"அமைதியான வாழ்க்கை எனக்கானதல்ல" - 100 வயதிலும் வேலைக்கு செல்லும் முதியவர்

அங்கு நடந்த ஒரு விமான விபத்தில் உயிர் தப்பிய டேவிட், தனது 100 வது பிறந்தநாளை நெருங்கும்போது கூட, ஓய்வெடுக்கும் எண்ணம் தனக்கு இல்லை என்றும், அமைதியான வாழ்க்கை அவருக்கானது அல்ல என்றும் கூறுகிறார்.
David Flucker
David FluckerFacebook
Published on

டேவிட் ஃப்ளக்கர் என்ற முதியவர், தான் 100 வயதை எட்டிய பிறகும், வாரத்தில் மூன்று நாட்கள் வேலைக்கு செல்கிறார். ஓய்வெடுக்க மறுக்கும் டேவிட்டின் கதையை, அவர் பணிபுரியும் இடத்தில் இருக்கும் சக ஊழியர்கள் ஃபேஸ்புக்கில் பகிர, இணையத்தை கலக்கி வருகிறார் டேவிட்.

டேவிட்
டேவிட்Facebook

ஓஷன் டெர்மினல் ஷாப்பிங் சென்டரில் உள்ள St Columba's Hospice Care Shopல் தான் டேவிட் பணியாற்றுகிறார். ஜூன் 22 அன்று தன் 100வது பிறந்த நாளை கொண்டாடிய டேவிட்டிற்கு, அவரது வாழ்க்கையை கதையாக கூறும் வண்ணம் ஒரு Window Display வடிவமைக்கப்பட்டுள்ளது. இதை அவரது சக ஊழியர்கள், அவரின் 100வது பிறந்தநாள் பரிசாக செய்துள்ளனர்.

டேவிட் அங்கு கடைக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு நன்கு தெரிந்த முகம் என்றும், எப்போதும் தன்னை ஏதாவது ஒரு வேலையில் ஈடுபடுத்திக்கொண்டிருப்பார் என்றும் அவர்கள் கூறுகின்றனர். மேலும் இவர் மாடல் ரயில்பெட்டிகள், மாடல் கப்பல்கள் செய்வதிலும் வல்லமை பெற்றவராம்.

Model Ships
Model ShipsPexels

நியூஹாவனில் பிறந்த டேவிட் ஆஸ்திரலியா மற்றும் தென்னாப்பிரிக்கா போன்ற நாடுகளில் வாழ்ந்தவர். இரண்டாம் உலகபோரின் போது வட ஆப்பிரிக்காவில் RAF உடன் இவரும் இருந்துள்ளார்.

அங்கு நடந்த ஒரு விமான விபத்தில் உயிர் தப்பிய டேவிட், தனது 100 வது பிறந்தநாளை நெருங்கும்போது கூட, ஓய்வெடுக்கும் எண்ணம் தனக்கு இல்லை என்றும், அமைதியான வாழ்க்கை அவருக்கானது அல்ல என்றும் கூறுகிறார்.

RAF- North Africa
RAF- North AfricaTwitter

சில நட்களுக்கு முன் ஃபேஸ்புக்கில் பகிரப்பட்ட டேவின் 100வது பிறந்தநாள் புகைப்படத்திற்கு இணையதளத்தில் செம ரெஸ்பான்ஸ். அவரது பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்த பயனர்கள்.

பலரும் இவரது கதை அவர்களுக்கு ஒரு ஊக்கமாக இருக்கிறது என்றும், அவரை நிச்சயம் நேரில் வந்து சந்திப்பதாகவும் பதிவிட்டிருந்தனர்.

David Flucker
83 வயதில் சோலோ ட்ரிப்: பசிபிக் கடலில் தனியாக பயணித்த ஜப்பான் முதியவர்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com