருத்து இப்போது கட்டுக்கதையாக பார்க்கப்பட்டாலும் இன்றும் அதனை நம்பும் கூட்டம் இருக்கத்தான் செய்கிறது.

3. கேத்தரின் தி கிரேட் மரணம்

பல கட்டுக்கதைகள் கேத்தரின் தி கிரேட் மரணத்தை சுற்றி வருகிறது.

ரஷ்ய ராணி, கேத்தரின் தி கிரேட், உண்மையில் நோய்வாய்ப்பட்டு படுக்கையில் இறந்தார்.

ஆனால் இனச்சேர்க்கை செய்ய முயன்ற குதிரையின் அடியில் நசுங்கி இறந்ததாக பல வதந்திகள் இன்றும் உலா வருகின்றது.

உணவில் ஏன் மசாலா சேர்த்துக்கொள்ளப்பட்டது தெரியுமா? - வரலாற்றில் 10 கட்டுக்கதைகள்
Mary Bell: பாலியல் தொழிலாளியின் மகள் சீரியல் கில்லரான கதை - ஒரு விறுவிறு வரலாறு

4. முசோலினி ரயில்களை சரியான நேரத்தில் இயக்கினார்

பிரிட்டனில், இரயில் பயணங்களில் தாமதங்கள் நிறைய உள்ளன.

ஆனால் இத்தாலிய சர்வாதிகாரி முசோலினி காலத்தில் அங்கு ரயில்கள் குறித்த நேரத்தில் இயங்கியதாக கூறப்படுகிறது.

முசோலினியின் ஆட்சியின் ஆரம்ப காலத்தில் இத்தாலியின் இரயில் சேவை முன்னேற்றம் அடைந்தாலும் கூட ரயில்கள் எப்பொழுதும் மிகச் சரியாக இயக்கப்படவில்லை.

5. காலனித்துவ காலத்தில் பெரும்பாலான ஆண்கள் விக் அணிந்திருந்தனர்

விக் மற்றும் ஒட்டு முடிகள் அந்த நேரத்தில் நாகரீகமாக இருந்தன, ஆனால் மக்கள் தொகையில் 5% மட்டுமே அவற்றை அணிந்தனர். விக்கள் விலை உயர்ந்தவை. முக்கியமாக வழக்கறிஞர்கள், அரசியல்வாதிகள் மட்டுமே அவற்றை அணிந்தனர்.

பெரும்பாலான மக்கள் விக் விரும்பினாலும் கூட வாங்க முடியாது.

6. அழுகும் இறைச்சியின் சுவையை மறைக்க மக்கள் மசாலாப் பொருட்களைப் பயன்படுத்தினர்

அழுகும் இறைச்சியின் சுவையை மறைக்க மக்கள் முதன்மையாக மசாலாப் பொருட்களைப் பயன்படுத்தினர் என்ற தகவல் இன்றும் உள்ளது.

குளிர்சாதனப் பெட்டிகள் கண்டுபிடிப்பதற்கு முந்தைய காலங்களில் கெட்டுப்போகக்கூடிய உணவுகளின் சுவையை மறைக்க மசாலாப் பொருட்கள் பயன்படுத்தப்படவில்லை.

மாறாக உயர்தர உணவுகளை அழகுபடுத்த மசாலாப் பொருட்கள் பயன்படுத்தப்பட்டன.

உணவில் ஏன் மசாலா சேர்த்துக்கொள்ளப்பட்டது தெரியுமா? - வரலாற்றில் 10 கட்டுக்கதைகள்
Hiroo Onoda: ஓர் உத்தரவுக்காக 29 ஆண்டுகள் பதுங்கி வாழ்ந்த ஜப்பான் வீரரின் விறு விறு கதை!

7. தாமஸ் எடிசன் ஒளி விளக்கைக் கண்டுபிடித்தார்

வளர்ந்த நாடுகளில் எங்கும் நிறைந்திருக்கும் நவீன வாழ்வின் முக்கிய ஆதாரமான ஒளி விளக்கை, தாமஸ் எடிசன் கண்பிடித்தார் என்று தான் நம்மலுக்கு தெரியும்.

