பழமையான மீனின் இதயம் முதல் டைனோசர் முட்டை வரை : 2022-ன் விநோதமான கண்டுபிடிப்புகள்

பூமியில் பல ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மனிதர்கள் மற்றும் விலங்குகள் குறித்த தடயங்கள் நம்மை வியப்பில் ஆழ்த்தும். அதனை ஆராய்ச்சியாளர்கள் கண்பிடித்து வருகின்றனர்.
டைனோசர்
டைனோசர்NewsSense

நம்மை சுற்றி பல ஆச்சரியங்களும், அதிசயங்களும் நிகழ்ந்துக் கொண்டே தான் இருக்கிறது.

குறிப்பாக பூமியில் பல ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மனிதர்கள் மற்றும் விலங்குகள் குறித்த தடயங்கள் நம்மை வியப்பில் ஆழ்த்தும். அதனை ஆராய்ச்சியாளர்கள் கண்பிடித்து வருகின்றனர்.

அந்த வகையில் இந்த 2022 பூமியில் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்ட சில வித்தியாசமான நம்ப முடியாத விஷயங்களை பற்றி தற்போது காணலாம்.

டைனோசர் முட்டை

பூமியில் மனித இனம் தோன்றும் முன்பாக இந்த பூமியினை ஆட்சி செய்தவை டைனோசர்கள்.

இவை பூமியில் கிட்டதிட்ட 231 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்திருக்கலாம் என்றும் பூமியை நோக்கி வந்த பெரிய எரிகற்கள் தாக்குதல்கள் மூலமாக இந்த இனங்கள் அழிந்திருக்கலாம் எனவும் கூறப்படுகின்றது.

டைனோசர் இனம் அழிந்தாலும் அவற்றின் எச்சங்கள் இன்றும் சில பகுதிகளில் கிடைக்கின்றது. அந்த வகையில் இந்த ஆண்டு மத்திய பிரதேச மாநிலத்தில் கண்டறியப்பட்ட வித்தியாசமான டைனோசர் முட்டை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

டைனோசர்
டைனோசர் அழிவு : புதிய சிறுகோள் விழுந்த தடம் கண்டுபிடிப்பு - குழப்பத்தில் விஞ்ஞானிகள்?

டெல்லி பல்கலைகழகத்தை சேர்ந்த ஆரய்ச்சியளர்கள் மத்திய பிரதேசத்தில் உள்ள டைனோசர் தேசிய பூங்காவில் ஆராய்ச்சியில் ஈடுபட்டனர்.

அப்போது டைனோசர் வகையில் தாவரவகையான டைட்டானோசொரஸ் என்ற டைனோசரின் முட்டைகளை கண்டுபிடித்து நடத்திய ஆராய்ச்சியில் டைனோசர் முட்டைகளில் 52 கூடுகள் இருப்பது தெரியவந்துள்ளது.மேலும் ஒரு கூட்டில் 10 முட்டைகள் இருப்பதும் தெரியவந்துள்ளது.

இதன் மூலமாக டைனோசர்களின் இனப்பெருக்கம் மற்றும் அவற்றின் வாழ்க்கை குறித்து புதிய பகுதியை கண்டுபிடித்துள்ளனர். டைனோசர்களின் வாழ்க்கை குறித்த புதிய அத்தியாயத்தை இந்த ஆராய்ச்சி திறக்கும் என கூறப்படுகின்றது.

பழமையான மம்மூத் குட்டி ( யானை )

டைனோசர்களை போலவே யானை இனங்களில் மிகவும் பழமையானது மம்மூத். ஐஸ் ஏஜ் படத்தில் வரும் மம்முத்தினை யாராலும் மறக்க முடியாது.

கனடாவின் யூகோன் பகுதியில் தங்க சுரங்க தொழிலாளர்கள் குழியினை தோண்டும் போது ஒரு அரிய வகை குட்டி மம்மூத்தின் உடலை கண்டுபிடித்துள்ளனர்.

ஒரு வயதுடைய இந்த பெண் மம்முத் சுமார் 35,000 ஆண்டுகளுக்கு முன்பு இறந்ததாக கூறப்படுகின்றது.

