தங்க ஏடிஎம் டு உலகின் உயரமான கட்டிடம்: துபாய் குறித்த 10 சுவாரஸ்ய தகவல்கள்

இன்றுவரை வெகுஜன மக்கள் அறியாத துபாயின் மறுபக்கத்தை தான் நாம் இங்கு பார்க்க போகிறோம்.
தங்க ஏடிஎம் டு உலகின் உயரமான கட்டிடம்: துபாய் குறித்த 10 சுவாரசியத் தகவல்கள்
தங்க ஏடிஎம் டு உலகின் உயரமான கட்டிடம்: துபாய் குறித்த 10 சுவாரசியத் தகவல்கள்twitter

தமிழ்நாடு, கேரளா போன்ற தென்கோடி இந்திய மாநிலங்களில் உள்ள மக்களுக்கு அதிகம் பரீட்சியமான ஒரு நகரம் துபாய்.

துபாய் போன்ற ஒரு பிரம்மாண்ட நகரத்தில் நல்ல வேலை கிடைத்து செட்டில் ஆகிவிட்டால், அந்த நபர் மீண்டும் தன்னுடைய சொந்த ஊருக்கு வரும்போது ஒரு மினி ஷேக்காகவே உருவாகிவிடலாம். அந்த அளவுக்கு துபாய் ஒரு செல்வ செழிப்பான நகரம் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க, இன்று வரை உலக அளவில் அதிக சுற்றுலாப் பயணிகள் வந்து செல்லும் இடமாக இருக்கும் துபாயில் இன்னும் கவனிக்க வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கின்றன.

உதாரணத்திற்கு மத்திய கிழக்கு நாடுகள் என்றாலே கடுமையான இஸ்லாமிய சட்டங்கள் நடைமுறையில் இருக்கும் என்றுதான் நாம் பார்த்திருப்போம் படித்திருப்போம்.

ஆனால் துபாய் நகரத்தில் இஸ்லாமிய தத்துவங்கள் மற்றும் மேற்குலக நாடுகளின் மதிப்புகள், கலாச்சார பன்முகத்தன்மை, உழைக்கத் தயாராக இருக்கும் மக்களுக்கு அள்ளிக் கொடுக்கும் வாய்ப்புகள் என எல்லாம் கலந்த ஒரு கலவையாக இருக்கிறது துபாய். இப்படி இன்றுவரை வெகுஜன மக்கள் அறியாத துபாயின் மறுபக்கத்தை தான் நாம் இங்கு பார்க்க போகிறோம்.

மகிழ்ச்சிக்கான அமைச்சகம்:

பொதுப்பணித்துறை, போக்குவரத்து துறை, சுற்றுலாத்துறை போன்ற அமைச்சகங்கள் இயங்குவதை நம் நாட்டில் நாம் பார்த்திருப்போம். ஆனால் மகிழ்ச்சிக்காக ஒரு தனி அமைச்சகம் உருவாக்கப்பட்டு இயங்கி வருவதை எங்காவது கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

ஐக்கிய அரபு அமீரகத்தில் Ministry for Happiness என ஒரு தனி அமைச்சகமே இயங்கி வருகிறது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் வாழும் மக்கள் மகிழ்ச்சியோடு இருப்பது தான் இந்த அமைச்சகத்தின் பொறுப்பு. அமீரகத்தின் பிரதமர் இந்தப் பதவியை உருவாக்கி, ஒஹுத் பின் கல்ஃபான் அல் ரூமி (Ohood Bint Khalfan Al Roumi) என்பவரை முதல் முறையாக இந்த அமைச்சகத்தின் அமைச்சராக்கினார்.

இப்போது உலக அளவிலான மகிழ்ச்சி குறியீட்டு பட்டியலில் 6,576 மதிப்பெண்களோடு 24 ஆவது இடத்தில் இருக்கிறது ஐக்கிய அரபு அமீரகம்.

மாஸ் காட்டும் போலீஸ் கார்கள்:

தமிழ்நாடு காவல்துறை ரோந்துப் பணியை மேற்கொள்கிறார்கள் என்றால் என்ன மாதிரியான வாகனங்களை உபயோகிப்பார்கள்? டொயோட்டா இன்னோவா, மாருதி சுசுகி எர்டிகா, மகேந்திரா பொலிரோ… போன்றவைகளைத் தானே பயன்படுத்துவார்கள்.

ஆனால் துபாயில் காவல்துறையினருக்கு புகாட்டி வேரான், மெர்சிடஸ் ஏஎம்ஜி ஜிடி 63 எஸ், லம்போர்கினி அவென்டெடார், ஆஸ்ட்டன் மார்ட்டின் ஒன் 77, பென்ட்லி கான்டினென்டல் ஜிடி, ஃபெராரி எஃப் எஃப்… போன்ற அதிநவீன சொகுசு எஸ் யூ வி கார்களைப் பயன்படுத்துவார்களாம்.