அதை மேம்படுத்த எடிசனின் பங்களிப்பு அதிகமாவே இருந்தது.

ஆனால் அந்த நேரத்தில் எடிசன் செய்த அதே செயலைச் செய்து, சிறந்த ஒளி விளக்கை 20 கண்டுபிடிப்பாளர்கள் உருவாக்க முயன்றனர். ஆனால், குறைந்த செயல்திறன் காரணமாக பெரும்பாலான ஒளிரும் பல்புகளை தடை செய்யப்பட்டதாக கதைகள் உள்ளன.

எடிசனின் வடிவமைப்பு பல ஆண்டுகளாக மேம்படுத்தப்பட்டு இன்றைய நிலையான பல்புகள் 100 ஆண்டுகளுக்குப் பிறகும் எரிகிறது.

8. ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் கணிதத்தில் மோசமாக இருந்தார்

இந்த கட்டுக்கதையின் முரண்பாடு என்னவென்றால், புகழ்பெற்ற இயற்பியலாளர் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் புரட்சிகர சார்பியல் கோட்பாட்டை உருவாக்கினார்.

அவர் ஒரு ஏழை மாணவராக இருந்தபோது அவருக்கு விருப்பமில்லாத பாடங்களைத் தொடரத் தவறிவிட்டாரே தவிர ஐன்ஸ்டீன் கணிதத்தில் சிறந்து விளங்கினார்.

அவரது இயற்பியல் விதிகளை உருவாக்க கணித மேதைகளும் உதவியதனால் இந்த கட்டுக்கதை உருவாகியிருக்கலாம்.

9. அலமோவில் அனைவரும் கொல்லப்பட்டனர்

அமெரிக்க வரலாற்றில் மிகவும் பிரபலமான போர் அலமோவின் வீழ்ச்சி.

"அலாமோவை நினைவில் கொள்!" என அமெரிக்க பழமொழி கூறுகிறது. அலாமோவில் விழுந்தவர்கள் வெளிப்படுத்திய அதே அளவிலான தியாகம் மற்றும் துணிச்சலைக் காட்ட இந்த அறிவிப்பு அமெரிக்கர்களை ஊக்கப்படுத்தியுள்ளது.

ஜெனரல் சாண்டா அண்ணாவும் அவரது மெக்சிகன் இராணுவமும் மார்ச் 6, 1836 அன்று அலமோவின் பாதுகாவலர்கள் அனைவரையும் கொன்றனர். ஆனால் அலமோவின் சுவர்களுக்குள் இருந்த அனைவரும் இறக்கவில்லை. சுமார் 12 பெண்கள் மற்றும் குழந்தைகள் உயிர் தப்பினர்.

12 நாள் முற்றுகையின் போது அவர்கள் உடனிருந்தனர், மேலும் அவர்கள் போராளிகள் அல்லாதவர்களாகவே காப்பாற்றப்பட்டனர்.

10. மக்கள் பெருமூச்சு விடுவதால் வெனிஸில் உள்ள பாலத்துக்கு பெருமூச்சு பாலம் (Bridge of Sighs) என்று பெயரிடப்பட்டது

வெனிஸில் மிகவும் பிரபலமானது பெருமூச்சு பாலம். இது டோகேஸ் அரண்மனையை பழைய சிறைச்சாலையுடன் இணைக்கிறது.

இந்தப் பாலம் சிறை செல்லும் கைதிகளுக்கு வெளியுலகின் கடைசிப் பார்வையைக் கொடுத்தது.

அந்த பாலத்தில் கைதிகள் விட்ட பெருமூச்சுகளிலிருந்து அதன் பெயர் வந்தது என்ற கருத்து கட்டுக்கதையே.

மாறாக, அந்த பெயரை கவிஞர் பைரன் கனவில் கண்டு வைத்ததாக வரலாறு கூறுகிறது.

உணவில் ஏன் மசாலா சேர்த்துக்கொள்ளப்பட்டது தெரியுமா? - வரலாற்றில் 10 கட்டுக்கதைகள்
பில்லா, ரங்கா : 80களில் ஒட்டுமொத்த இந்தியாவை அலற வைத்த இருவர் - சினிமாவை விஞ்சும் நிஜ கதை

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com