உலகப்போரில் இருந்து தப்பிக்க உருவாக்கப்பட்ட போலி பாரிஸ்? வரலாற்றின் 4 விசித்திர சம்பவங்கள்

இப்படியும் நடந்திருக்குமா என்பது போல கொஞ்சம் வித்தியாசமானதாக நடந்திருக்கும். அவற்றில் சிலவற்றை இங்கு தொகுத்துள்ளோம். வரலாற்றை திருப்பி பார்க்கலாம் வாருங்கள்!
உலகப்போரில் இருந்து தப்பிக்க உருவாக்கப்பட்ட போலி பாரிஸ்? வரலாற்றின் 4 விசித்திர சம்பவங்கள்
உலகப்போரில் இருந்து தப்பிக்க உருவாக்கப்பட்ட போலி பாரிஸ்? வரலாற்றின் 4 விசித்திர சம்பவங்கள்canva
Published on

வரலாற்றில் பல அரிய சம்பவங்கள் நடந்திருக்கின்றன. ஒரு சில விஷயங்கள் இப்படியும் நடந்திருக்குமா என்பது போல கொஞ்சம் வித்தியாசமானதாக நடந்திருக்கும்.

அவற்றில் சிலவற்றை இங்கு தொகுத்துள்ளோம். வரலாற்றை திருப்பி பார்க்கலாம் வாருங்கள்!

போலி பாரிஸ்

முதலாம் உலகப்போர் நடந்த போது, போலி பாரிஸ் ஒன்று உருவாக்கப்பட்டது.

ஜெர்மானிய விமானம் ஒரு முறை முதலாம் உலகப்போரின் போது பாரிஸை தாக்கியது. குழந்தைகள், பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியானது.

பொறியாளரான ஃபெர்னாண்ட் ஜக்கோபோசி என்பவர் அரசின் உதவியுடன் 1917ல் ஒரு போலியான பாரிஸ் நகரை உருவாக்கினார். முக்கிய அடையாளங்களான ஈஃபிள் டவர், பாலங்கள் ஆகியவை உருவாக்கப்பட்டன. இந்த நகரம் பாரிஸுக்கு வெளியே கட்டப்பட்டது

இந்த போலி பாரிஸை எதிரி நாட்டவர்கள் தாக்க இலக்காக மாற்றினர். இந்த அரசியல் ரகசியத்தை 1920ல் தான் பிரிட்டிஷ் பத்திரிகை கண்டறிந்து உலகுக்கு சொன்னது.

கடவுளாக போற்றப்பட்ட வான்கோழிகள்

மேலை நாடுகளில் thanksgiving எனப்படும் சடங்கு ஒன்று கொண்டாடப்படும். இந்த நிகழ்வில் குடும்பத்தினர் நண்பர்கள் சூழ விருந்து சமைத்து சாப்பிடுவார்கள். இதில் முக்கிய ஐட்டமே வான்கோழி தான்.

ஆனால் இந்த வான்கோழி ஒரு காலத்தில் கடவுளாக போற்றப்பட்டது என்பதை அறிவீர்களா?

மாயா கலாச்சாரத்தில் இந்த வான்கோழிகள் வலிமை, மரியாதை, அந்தஸ்த்து ஆகியவற்றின் சின்னமாக பார்க்கப்பட்டது. இவர்கள் வான்கோழியை வணங்கினர்.

குதிரைக்கு அரச பதவி

கலிகுலா என்றும் அழைக்கப்பட்ட ரோமானியப் பேரரசர் கயஸ், தனது வித்தியாசமான நடவடிக்கைகளுக்காக அறியப்படுகிறார். இவரை சிலர் பைத்தியக்கார அரசர் என்று கூட சாடியதுண்டு.

ஒரு வன்முறையாளராகவும் பார்கப்பட்ட இந்த கயஸ் மன்னர் தான் 'கொல்லப்பட்ட' முதல் ரோமானிய பேரரசர்.

மன்னர் கயஸுக்கு அவரது குதிரை இன்சிடேடஸ் ஒரு நம்பகமான துணையாக இருந்தது. அதனை கௌரவிக்க நினைத்தார் கயஸ்.

தனது குதிரையை தூதராகவும், ரோமானிய குடியரசில் தேர்ந்தெடுக்கப்பட்ட மிக உயர்ந்த அரசாங்க அதிகாரியாகவும் மாற்ற திட்டமிட்டார். ஆனால் அதற்கு முன்னரே அவர் மரணித்துவிட்டார்

உலகப்போரில் இருந்து தப்பிக்க உருவாக்கப்பட்ட போலி பாரிஸ்? வரலாற்றின் 4 விசித்திர சம்பவங்கள்
உலகின் மிக சிறிய போர்: 38 நிமிடத்தில் நூற்றுக்கணக்கான உயிரிழப்பு - ஒரு விசித்திர வரலாறு!

மிகச் சிறிய போர்

உலகில் பலருக்கும் தெரியாத ஆங்கிலோ-சன்சிபர் போர்தான் வரலாற்றிலேயே மிகச் சிறியப் போர் என்று கருதப்படுகிறது. இந்த போர் மொத்தமே 38 நிமிடங்கள் தான் நடைபெற்றது.

1896 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 27 ஆம் தேதி யுனைடெட் கிங்டமும் சான்சிபார் சுல்தானகமும் ஒரு சுருக்கமான இராணுவப் போரில் ஈடுபட்டன.

இந்த போர் நடைபெறுவதற்கு இரு தினங்களுக்கு முன்னர் தான் பிரிட்டிஷ் சார்பு சுல்தானான ஹமத் பின் துவைனி இறந்தார். இதுவே ஆங்கிலோ-சான்சிபார் போருக்கு உடனடி காரணமாகும். அவருக்குப் பிறகு சுல்தான் காலித் பின் பர்காஷ் பதவியேற்றார்.

உலகப்போரில் இருந்து தப்பிக்க உருவாக்கப்பட்ட போலி பாரிஸ்? வரலாற்றின் 4 விசித்திர சம்பவங்கள்
வரலாற்றில் இன்று : உலக சுற்றுச்சூழல் தினம் - இந்த நாளில் என்ன நடந்தது?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com