ஐக்கிய அரபு அமீரகத்தின் காவல்துறையில் வேலைக்குச் சேர்வது எப்படி என்கிற தகவல் தெரிந்தால் பகிரவும் ப்ளீஸ்.

உலகின் மிக உயரமான கட்டிடம்

பிரான்ஸ் நாட்டின் குறியீடாக இருக்கும் ஐஃபில் டவரின் உயரம் 300 மீட்டர். அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் இருக்கும் எம்பயர் ஸ்டேட் பில்டிங் உயரம் 443 மீட்டர். எல்லா விஷயங்களிலும் தனக்கென ஒரு தனி தடத்தை பதிக்கும் ஐக்கிய அரபு அமீரகம், இந்த விஷயத்தில் மட்டும் சும்மா இருக்குமா என்ன. தன் பங்குக்கு 828 மீட்டர் உயரத்தோடு புர்ஜ் கலிஃபா என்கிற உலகின் மிக உயரமான பிரமாண்ட கட்டிடத்தை உருவாக்கி தற்போது பயன்படுத்தியும் வருகிறது.

கடந்த 2016 ஆம் ஆண்டு துபாய் கிரீக் டவர் (Dubai Creek Tower) என்கிற பெயரில் சுமார் 1,300 மீட்டர் உயரம் கொண்ட ஒரு ராட்சத கட்டுமானம் தொடங்கி நடைபெற்று வருவது இங்கு நினைவு கூறத்தக்கது. இதன் கட்டுமானம் நிறைவடைந்து புழக்கத்திற்கு வந்தால், உலகிலேயே மிக உயரமான கட்டிடமாக துபாய் கிரீக் டவர் இருக்கும்.

துபாய் : விரைவில் வரும் பறக்கும் டாக்ஸிகள் - வியக்க வைக்கும் வீடியோ

அதிகரிக்கும் மக்கள் தொகை

மக்கள் தொகை அதிகரிப்பதெல்லாம் ஒரு முக்கிய விஷயமா, இதில் கவனிக்க வேண்டிய அல்லது நம்மை ஆச்சரியத்தில் மூழ்கடிக்கும் விஷயம் என்ன என்று கேட்கிறீர்களா?

சுமார் 6 தசாப்த காலத்திற்கு முன்பு ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்த ஒட்டுமொத்த மக்கள் தொகை எண்ணிக்கை சுமார் 1.5 லட்சம்.

ஆனால் இன்று அதே ஐக்கிய அரபு அமீரகத்தில் சுமார் 10 மில்லியன் (ஒரு கோடி) பேர் வாழ்கிறார்கள். துபாய் நகரத்தில் மட்டும் சுமார் 33 சதவீதம் பேர் வாழ்ந்து வருகிறார்கள். கூட்டி கழித்து பார்த்தால் கிட்டத்தட்ட 66 மடங்கு வளர்ச்சி இது.

தங்க ஏடிஎம் டு உலகின் உயரமான கட்டிடம்: துபாய் குறித்த 10 சுவாரசியத் தகவல்கள்
ஐக்கிய அரபு அமீரகம் செல்ல முயற்சி செய்கிறீர்களா? - இந்தக் கட்டுரை உங்களுக்கானது

அதிக வெளிநாட்டவர்கள்:

மேலே குறிப்பிட்டது போல சகட்டுமேனிக்கு மக்கள் தொகை அதிகரித்து இருப்பதற்கு இயற்கையாக திருமணமான தம்பதிகள் அதிக அளவில் குழந்தைகளை பெற்றுக் கொண்டது காரணம் அல்ல.

மாறாக, ஐக்கிய அரபு அமீரகம் தொடர்ந்து வெளிநாட்டவர்களுக்கு தொழில் தொடங்கவும் தங்களுடைய தொழிலை ஐக்கிய அரபு அமீரகத்தில் வெற்றிகரமாக நடத்தவும் பெரிய அளவில் உதவியது, புதிய வாய்ப்புகளை வழங்கியது.

அதன் காரணமாகத்தான், ஐக்கிய அரபு அமீரகத்தில் 90 சதவீதத்திற்கும் மேற்பட்டவர்கள் வெளிநாட்டவர்களாக இருக்கிறார்கள்.

தங்கள் நாட்டில் வியாபாரங்களை மேற்கொள்ளவும், தொழிலை தொடங்கி வெற்றிகரமாக நடத்தவும் உதவும் ஐக்கிய அரபு அமீரக அரசு, குடியுரிமையை மட்டும் சட்டென கொடுத்து விடுவதில்லை. எந்த ஒரு நபரும் 20 ஆண்டுகாலம் துபாயில் வாழ்ந்து வந்தால் தான் அவர்களுக்கு குடியுரிமைக்கான விண்ணப்பமே கொடுக்கப்படுமாம்.

வரியே கிடையாது

வரும் 2023 ஆம் ஆண்டு ஜூன் ஒன்றாம் தேதியில் இருந்து தான் ஐக்கிய அரபு அமீரகத்தில் கார்ப்பரேட் நிறுவனங்கள் வரி செலுத்த தொடங்கவிருக்கின்றன.