உலகிலேயே பழமையான இதயம்
உலகிலேயே பழமையான இதயம்Twitter

உலகின் பழமையான மீன்

ஆஸ்திரேலியாவில் உலகின் பழமையான மீனின் இதயத்தை கண்டுபிடித்துள்ளனர்.

380 ஆண்டுகள் பழமையான மீனின் இதயத்தை ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ந்த போது சில வித்தியாசமான உடல் அமைப்பை கண்டுள்ளனர்.

இங்கு க்ளிக் செய்து விரிவாக படிக்கலாம்:

உலகிலேயே பழமையான இதயம் கண்டுபிடிப்பு - மனித பரிணாம ஆராய்ச்சியில் புதிய திருப்பம்

dinosaur
dinosaurTwitter

மிகப்பெரிய டைனோசரின் எலும்புகள்

போர்ச்சுகல் நாட்டில் வசிக்கும் ஒரு நபரின் வீட்டின் பின் பகுதியில் ராட்சத டைனோசரின் எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்டது. இதன் நீளம் சுமார் 82 அடி நீளம் எனக் கூறப்படுகின்றது.

இந்த ஆய்வில் தற்போது பெரிய டைனோசர் ஒன்றின் மார்பு மற்றும் முதுகு பகுதி எலும்புகள் கிடைத்துள்ளன. இது சுமார் 150 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்திருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

மேலும் இதுதான் இது ஐரோப்பாவில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட மிகப்பெரிய டைனோசர் எனவும் கூறுகின்றனர்.

31,000 ஆண்டுகளுக்கு முன்பே அறுவை சிகிச்சை

அறுவை சிகிச்சை என்பது இந்த நூற்றாண்டில்தான் அதிகமாக உள்ளது என நாம் நினைத்துக்கொண்டிருக்கிறோம். ஆனால் இந்தோனேசியாவில் சுமார் 31,000 ஆண்டுகளுக்கு முன்பே அறுவை சிகிச்சை செய்த மனிதனின் எலும்பு கூட்டினை கண்டுபிடித்துள்ளனர்.

இந்தோனேசியாவின் போர்னியோவில் உள்ள குகை பகுதியில் எலும்பு கூடு கண்டுபிடிக்கபட்டது. அதனை ஆராய்ச்சி செய்யும் போது சுமார் 31, 000 ஆண்டுகளுக்கு முன்பே அறுவைசிக்கிச்சை செய்யப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

இன்றைய மருத்துவ உலகில் அறுவை சிகிச்சை செய்ய மயக்க மருந்து தேவைப்படும், ஆனால் 31 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எப்படி இந்த அறுவை சிகிச்சை நடந்தது என்பதும் ஆராய்ச்சியாளர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

17 ஆம் நூற்றாண்டின் காட்டேரி

போலாந்து நாட்டில் பைன் கிராமத்தில் உள்ள கல்லறையில் 17 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பெண்ணின் எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனை காட்டேரி என்று அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

அவர்கள் கூறுவது போல அந்த கல்லறையில், அந்த பெண் உயிர்த்தெழுவதை தடுக்கும் விதமாக கழுத்தின் குறுக்கே அரிவாள் மற்றும் கால்விரலில் ஒரு பூட்டும் போடப்பட்டு அடக்கம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த பழக்கம் அப்போது இருந்த மக்களிடம் மரபாக இருந்திருக்கலாம் எனவும் கூறப்படுகின்றது.

டைனோசர்
வளிமண்டலத்தில் கார்பன் டை ஆக்ஸைட் கண்டுபிடிப்பு : ஆராய்ச்சியாளர்கள் கூறுவது என்ன?

இந்த நிகழ்வுகள் தான் இந்த 2022 ஆண்டில் ஆச்சரியப்டுத்திய விநோதமான ஆராய்ச்சிகள் பற்றிய சில முக்கியமான செய்திகளாகும்.

பிறக்கும் போதே விடுமுறையுடன் பிறக்கும் 2023 என்ன மாதிரியான சம்பவங்களை செய்ய உள்ளது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

டைனோசர்
உயிர்வாழ தகுதியான மண்டலத்தில் Super-Earth கண்டுபிடிப்பு - விண்வெளி ஆராய்ச்சியின் அடுத்தபடி

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com