தோப்புக்கரணம் போட்டால் பேருந்தில் இலவசமாக பயணிக்கலாம் - எங்கே?

அந்த இயந்திரத்தின் திரையில் ஸ்குவாட்டின் எண்ணிக்கை தோன்றுகிறது. 20ஐ அடைந்த பின்னர் டிக்கெட் வருகிறது. ஒரு பெண் அந்த இயந்திரத்தின் முன் சென்று தோப்புக்கரணம் போட்டு டிக்கெட்டை பெறும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
தோப்புக்கரணம் போட்டால் பேருந்தில் இலவசமாக பயணிக்கலாம்
தோப்புக்கரணம் போட்டால் பேருந்தில் இலவசமாக பயணிக்கலாம்Twitter
Published on

20 தோப்புக்கரணம் போட்டால் பேருந்தில் இலவசமாக பயணிக்கலாம் என்று பலே அறிவிப்பு விடுத்துள்ளது ரோமானியா நகரம்.

அதிகரித்து வரும் வாகன பயன்பாட்டைக் குறைக்க புதிய முறையை கையாண்டுள்ளது ரோமானியா. மக்களின் உடலநலம் மற்றும் ஃபிட்னஸ்ஸை கருத்தில் கொண்டு, 20 முறை தோப்புக்கரணம் போட்டால் அந்த நபர் இலவசமாக பேருந்தில் பயணிக்கலாம் என அறிவித்துள்ளது.

ரோமானியாவின் க்ளூஜ் நபோகா என்ற இடத்தில் நவீன இயந்திரம் ஒன்று வைக்கப்பட்டுள்ளது. இந்த இயந்திரத்தின் முன் நின்று ஒரு நபர் 20 தோப்புக்கரணம் போடவேண்டும். அப்படி செய்தால் அதிலிருந்து பஸ் டிக்கெட் ஒன்று வெளிவரும்.

அந்த இயந்திரத்தின் திரையில் ஸ்குவாட்டின் எண்ணிக்கை தோன்றுகிறது. 20 முறை தோப்புக்கரணம் போட்ட பின்னர் டிக்கெட் வருகிறது. அந்த டிக்கெட்டை பயன்படுத்தி மக்கள் பேருந்தில் பயணிக்கலாம்

3 Seas Europeன் அறிக்கையின்படி, இந்த இயந்திரத்தின் பெயர் கியோஸ்க். இதில் ஒரு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. அதில் தோப்புக்கரணம் போடும் நபர் கண்காணிக்கப்படுகிறார்.

கொடுக்கப்பட்ட சவாலை அந்த நபர் செய்து முடித்தால் டிக்கெட்டை பெற்று இலவசமாக பேருந்தில் பயணிக்கலாம். இந்த இயந்திரம் வைக்கப்பட்டுள்ள இடத்திற்கு அருகிலேயே பேருந்து நிறுத்தமும் இருக்கிறது.

தோப்புக்கரணம் போட்டால் பேருந்தில் இலவசமாக பயணிக்கலாம்
பண பரிவர்த்தனை செய்ய பலே ஐடியா! Barcode ஐ கையில் பச்சை குத்திய இளைஞர் | Video

இந்த ஸ்கீம் வருடம் முழுவதும் அமலில் இருக்காது. 2020ல் யூரோப்பியன் ஸ்போர்ட்ஸ் வீக்குடன் இணைந்து முதன்முறையாக அமல்படுத்தப்பட்ட இந்த நடவடிக்கை, ஆகஸ்ட் மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை பயன்பாட்டில் இருந்தது.

அதன் பிறகு ஆண்டுதோறும் இந்த முறை குறிப்பிட்ட மாதங்களுக்கு பயன்பாட்டில் இருக்கிறது. இலவச பேருந்து பயணச்சீட்டை பெறுவதற்காக ஒரு பெண் தோப்புக்கரணம் போடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்த வீடியோ வெளியானதிலிருந்து சுமார் 1 லட்சம் லைக்குகளை பெற்றுள்ளது. பலரும் இந்த வித்தியாசமான ஐடியாவை பாராட்டியும் வருகின்றனர்.

தோப்புக்கரணம் போட்டால் பேருந்தில் இலவசமாக பயணிக்கலாம்
எலியை பிடித்துக் கொடுத்தால் ரூ. 1 கோடி சம்பளம்; பலே ஜாப் ஆஃபரை அறிவித்த மேயர் - எங்கே?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com