ஆனால் இப்போது வரை அங்கு தனி நபர்களுக்கு எந்தவித வரியும் கிடையாது. ஒரு தனி நபர் அங்கு வேலை பார்ப்பவராகவோ முதலீடு செய்பவராகவோ யாராக வேண்டுமானாலும் இருக்கலாம்.

தங்க ஏடிஎம் டு உலகின் உயரமான கட்டிடம்: துபாய் குறித்த 10 சுவாரசியத் தகவல்கள்
உலகின் நீண்ட முத்தம்: 58 மணி நேரம் முத்தமிட்ட தம்பதி; 8 வருடங்களாக தொடரும் கின்னஸ் சாதனை!

பொது இடங்களில் நோ முத்தம்

ஐக்கிய அரபு அமீரகத்திற்குள், எந்த நாட்டைச் சேர்ந்தவர் வந்தாலும், அவர்கள் நிச்சயம் ஐக்கிய அரபு அமீரகத்தின் பொதுச்சட்டங்களை மதித்து நடந்து கொள்ள வேண்டும்.

மேற்கத்திய உலக பாணியில், பொதுவெளியில் முத்தம் கொடுத்துக் கொள்வது எல்லாம் அமீரகத்தை பொருத்தவரை குற்றம்.

ஒரு வேளை அப்படி பொதுவெளியில் முத்தமெல்லாம் கொடுத்து மாட்டிக் கொண்டால், உள்ளூர் சட்ட திட்டப்படி பல்வேறு பிரச்னைகளை சந்திக்க வேண்டி இருக்கும்.

Starbucks: காபி ஷாப் ஊழியராக மாறப்போகும் ஸ்டார்பக்ஸ் புதிய CEO லக்ஷ்மன் நரசிம்மன்- ஏன்?

மதுபானங்களுக்கு கட்டுப்பாடு:

ஐக்கிய அரபு அமீரகம் ஒரு இஸ்லாமிய நாடு. இந்த நாட்டில் 21 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு (எந்த மதத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும்) மது வழங்கப்படாது.

சில ஆண்டுகளுக்கு முன்பு வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் வாழும் வெளிநாட்டவர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் மட்டுமே சிறப்பு மதுபான உரிமத்தைப் பெற்று, அதை மதுபானம் விற்கும் கடைகளில் காட்டி மது அருந்த முடியும் என்று இருந்தது.

இன்று ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ளவர்கள் யாராக இருந்தாலும் தனிப்பட்ட முறையில் அல்லது உரிமம் வழங்கப்பட்டிருக்கும் பொது இடங்களிலும் மட்டும் மதுபானம் அருந்தலாம்.

தங்க ஏடிஎம்:

துபாயில் அதிகம் வர்த்தகமாகும் உலோகங்களில் தங்கமும் ஒன்று. உலக அளவில் 40 சதவீத தங்கக் கட்டிகள் வர்த்தகமாகும் இடம் ஐக்கிய அரபு அமீரகம்.

தங்கத்தை வாங்க விரும்புவர்களுக்கு உதவும் வகையில், துபாய் நகரத்தில் கடந்த 2010 ஆம் ஆண்டு முதல் தங்க ஏடிஎம்கள் நிறுவப்பட்டு இருக்கின்றன.

வெறுமனே ஒரு டெபிட் கார்டு அல்லது கிரெடிட் கார்டையோ வைத்துக் கொண்டு, யூ ஏ இ திர்ஹாமில் பேமெண்ட் செய்து தங்க ஏடிஎம் வழியாக தங்கத்தை வாங்கலாம்.

அதிகம் தண்ணீர் பயன்படுத்தும் நாடு

உலகில் அதிக அளவில் நீரை பயன்படுத்தும் நாடு ஐக்கிய அரபு அமீரகம் தான் என சில வலைதளங்களில் குறிப்பிடுகிறது. ஐக்கிய அரபு அமீரகத்தில் வாழும் நபர் ஒருவர், நாளொன்றுக்கு சுமார் 550 லிட்டர் தண்ணீரை பயன்படுத்துவதாக கூறப்படுகிறது.

இதில் அதிக அளவிலான நீர் குளிர்சாதன வசதிகளுக்கு பயன்படுத்தப்படுவதாகவும் கூறப்படுகிறது.

ஐக்கிய அரபு அமீரகத்தின் வெப்பத்தை குறித்து தனியே சொல்ல வேண்டுமா என்ன? எனவே தான் இந்த அளவுக்கு அதிகமாக தண்ணீர் பயன்படுத்தப்படுவதாக கூறப்படுகிறது.

தங்க ஏடிஎம் டு உலகின் உயரமான கட்டிடம்: துபாய் குறித்த 10 சுவாரசியத் தகவல்கள்
புலியின் எச்சில் மருந்தாக பயன்படுகிறதா? இந்தியாவின் தேசிய விலங்கு குறித்த ஆச்சரிய தகவல்கள்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com