பூனை குறுக்கிடுவது முதல் கண்ணாடி உடைவது வரை - கெட்ட சகுனங்களுக்கு பின்னிருக்கும் அறிவியல்!

இவ்வாறான பழக்கங்கள் ஏன் கடைப்பிடிக்கப்படுகின்றன என்று யோசித்ததுண்டா? இதற்கான காரணங்களை இந்த கட்டுரையில் பார்க்கலாம்
Black Cat
Black CatCanva
Published on

வீட்டை விட்டு வெளியில் செல்லும்போது நல்ல நேரம் பார்ப்பது, நாம் நடக்கும் போது பூனை குறுக்காக நடந்து சென்றால் சகுனம் சரியில்லை என்று சொல்வது, மாலை நேரங்களில் நகம் வெட்டக் கூடாது என்றெல்லாம் நம் வீடுகளில் சொல்லி கேட்டிருப்போம்.

இவ்வாறான பழக்கங்கள் ஏன் கடைப்பிடிக்கப்படுகின்றன என்று யோசித்ததுண்டா? இதற்கான காரணங்களை இந்த கட்டுரையில் பார்க்கலாம்...

வாசலில் கட்டப்படும் பச்சை மிளகாய் மற்றும் எலுமிச்சை

பச்சை மிளகாய் மற்றும் எலுமிச்சையை வீட்டின் முன்புறத்தில் கட்டியிருப்பதை நாம் பார்த்திருப்போம். இது திருஷ்டிய கழிக்க கட்டப்படுகிறது என்று பெரியவர்கள் நம்மிடம் சொல்லியிருப்பார்கள்.

ஆனால் இதன் உண்மையான காரணம், எலுமிச்சை மற்றும் பச்சைமிளகாய் இரண்டுமே பூச்சிகளை கொல்லும் தன்மையை கொண்டது. இதனால் கிருமிகள் நம்மை அண்டாமல் இருக்கும் என்பதற்காக இவை வீட்டின் முன் கட்டப்படுகிறது.

இரவு நேரத்தில் ஆலமரத்தின் அருகில் செல்லக்கூடாது

மாலை நேரம் வந்தாலே மரங்களுக்கு அருகில் செல்லாதே என்று அம்மா சொல்லி கேட்டிருப்போம். முக்கியமாக ஆலமரத்திற்கு அருகில் செல்லவே விடமாட்டார்கள். மரத்தில் பேய் உட்கார்ந்திருக்கும் என்று தான் நம்மிடம் சொல்லியிருப்பார்கள்.

நிஜத்தில், பகலில் அதிகமாக ஆக்சிஜனை வெளியேற்றும் ஆலமரங்கள், இரவில் அதே அளவு அதிகமாக கார்பன் டை ஆக்சைடை வெளியேற்றும் இது நம் உடல் நலத்திற்கு கேடு என்பதால் இரவில் ஆலமரத்திற்கு அருகில் செல்லவேண்டாம் என்பார்கள்

இறுதி சடங்கிற்கு சென்று வந்தால் குளிக்கவேண்டும்

ஒருவர் உயிரிழந்தால் அவரது உடலில் இருந்து பாக்டீரியாக்கள் அதிகம் இருக்கும். இறுதி சடங்கிற்கு செல்லும்போது ஆவற்றால் நாம் நோய்வாய்ப்பட வாய்ப்புகள் இருக்கிறது. இது தான் குளிக்க வேண்டும் எனக் கட்டாயமாக கூற காரணம்.

Black Cat
நாய்களுக்கு கருப்பு வெள்ளை தான் தெரியுமா? - நாய்கள் பற்றிய 7 Myths

மாலை நேரத்தில் நகம் வெட்டக் கூடாது

முந்தைய காலங்களில் மின்சாரம் குறைவாகவே கிடைத்தது. அதன் பயன்பாடும் குறைவாகவே இருந்தது. இதனால் மாலை நேரங்களில், சூரியன் மறைந்த பிறகு வெளிச்சம் இருக்காது. நகம் வெட்டி அது வீட்டுக்குள் விழுந்தால் கால்களில் குத்தவோ, குழந்தைகள் அறியாமல் வாயில் போட்டுக்கொள்ளவோ வாய்ப்பிருக்கிறது. இதனால் தான் மாலை நேரங்களில் நகம் வெட்ட நம் வீடுகளில் அனுமதிப்பதில்லை.

தயிருடன் சர்க்கரை சேர்த்து சாப்பிடுவது

நம் வீட்டில் பாட்டிகள் நாம் தேர்வுக்கு செல்லும் முன் கிண்ணத்தில் குளிர்ந்த, கெட்டியான தயிரில் சர்க்கரை சேர்த்து ஊடிவிடுவார்கள். இதற்கு காரணம் தயிர் இயற்கையாகவே குளிர்ச்சியை தரக்கூடியது. இது உடல் சூட்ட தணிக்கும். மேலும் சர்க்கரை நம் உடலில் க்ளுக்கோஸ் அளவை அதிகரிக்கும். இவை இரண்டும் நாள் முழுக்க நாம் சோர்வடையாமல் இருக்க உதவும்.

Black Cat
Nail myths : நக பாலிஷை ஃப்ரிட்ஜில் வைத்தால் அதிக நாட்கள் பயன்படுத்தலாமா?

கண்ணாடி உடைவது கெட்ட சகுனம்

முந்தைய காலத்தில் கண்ணாடி மிகவும் விலையுயர்ந்த பொருளாக இருந்தது. இதனால் இவற்றை உடைத்தால் மீண்டும் வாங்குவது கடினம். மேலும், கண்ணாடி துகள்கள் கால்களில் குத்தி காயம் ஏற்படும் வாய்ப்பும் உள்ளதால் தான் கண்ணாடியை உடைப்பது கெட்ட சகுனமாக கருதப்பட்டது.

கண்கள் துடிப்பது கெட்டது

இதற்கு பல்வேறு கலாச்சரங்களில் வெவ்வேறு காரணங்கள் சொல்லப்பட்டாலும், அறிவியலின் படி, கண்கள் உலர்ந்து போனாலோ, நாம் அதிக மன அழுத்தத்தில் இருந்தாலோ தான் கண் துடிக்கும்.

பூனை குறுக்க நடந்து செல்வது அபசகுனம்

பண்டைய காலங்களில், மக்கள் மாட்டு வண்டிகள் அல்லது குதிரை வண்டிகளில் நீண்ட தூரம் பயணம் செய்தனர். விலங்குகள் பெரிய பூனைகளையும் அவற்றின் ஒளிரும் கண்களையும் சாலையில் பார்க்கும் போது, அவை பீதியடைந்தன. அதனால் ஒரு பூனை சாலையைக் கடந்ததும் வண்டி ஓட்டுநர்கள் வண்டி விலங்குகளைத் தண்ணீர் அல்லது உணவு ஏதாவது கொடுத்து உபசரித்து, தங்கள் பயணத்தை மீண்டும் தொடங்குவதற்கு முன்பு அமைதிப்படுத்துவது வழக்கம்.

Black Cat
அழுகை சடங்கு முதல் எச்சில் துப்புவது வரை - உலகின் வித்தியாசமான திருமண கலாச்சாரங்கள்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com