இன்று தமிழ் மக்கள் இல்லாத தேசங்கள் இல்லை எனலாம். ஆனால் நம் தமிழ் மக்கள் சில சட்ட விவரங்களைத் தெரிந்து கொள்ளாமல் சில நாடுகளில் சிக்கித் தவிக்கிறார்கள் அல்லது பெரும் பணத்தைக் கொடுத்து பிரச்னைகளிலிருந்து வெளியே வர வேண்டிய சூழல் ஏற்படுகிறது. அதில் ஐக்கிய அரபு அமீரகமும் ஒன்று.
ஐக்கிய அரபு அமீரகத்தில் பணி புரியும் ஒருவர் தன்னுடைய வேலையிலிருந்து விலகிக் கொள்வதாக அல்லது ராஜினாமா செய்வதாக முடிவு செய்துவிட்டால் அவருடைய வீசா காலாவதி ஆகிவிடுமா?
ஐக்கிய அரபு அமீரகத்தில் வேலை பார்ப்பதற்கான அனுமதி மற்றும் அந்நாட்டில் தங்குவதற்கான விசா ஆகிய இரண்டிற்குமான வித்தியாசம் என்ன? இது எப்படி ஒருவரை பாதிக்கும் என்பதை இக்கட்டுரையில் பார்ப்போம்.
முதலில் ஐக்கிய அரபு அமீரகத்தில் வேலை பார்ப்பதற்கான உரிமம் மற்றும் விசாவிற்கான வித்தியாசத்திலிருந்து தொடங்குவோம். ஐக்கிய அரபு அமீரகத்தில் ஒரு நிறுவனத்தில் ஏதோ ஒரு பணிக்கு சேர்ந்து வேலை பார்ப்பதற்கான உரிமத்தைத் தான் ஒர்க் பர்மிட் (Work Permit) என்கிறார்கள்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் அதிகாரப்பூர்வமாக உள்ளே நுழைவதற்கும் அந்நாட்டில் தங்குவதற்கும் விசா வழங்கப்படுகிறது. அந்நாட்டில் வேலை பார்ப்பதற்கு என்று தனியாக எம்ப்ளாய்மெண்ட் விசா என்கிற ஒன்றும் வழங்கப்படுகிறது.
வேலைபார்ப்பதற்கான எம்ப்ளாய்மெண்ட் விசாவை General Directorate of Residency and Foreigners Affairs (GDRFA) என்கிற அமைப்பு வழங்குகிறது. வெளிநாட்டைச் சேர்ந்த ஒருவருக்கு ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்த ஒருவர் அல்லது ஒரு நிறுவனம் ஸ்பான்சர் செய்ய வேண்டும். இவர்களுக்கு இரு ஆண்டு காலத்துக்கு வேலை பார்ப்பதற்கான எம்ப்ளாய்மெண்ட் விசா வழங்கப்படும்.
ஒர்க் பர்மிட் என்றழைக்கப்படும் உரிமத்தை மனித வள மேம்பாட்டுத் துறை வழங்குகிறது. இந்த ஒர்க் பர்மிட் என்பது மைய நிலத்தில் உள்ள நிறுவனங்களுக்கும், ஃப்ரி சோன் (Free Zone) பகுதியில் இருக்கும் நிறுவனங்கள் என்றால் அப்பகுதிக்கான அதிகாரிகளும் வழங்குவதாக துபாயில் உள்ள வழக்கறிஞர் சுனில் அம்பலவேலில் கல்ஃப் நியூஸ் பத்திரிகையிடம் கூறியுள்ளார்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் ஒர்க் பர்மிட் மற்றும் விசாவை இரு வேறு அமைப்புகள் வழங்கினாலும், ஒரு நிறுவனம் அல்லது வேலை கொடுப்பவர் ஐக்கிய அரபு அமீரகத்திலேயே தன் ஊழியரைத் தங்க வைக்க வேண்டும் என்றால் ரெசிடென்ஸ் விசா எடுக்க வேண்டும். அதற்கு நடைமுறைகள் ஒருங்கிணைந்ததாக இருக்கும்.
கம்பெனி ஸ்பான்சர் செய்யாமல், அப்படி விண்ணப்பிக்கப்படுபவரின் ஒர்க் பர்மிட் ரத்து செய்யப்பட்டாலும் கூட, அவரது ரெசிடென்ஸ் விசா பாதிக்கப்படாது. இதில் கோல்டன் விசா வைத்திருப்பவர்கள், பெற்றோர் அல்லது கணவன் மனைவியால் ஸ்பான்சர் செய்யப்பட்டவர்கள் அடக்கம்.
ஒருவர் கம்பெனி ஸ்பான்சரில் விசா பெற்றிருந்தால், அவர்களுடைய ஒர்க் பர்மிட் ரத்து ஆன பிறகு ஒரு மாத காலத்துக்கு அவகாசம் வழங்கப்படும். தன்னிச்சையாக ஒர்க் பர்மிட் ரத்தானால், அவர்களுடைய விசாவும் ரத்தாகிவிடாது என்கிறார் முசப் அலி அல் நக்ஃபி அட்வகேட்ஸ் & லீகல் கன்சல்டண்ட்ஸ் நிறுவனத்தின் நிர்வாக கூட்டாளி மற்றும் மூத்த சட்ட ஆலோசகர் இம்ராஹிம் கலீல் அரிமலா.
அந்த ஒரு மாத காலத்துக்குள் ஐக்கிய அரபு அமீரகத்திலேயே தங்குவதென்றால், அதற்குத் தகுந்தாற் போல தங்களின் குடியிருப்பு விவரங்களை சரி செய்து கொள்ளலாம், விசாவுக்கு விண்ணப்பிக்கலாம்.
ஒருவேளை அந்த ஒரு மாத காலத்துக்குள் வேறு ஏதேனும் அமீரக நிறுவனத்தால் நீங்கள் வேலைக்கு அமர்த்தப்பட்டால், அவர்கள் அந்த ஊழியருக்காக புதிதாக விசாவுக்கு விண்ணப்பிக்கலாம்.
ஒருவேளை புதிதாக விசாவுக்கு விண்ணப்பிக்கவில்லை என்றால், அந்த ஒரு மாத காலத்துக்குள் ஐக்கிய அரபு அமீரகத்தை விட்டு வெளியேறிவிடுவது நல்லது. இல்லையெனில் கடும் அபராதம் விதிக்கப்படும்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust